தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், முந்திரித்தோட்டத்தைச் சேர்ந்தவர் ஜெயசங்கர். பாஜக நிர்வாகியான இவர், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதே ஊரைச் சேர்ந்த மாற்றுக் கட்சி நண்பர்களிடம் பாஜக தலைவர் அண்ணாமலை கோவை தொகுதியில் வெற்றி பெறவில்லை என்றால், பரமன்குறிச்சி பஜாரில் மொட்டை போட்டு ரவுண்டானாவைச் சுற்றி வருவதாக சவால் விடுத்ததாக கூறப்படுகிறது.
அண்ணாமலை தோற்றதால் மொட்டை போட்ட நபருக்கு வனத்துறையால் வந்த சோதனை.. என்ன தெரியுமா?
Published : Jun 8, 2024, 5:35 PM IST
ஆனால், தேர்தல் முடிவில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை கோவையில் தோல்வியடைந்தார். எனவே, மே 5ஆம் தேதி ஜெயசங்கர் பரமன்குறிச்சி பஜாரில் அமர்ந்து மொட்டையடித்து பின்னர் ரவுண்டானாவைச் சுற்றி வந்தார். இச்சம்பவம் அனைத்து சமூக வலைத்தளங்களிலும் பரவியது.
ஜெய்சங்கர் அந்த வீடியோ பதிவின் போது கழுத்தில் பெரிய அளவிலான தங்கச் சங்கிலி போட்டிருந்தார். அதில் புலியின் நகம் போன்ற பொருள் பொருத்தப்பட்டிருந்தது. எனவே, இது தொடர்பாக வனத்துறையினர் நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டதில், அது போலி என தெரிய வந்துள்ளது.