அன்னதானத்திற்காக ரூ.7 1/2 லட்சம் மதிப்பிலான மளிகை பொருட்கள் சபரிமலைக்கு அனுப்பி வைப்பு! - AYYAPPA DEVOTEES
🎬 Watch Now: Feature Video
Published : Nov 29, 2024, 8:30 PM IST
வேலூர் : வேலூர் மாவட்டம், தோட்டப்பாளையத்தில் தர்மராஜா கோயிலிருந்து வட தமிழக சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சார்பில், மண்டல தலைவர் ஜெயசந்திரன் தலைமையில் ரூ. 7 1/2 லட்சம் மதிப்பிலான மளிகை பொருட்கள் வேன் மூலம் எரிமேலி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் ஐயப்ப பக்தர்களுக்கு தொடர்ந்து இலவசமாக உணவளிக்கும் பொறுப்பு இவ்வாண்டு வட தமிழக சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்துக்கு வழங்கப்பட்டுள்ளதால், இன்று தர்மராஜா கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்று, மளிகை பொருட்கள் எரிமேலிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
மேலும் திருப்பத்தூர், குடியாத்தம், கிருஷ்ணகிரி தருமபுரி உள்ளிட்ட பல பகுதிகளில் காய்கறி, அரிசி, உணவுப் பொருட்களும் சபரிமலைக்கு அனுப்பபடுகிறது. சபரிமலைக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் இலவசமாக உணவு வழங்க, வட தமிழக சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜெயசந்திரன் கூறுகையில், "மண்டல, மகர காலங்களில் சபரிமலையை சுற்றி 72 இடங்களில் அன்னதானம் செய்யப்படுகிறது. ஐயப்பனின் கருணையினால், எரிமேலியில் அன்னதானம் செய்யக்கூடிய வாய்ப்பு வட தமிழக சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்துக்கு கிடைத்துள்ளது.
டிச 1ம் தேதி முதல் டிச 15ம் தேதி வரை வேலூர் மண்டல காரியகர்த்தாக்கள் அங்கே இருந்து சேவை செய்ய காத்திருக்கிறார்கள். இன்று தர்மராஜா கோயிலில் பூஜை நடந்து ரூ.7 1/2 லட்சம் மதிப்பிலான மளிகை பொருட்கள் எரிமேலி செல்ல இருக்கிறது. அன்னதானம் சிறப்பாக நடைபெறுவதன் மூலம் ஐயப்பன் எல்லாருடைய வாழ்விலும் அவர் அருள் மழை பெய்ய வேண்டுமென" தெரிவித்தார்.