தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு.. கோவை முத்துமாரியம்மனுக்கு ஒரு லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்! - tamil new year - TAMIL NEW YEAR
Published : Apr 14, 2024, 8:21 PM IST
கோயம்புத்தூர்: தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, கோவையில் உள்ள பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, ஆண்டுதோறும் கோவை அருகே காட்டூர் பகுதியில் உள்ள அம்பிகை முத்துமாரியம்மன் கோயிலில் ரூபாய் நோட்டுகளால் அம்மனை அலங்கரித்து தனலட்சுமி அலங்கார பூஜை செய்யப்படுவது வழக்கம்.
அந்தவகையில், இந்த ஆண்டும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் இருந்து ஒரு லட்சம் மதிப்பில் 100, 200, 500 ரூபாய் நோட்டுக்களைப் பெற்று பண அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஆண்டுதோறும் ரூபாய் நோட்டுக்களில் அலங்காரம் செய்யப்பட்டு வரும் நிலையில், இந்தாண்டு தேர்தல் காரணமாக ஒரு லட்ச ரூபாய் மதிப்பில் மட்டும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
தனலட்சுமி பூஜை வழிபாடுகள் முடிவடைந்த பிறகு, அந்தந்தப் பகுதி பொது மக்களுக்கு அந்த நோட்டுக்கள் பிரசாதமாகத் திருப்பி அளிக்கப்படும். சென்ற ஆண்டு ரூ. 6 கோடியும், வைரம், தங்க நகைகளால் சாமிக்குச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.