ETV Bharat / state

“பெண் விடுதலை பேசும் தமிழ்நாட்டில், பெண்கள் பாதுகாப்புக்கு கேள்விக்குறி?” - தவெக விஜய்! - VIJAY ABOUT WOMEN SAFETY

பெண் விடுதலை பேசும் தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது துயரம் எனவும், அரசு தனி இணையதளத்தை உருவாக்கிப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமெனவும் தவெக தலைவர் தெரிவித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 25, 2024, 11:38 AM IST

சென்னை: பெண் விடுதலை பேசும் தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது துயரம் எனவும், நீதிமன்ற உத்தரவின் படி அரசு தனி இணையதளத்தை உருவாக்கிப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமெனவும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தெரிவித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சர்வதேச அளவில் பெண்களின் முன்னேற்றம், முன்பைவிட நம்பிக்கை அளிப்பதாக இருந்தாலும், அவர்களுக்கான பாதுகாப்பு இன்றும் கேள்விக்கு உரியதாகவே இருக்கிறது. பெண் விடுதலை பேசும் தமிழ்நாட்டில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் நாள்தோறும் நிகழ்வதாக வரும் செய்திகள் துயரம் அளிக்கின்றன.

பெண்கள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத் தடுக்க, நீதித் துறையின் துணையோடு ஆட்சியாளர்கள் இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு, அரசு தனி இணையத்தளத்தை உருவாக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு யோசனை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: 'திராவிட மாடல் ஆட்சியின் லட்சணம் அமெரிக்கா வரை சென்று சந்தி சிரிக்கிறது' - சீமான் விளாசல்!

இதற்கு மதிப்பளித்து, தமிழக அரசு தனி இணையத்தளத்தை உருவாக்கி, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினத்தில் வலியுறுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப்
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.