மும்பை: பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர், அவரை கத்தியால் குத்திய சம்பவம் ஹிந்தி திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கத்தியால் குத்தப்பட்டு, ஐந்து நாட்களுக்குப் பிறகு சைஃப் அலி கான் கடந்த செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். உயிருக்குப் போராடிய சூழலில் தன்னை மருத்துவமனைக்கு சரியான நேரத்திற்கு அழைத்து சென்று உதவிய ஆட்டோ ஓட்டுநரை நேரில் சந்தித்து, கட்டி அணைத்து நன்றி தெரிவித்துள்ளார் சைஃப் அலி கான்.
கடந்த வியாழக்கிழமை (ஜன.16) அதிகாலை 2.30 மணியளவில் பாந்த்ராவில் உள்ள சைஃப் அலி கான் வீட்டிற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபரோடு சண்டையிட்டதில் அவர் படுகாயடைந்தார். தொடர்ந்து ஆறு முறை பலமாக கத்தியால் குத்தப்பட்ட சைஃப் அலி கான், இரத்த வெள்ளத்தில் லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சைஃப் அலி கானுக்கு கழுத்து, முதுகு என பல இடங்களில் ஆறு முறை குத்தப்பட்டதில் இரு காயங்கள் மிக ஆழமாக ஏற்பட்டிருந்தது. மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள் அவரது முதுகுத் தண்டில் இருந்து 2.5 அங்குல உடைந்த கத்தியை அகற்றியது குறிப்பிடத்தக்கது. இன்னும் கொஞ்சம் 2 மிமீ ஆழத்தில் கத்தி குத்தப்பட்டிருந்தால், அது பலத்த காயத்தை ஏற்படுத்தியிருக்கும் என மருத்துவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
Mumbai, Maharashtra: Bhajan Singh Rana, the auto driver who took actor Saif Ali Khan to the hospital after he was attacked, met the actor after he was discharged from the hospital yesterday.
— IANS (@ians_india) January 22, 2025
Auto driver Bhajan Singh Rana says, " ...they gave a time of 3:30 pm, i said okay, and i… pic.twitter.com/knmztnk9E4
இந்நிலையில் அறுவை சிகிச்சை முடிந்து ஐந்து நாட்கள் கழித்து கடந்த செவ்வாய்க்கிழமை (ஜன.21) பிற்பகல் மருத்துவமனையில் இருந்து சைஃப் அலி கான் வீடு திரும்பினார். அதற்கு முன்பு, மருத்துவமனைக்கு சரியான நேரத்திற்கு அழைத்துச் சென்று தனது உயிரை காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநர் பஜன் சிங் ராணாவை, மருத்துவமனைக்கு அழைத்து நேரில் நன்றி கூறியுள்ளார் சைஃப் அலி கான்.
சைஃப் அலி கானும் பஜன் சிங் ராணாவும் இருக்கும் ஒளிப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சைஃப் அலி கான் வீட்டில் பல கார்கள் இருந்தாலும் அவர் தாக்குதலுக்கான நெருக்கடியான சூழலில் அவற்றை பயன்படுத்த முடியவில்லை. அவசர சூழலில் உதவிய ஆட்டோ ஓட்டுநர் பஜன் சிங் ராணா, சைஃப் அலிகானை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல எந்தப் பணமும் வாங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பஜன் சிங் ராணா கூறுகையில், “சைஃப் அலிகான் தன்னை விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றதுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது நான் பணம் பற்றி யோசிக்கவில்லை. நான் அவரிடம் அதைப் பற்றி கேட்கவும் இல்லை. ஆனால் அவர் உங்கள் பணம் கவனிக்கப்படும் என கூறினார்.
மேலும் இதுபோல பலருக்கும் உதவுங்கள் என கூறினார். அவருடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டேன். அவரை சந்தித்ததில் மகிழ்ச்சி. அவர் எனக்குக் கொடுத்ததை வாங்கிக் கொண்டேன். அதில் மகிழ்ச்சி. இது பணம் பற்றிய பிரச்சினையில்லை." என்றார்.
Actor Saif Ali Khan meets auto driver Bhajan Singh Rana who took him to hospital after attack#SaifAliKhan #jhopexLouisVuitton #riyadh #bolukartalkaya #LouisVuitton #MasterChefGR #NajwaInfinity pic.twitter.com/FSjx4BWSxu
— Yogendra Sharma (@sharmayogendr89) January 22, 2025
இதையும் படிங்க: குடியரசு தின ஸ்பெஷல்: இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் என்னென்ன?
ஆட்டோ ஓட்டுநரின் உதவியை கவுரவிக்கும் விதமாக அவருக்கு ரூ.50,000 பணத்தை கொடுத்துள்ளார் என கூறப்படுகிறது. மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினாலும் சைஃப் அலி கான் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் மும்பையின் பாந்த்ரா பகுதியில் அமைந்திருக்கும் அவரது குடியிருப்பைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இத்தாக்குதல் நடந்த மூன்று நாட்களுக்குள் குற்றம் சாட்டப்பட்ட 30 வயதான முகமது ஷரிபுல் இஸ்லாம் ஷேசாத் ( Mohammad Shariful Islam Shehzad) என்பவரை தானேவில் வைத்து மும்பை போலீஸார் கைது செய்தனர். மேலும் விசாரணையில், ஷேஜாத் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்றும், அவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சட்டவிரோதமாக எல்லையைக் கடந்துள்ளார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.