கோவையில் களைக்கட்டிய ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி; பொதுமக்கள் உற்சாகம்! - HAPPY STREET
🎬 Watch Now: Feature Video
Published : Dec 1, 2024, 12:42 PM IST
கோயம்புத்தூர்: கோவை ஆர்.எஸ்.புரம் டிபி சாலையில் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி ஒரு வருடம் கழித்து இன்று (டிச.01) ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக தொடங்கியது. இதில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உற்சாகத்துடன் பங்கேற்றுள்ளனர்.
கோவையில், ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி சுமார் ஒரு வருடம் கழித்து ஆர்.எஸ்.புரம் டிபி சாலையில் காலை சுமார் 6:30 மணிக்கு துவங்கியது. இதனை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் துவக்கி வைத்தனர்.
இதில், பல்வேறு இசை நிகழ்ச்சிகள், குழு நடனங்கள் என ஏராளமான கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இதனை, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் வந்து கண்டு ரசித்தனர்.
இந்நிகழ்வில் 90's கிட்ஸ் விளையாட்டான, சாக்குப் போட்டி, டயர் ஓட்டுதல், குண்டு விளையாடுதல், சாலையில் வளையப்பட்ட, பரமபதம் ஆகியவையும் இடம் பெற்றிருந்தன. நிகழ்ச்சிக்காக இப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு 50க்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
இது குறித்து ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கூறுகையில், “ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி மூலமாக மனநிம்மதி கிடைக்கிறது. வாரந்தோறும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் இதை நடத்தினால் நன்றாக இருக்கும். குழந்தைகளையும் அழைத்து வருவதால் குழந்தைகளும் மகிழ்ச்சியாக உள்ளனர்,” இவ்வாறு தெரிவித்தனர்.