ETV Bharat / sports

என்னா அடி..! குருவின் சாதனையை முறியடித்த அபிஷேக் சர்மா... கதி கலங்கிய இங்கிலாந்து...! - ABHISHEK SHARMA T20

டி20 போட்டிகளில் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் அபிஷேக் சர்மா.

அபிஷேக் சர்மா, யுவராஜ் சிங் (கோப்புப்படம்)
அபிஷேக் சர்மா, யுவராஜ் சிங் (கோப்புப்படம்) (credit - AP, Getty)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 23, 2025, 1:30 PM IST

கொல்கத்தா: இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்துடன் இந்திய அணி 5 போட்டிகளை கொண்ட டி20 விளையாடி வருகிறது.

தொடரின் முதல் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று (ஜன.22) நடந்தது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. சேசிங் நோக்கி களமிறங்கிய இந்திய அணி 12.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து எளிதாக வெற்றி பெற்றது.

அபிஷேக் சர்மா அதிரடி

இந்திய அணியின் இந்த அபார வெற்றிக்கு ஆட்ட நாயகன் அபிஷேக் சர்மா முக்கிய பங்காற்றியதுடன் டி20 போட்டிகளில் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். முன்னதாக 2007 டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய வீரர் யுவராஜ் சிங் தனது அரை சதத்தின் போது ஏழு சிக்ஸர்களை அடித்திருந்தார். அதுவே, முன்னிலையில் இருந்து வந்தது.

அதிக சிக்ஸர்

ஆனால், அபிஷேக் சர்மா நேற்றைய ஆட்டத்தில் வெறும் 34 பந்துகளில் 8 சிக்ஸர்களுடன் 79 ரன்கள் எடுத்துள்ளார். அதிக சிக்ஸர்களை விளாசி தனது வழிகாட்டியான யுவராஜ் சிங்கின் சாதனையை தற்போது அபிஷேக் சர்மா முறியடித்துள்ளார்.

இதையும் படிங்க: இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டியை பார்க்க வருபவர்கள் மெட்ரோவில் இலவசமாக பயணிக்கலாம்!

குறிப்பாக, வெறும் 20 பந்துகளில் அரை சத்தத்தை பதிவு செய்துள்ளார் அபிஷேக் சர்மா. அதே சமயம், 2007 டி20 உலகக் கோப்பையில் வெறும் 12 பந்துகளில் 50 ரன்களை யுவராஜ் சிங் குவித்தார். தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் யுவராஜ் சிங்கிற்கு அடுத்ததாக அதிவேக அரை சதத்தில் அபிஷேக் சர்மா உள்ளார்.

டி20 -ஐ பொறுத்தவரை அபிஷேக் சர்மாவுக்கு ஜிம்பாப்வேக்கு எதிராக ஆடியதே முதல் போட்டியாக இருந்தது. அந்த ஆட்டத்திலேயே சதம் அடித்து அசத்தினார். ஆனால், அடுத்த ஏழு இன்னிங்ஸ்களில் அவரது ஆட்டம் சூடு பிடிக்கவில்லை.

அபிஷேக் சர்மா இதுவரை 13 டி20 போட்டிகளில் விளையாடி 27.91 சராசரி மற்றும் 183.06 ஸ்டிரைக் ரேட்டுடன் 335 ரன்கள் குவித்துள்ளார். இவர் இந்த தொடரில் அடுத்து வரும் போட்டிகளில் சிறப்பாக ஆடி இந்திய அணியில் தனது இருப்பை தக்க வைத்துக்கொள்வார் என்று பார்க்கப்படுகிறது.

மேலும் இங்கிலாந்துக்கு எதிரான இந்த முதல் டி20 போட்டியில், அர்ஷ்தீப் சிங்கின் பந்து வீச்சு எதிரணிக்கு சவாலாக இருந்தது. அர்ஷ்தீப் சிங் 3 ஓவரில் 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டி20 தொடரில் அர்ஷ்தீப் தற்போது 61 இன்னிங்ஸில் விளையாடி 97 விக்கெட்டுகளை வீழ்த்தி யுஸ்வேந்திர சாஹலின் 96 விக்கெட் சாதனையை முறியடித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.