சாலையில் நடந்து சென்ற பெண் மீது பைக் மோதல்.. தூக்கி வீசப்பட்ட பதைபதைக்கும் காட்சி! - Nilgiris accident cctv - NILGIRIS ACCIDENT CCTV
Published : Aug 13, 2024, 12:15 PM IST
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் டி.டி.கே சாலையில் நேற்று(திங்கட்கிழமை) இரவு இளம்பெண் ஒருவர் செல்போனை பார்த்தபடியே சாலையில் நடந்து சென்றுக் கொண்டு இருந்தார். அப்போது எதிரே அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று இளம்பெண் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் இளம்பெண் தூக்கி வீசப்பட்டார்.
பின்னர், அங்கிருந்த பொதுமக்கள் சிலர் உடனடியாக அந்த இளம்பெண்ணை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளம்பெண் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார்.
வீடியோ அடிப்படையில் குன்னூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, இளம்பெண் மீது பைக் மோதிய சிசிடிவி காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
வீடியோ அடிப்படையில் விபத்து ஏற்படுத்திய வாகனம், அதன் உரிமையாளர் யார் என்ற விபரம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரத்தில் சாலையில் வாகனம் ஓட்டும் போதும் நடந்துச் செல்லும் போது செல்போன் மீது கவனம் செலுத்தாமல் கவனமாக செயல்பட வேண்டும் எனவும் தமிழ்நாடு காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்கனவே நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.