தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சீர்காழியில், இந்து முறைப்படி திருமணம்! - இந்து திருமணம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 20, 2024, 4:56 PM IST

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த சித்தர்புரத்தில் 18 சித்தர்கள் அருள்பாலிக்கும் மிக பிரசித்தி பெற்ற ஒளிலாயம் சித்தர்பீடம் அமைந்துள்ளது. இப்பகுதியை சேர்ந்த ராஜேந்திர சுவாமிகளால் இந்த சித்தர் பீடம் தோற்றுவிக்கப்பட்டது.

இந்த ஒளிலாயம் சித்தர் பீடத்தில் 18 சித்தர்களும் தனி சன்னதி கொண்டு அருள் பாலித்து வருகின்றனர்.மேலும் 18 படிகள் கொண்ட விநாயகர் சன்னதியுடன் கூடிய மகா லிங்கமும் இங்கு அமைந்துள்ளது. இத்தகைய பல்வேறு சிறப்பு மிக்க சித்தர் பீடத்தில் பவுர்ணமி தோறும் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். 

மேலும் இங்கு தமிழகம் மற்றும் இன்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சீனா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து வந்து வழிபாடு நடத்தி செல்வர். 

இத்தகைய பல்வேறு சிறப்புகள் மிக்க காரைமேடு சித்தர்பீடத்தில்,இன்று தைவான் நாட்டை சேர்ந்த யோங் ச்சென் என்ற ஆராய்ச்சியாளரும், ருச்சென் ஆசிரியர் என்ற இருவரும் இன்று இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். முன்னதாக இருவரும் காதலித்து வந்த நிலையில் தைவான் நாட்டில் திருமண செய்து கொண்டனர்.

இருப்பினும் இந்தியாவில் உள்ள கோயில்களில்  இந்து முறைபடி திருமணம் செய்து கொள்ள இருவரும் விரும்பியுள்ளனர். இதனையடுத்து தமிழ்நாடு வந்துள்ள இருவரும் தமிழ் முறைப்படி நாடி செல்வ முத்துக்குமரன், மற்றும் செந்தமிழ் செல்வன், ஆகியோர் ஏற்பாட்டில் ஒளிலாயத்தில் இன்று அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, பாத பூஜை செய்து திருமணம் செய்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details