சென்னை: பட்டாபிராம் டைடல் பார்க் திறக்கப்பட்டது குறித்து தமது எக்ஸ் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2000ம் ஆண்டில் முதலமைச்சராக இருந்த கருணாநிதி திறந்து வைத்த ஓஎம்ஆர் டைடல் பூங்காவால், தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டதாகவும், தற்போது ஆவடியில் அமைந்திருக்கும் 21 மாடி டைடல் பூங்கா நகரின் வடக்கு பகுதியில் வளர்ச்சியை ஏற்படுத்தும் என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் 2 மற்றும் 3ம் நிலை நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள நியோ டைல் பூங்காக்களுடன் இது போன்ற புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான திராவிட மாடல் அரசின் தொலைநோக்குப்பார்வையை காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
In 2000, Thalaivar Kalaignar laid the foundation for Tamil Nadu's IT revolution by inaugurating the first TIDEL Park in Chennai.
— M.K.Stalin (@mkstalin) November 22, 2024
Today, I proudly inaugurated a towering 21-storey TIDEL Park at Avadi (Pattabiram), creating opportunities for 6,000 professionals and boosting growth… pic.twitter.com/gtn5tkZTJf
மொத்தம் 5.57 லட்சம் சதுரஅடி பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த டைடல் பார்க் , 6,000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையிலும், சென்னை ராஜீவ் காந்தி சாலை மற்றும் கோயம்புத்தூரை அடுத்த 3 வது பெரிய டைடல் பூங்காவாகும். பார்க்கிங் வசதி, 100 சதவீத முழு நேர மின்சாரம், உணவகங்கள், கருத்தரங்கு கூடம், உடற்பயிற்சி மையம் போன்றவை இந்த டைடல் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளன.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.