தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

"மோடி விலகி மற்றவர்களுக்கு வழிவிட்டிருக்க வேண்டும்" - புதுச்சேரி எம்பி வைத்திலிங்கம்! - Puducherry Vaithilingam

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 8, 2024, 3:03 PM IST

சென்னை: டெல்லியில் நடக்கும் இந்திய தேசிய காங்கிரஸின் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, புதுச்சேரி காங்கிரஸ் எம்பி வைத்திலிங்கம் மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தலைவர் வைத்தியநாதன் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றனர். அதற்கு முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் எம்பி வைத்திலிங்கம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “வரும் காலங்களில் புதுச்சேரியில் தேர்தலை எப்படி சந்திக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை தெரிவிக்க உள்ளோம். இந்திய எதிர்க்கட்சித் தலைவராக ராகுல்காந்தி பதவி ஏற்க வேண்டும் என்று புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் வேண்டுகோளாகவும், தீர்மானமாகவும் உள்ளது. 

மைனாரிட்டி பாஜக அரசின் தலைவராக வர வேண்டும் என மோடி நினைக்கிறார். ஆனால், தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று விலகி, மற்றவர்களுக்கு வழி விட்டு இருக்க வேண்டும். ஆனால், மறுபடியும் தவறை செய்கிறார்கள். இது பாஜகவிற்கு பேரிழப்பாக இருக்கும். மக்கள் மோடியை நிராகரித்து விட்டார்கள். முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், அந்த இடத்திற்கு வர வேண்டும் என மோடி பிடிவாதமாக இருப்பது வேதனையாக இருக்கிறது” என்றார். 

ABOUT THE AUTHOR

...view details