ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் (பொறுப்பு) தபேந்திரன், அரக்கோணம் அடுத்த வேடல் காந்தி நகரில் விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக அமைப்பதற்கு நிலத்தை பார்வையிடுதற்காக லஞ்சம் கேட்பதாக வேலூர் மாவட்ட துணை ஆய்வுக்குழு அலுவலர் பூமாவுக்கு புகார் சென்றது. இதனையடுத்து, ராணிப்பேட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி கணேசன் தலைமையிலான போலீசார், அரக்கோணம் அடுத்த வேடல் காந்திநகரில் திடீர் சோதனை நடத்தினர்.
பிடிபட்ட லஞ்சம்.. நெஞ்சுவலி என அழுத வேளாண் இயக்குனர்.. ராணிப்பேட்டையில் நடந்தது என்ன?
Published : Jul 6, 2024, 9:53 PM IST
அப்போது, அங்கு நின்றிருந்த தபேந்திரனின் உடைகள் மற்றும் அவர் வைத்திருந்த பையில் ரூ.1 லட்சத்து 26 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். அப்போது, தபேந்திரன் தனக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறி கதறி அழுதார். எனவே, தபேந்திரனுக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனையின் முதலுதவி சிகிச்சை அளித்தனர். மேலும், தபேந்திரன் உடன் இருந்த உதவியாளர்கள் இரண்டு பேரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.