ETV Bharat / state

நவம்பரில் சம்பவம் இருக்கு.. 26ம் தேதி முதல் தீவிரமாகும் கனமழை.. புயலை கிளப்பும் வெதர்மேன்! - CHENNAI NOVEMBER RAIN

வட தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நவம்பர் 26 ஆம் தேதி முதல் தீவிர மழை பொழிவு இருக்க அதிக வாய்ப்புள்ளதாக டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மழை குறித்து டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன்
மழை குறித்து டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 22, 2024, 12:17 PM IST

சென்னை: ராமநாதபுரம் மாவட்டத்தின் ராமேஸ்வரம் உள்ளிட்ட கடலோரப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் மீனவ கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேக வெடிப்பு காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 40 சென்டி மீட்டருக்கும் அதிகமாக வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்துள்ளது.

குறிப்பிட்ட நேரத்தில் அதிக அளவு மழை பெய்ததால் அப்பகுதி மக்கள் செய்வது அறியாமல் திகைத்து உள்ளனர். இந்நிலையில், ராமநாதபுரத்தில் பெய்த அதீத மழை குறித்தும் மேக வெடிப்பு குறித்தும் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் ஈடிவி பாரத் செய்தி ஊடகத்திடம் அடுத்து வரும் மழை குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார்.

ராமேஸ்வர மழை பொழிவு

டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் கூறியதாவது; இந்திய பெருங்கடல் பகுதிக்கு கடல் சார்ந்த அலைவுகளின் தாக்கம் வர தொடங்கியுள்ளது. ஈரப்பதம் மிகுந்த காற்று குவிகள் தென் தமிழகத்தில் நிகழ்ந்தது காரணமாக, டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களில் கனமழை பதிவாகி வருகிறது. குறிப்பாக ராமேஸ்வரம் பகுதி பொருத்தவரை நேற்று முன்தினம் மேக வெடிப்பு முற்பகல்11 மணி முதல் 4 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் நடைபெற்றது. ஈரப்பதம் மிகுந்த கிழக்கு காற்றும் வறண்ட வடகிழக்கு காற்றும் இரு வேறு காற்று குவிகளும் ராமேஸ்வரம் கடல் பகுதியில் நிகழ்ந்து, மூன்று பக்கமும் கடல் சூழ்ந்து இருப்பதால் குறைந்த நேரத்தில் அடர்மேக குவிகள் அடுத்தடுத்து ஏற்பட்டு பெரும் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: எலி மருந்து மரணம்: குழந்தைகளின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்!

அதிக மழைப்பொழிவுக்கான வாய்ப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தை பொருத்தவரைக்கும் கடலோர பகுதிகளில் தாக்கம் அதிகமாக இருந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தின் உட்புற பகுதிகளில் மழையின் தாக்கம் சற்று குறைவாக உள்ளது. வரக்கூடிய நாட்களில் ராமேஸ்வரம் மாவட்டத்தில் கடலோர பகுதிகளில் அதிக கன மழை நிகழ வாய்ப்பிருக்கிறது. உட்புற பகுதிகளுக்கு பாதிப்பு பெருமளவு இருக்காது. எனவே பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. வரக்கூடிய காலத்தில் தமிழகத்தில் கடலோரப் பகுதிகளில் அதிக மழைப்பொழிவுக்கான வாய்ப்புகள் இருக்கிறது.

நவம்பர் இறுதி வாரத்தில் 26,27,28 ஆகிய தேதிகளில் இது போன்ற மழைப்பொழிவு எதிர்பார்க்கலாம். தற்போது தாழ்வு பகுதிகள் உருவாவதற்கான சூழல் இருக்கிறது. இது தாழ்வு மண்டலமாக மாறுவதற்கான சூழலும் இருக்கிறது. சலனத்தில் நகர்வை பொருத்து கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் அதீத மழை எதிர்பார்க்கலாம்.

நவம்பர் இறுதி வரை கன மழை

சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் 26 ஆம் தேதி காலையில் முதலே மழையை எதிர்பார்க்கலாம். அதற்கு முன்னதாகவே நவம்பர் 23, 24 தேதிகளில் மிதமானது முதல் சற்று கனமழை ஒரு சில இடங்களில் பெய்யும். 26 ஆம் தேதி காலை முதல் மழை படிப்படியாக உயர்ந்து இந்த மாதம் இறுதி வரை கன மழை பெய்யும். நவம்பர் 23ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய தொடங்கும். 26 ஆம் தேதி முதல் தீவிரமடைந்து மழை பொழிவை கொடுக்கும். கடல் சார்ந்த அலைவுகள் சாதகமாக இருக்கிறது, கடல் வெப்பநிலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் விளைவாக கடலோரத்தை ஒட்டி வரும்போது புயலாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. புயலாக மாறுமா என்பதை தொடர்ந்து கவனிக்க வேண்டும்.

அடுத்த 48 மணி நேரத்தில் தாழ்வு பகுதி உருவாகும், அதன் பிறகு எவ்வளவு தீவிரம் என்பதை நாம் உறுதி செய்யலாம். 23ஆம் தேதி கடலோர தமிழகத்தில் மழை தொடங்கி, 26 ஆம் தேதி வட தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை தொடரும். 26,27,28 ஆகிய மூன்று நாட்களில் வட கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மழை தீவிரமடையும்... மற்ற மாவட்டங்களில் மழை குறைந்து காணப்படும். தாழ்வு பகுதி (சலனம்) கரையை கடந்த பின்பு நவம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் ஒட்டுமொத்த தமிழகத்திலும் மழை எதிர்பார்க்கலாம் என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.