அண்ணனூர் ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளம்! மின்சார ரயில் சேவை பாதிப்பு - Chennai train track damage issue - CHENNAI TRAIN TRACK DAMAGE ISSUE
Published : Sep 23, 2024, 5:50 PM IST
சென்னை: சென்னை ஆவடியை அடுத்த அண்ணனூர் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தையொட்டி செல்லும் மின் கம்பிகள் சரி செய்யும் பணி நடைபெற்ற வருகிறது. இந்த நிலையில் இன்று திடீரென தண்டவாளத்தையொட்டி ஒரு பள்ளம் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த ரயில்வே ஊழியர்கள் பள்ளத்தை சரி செய்யும் பணியில் ஈடுப்பட்டனர்.
இதன் காரணமாக சுமார் ஒரு மணி நேரமாக ஆவடி - செனட்ரல் மற்றும் செனட்ரல் - ஆவடி நோக்கி செல்லும் மின்சார ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டது . இதையடுத்து மின்சார ரயில்கள் விரைவு ரயில் பாதையில் இயக்கப்பட்டன.
இந்த நிலையில் இரண்டு ரயில்களும் விரைவு ரயில்கள் நிற்கும் நடைமேடை இல்லாமல் பட்டாபிராம், இந்து கல்லூரி, அண்ணனூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நிற்காமல் சென்றது. இதனால் வேலை, பள்ளி, கல்லூரி செல்வோர் கடும் அவதிக்குட்பட்டனர். மேலும் இதனால் பயணிகள் சிறிது நேரம் குள்ளக்கப்பட்ட நிலையில் ரயில்வே ஊழியர்கள் துரிதமாக செயப்பட்டு ரயில் பாதையை சரி செய்தபின்னர் ரயில் சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பியது.