கோயம்புத்தூர்: கேரள மாநிலம், திருச்சூர் பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஏடிஎம்களில் ரூ.65 லட்சம் பணத்தை கொள்ளையடித்துவிட்டு கண்டெய்னர் லாரி மூலம் தப்பிச் செல்ல முயன்ற ஹரியானாவைச் சேர்ந்த 7 பேரை நாமக்கல் பகுதியில் தமிழக காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர்.
நாமக்கல் கண்டெய்னர் லாரி விவகாரம்; பிடிபட்டவரின் காலை அகற்ற முடிவு!
Published : Oct 1, 2024, 6:37 AM IST
காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். அசார் அலி என்பவர் காயம் அடைந்த நிலையில், ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மீதமுள்ள 5 பேர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், அசார் அலிக்கு வலது காலில் துப்பாக்கிச் சூட்டினால் ரத்தக்குழாயில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் முட்டிக்கு கீழ் உள்ள பகுதிகளில் ரத்த ஓட்டமானது தடையாகியுள்ளது. இதன் காரணமாக இதர பிரச்சனைகள் ஏற்படக் கூடும் எனவும், எனவே, வலது காலில் முட்டிக்கு கீழ் உள்ள பகுதியை அகற்றுவதற்கு முடிவெடுக்கப்பட்டு, சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா தகவல் தெரிவித்துள்ளார்.