சென்னை:சென்னை ஐஐடி-யில் வருடாந்திர தொழில்முனைவோர் உச்சி மாநாட்டை (இ-உச்சிமாநாடு 2025) வரும் 28-ஆம் தேதி முதல் மார்ச் 2-ஆம் தேதி வரை நடைபெறுகிறது எனவும், இந்தியா முழுவதும் இருந்து சுமார் 1,000 நிறுவனர்கள், 50க்கும் அதிகமான முதலீட்டாளர்கள், 400-க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி தெரிவித்தார்.
சென்னை ஐஐடி தொழில்முனைவோர் பிரிவு (E-Cell) ஏற்பாடு செய்துள்ள இந்த வருடாந்திர நிகழ்வு, ஆர்வமுள்ள தொழில்முனைவோரை இணைக்கும் மையமாகச் செயல்படுவதுடன், புத்தம்புது சிந்தனைகளை வளர்த்தெடுக்கச் செய்து, அவற்றை சாத்தியமான வணிக முயற்சிகளாக மாற்றுவதற்கான தளத்தை உருவாக்கி தருகிறது. மேலும் தொழில் வல்லுநர்கள், துணிகர முதலீட்டாளர்கள், மாணவர்கள் ஆகியோரை ஒரே இடத்தில் ஒன்றிணைக்கச் செய்கிறது.
இ-உச்சி மாநாடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி வெளியிட்டு பேசும்போது, 2047 உன்னத பாரதத்தை பார்க்க வேண்டும் என்றால் நிச்சயமாக தொழில் தொடங்கும் நிகழ்விலும், தொழில்நுட்பத்திலும் வளர்ந்திருக்க வேண்டும். மாணவர்கள் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தவும், விற்பனை செய்யவும் ஏதுவாக செயலாக்கம் கொண்ட சந்தையை இ-உச்சிமாநாடு 2025-ல் முதன்முறையாக ‘பிஸ்-பஜார்’ என்ற பெயரில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் வணிகம் மற்றும் தொழில் முனைவு வாய்ப்பைப் பெறுவதற்கான குறுகியகாலத் தயாரிப்பாக இந்நிகழ்வு இருக்கும். எப்படி பொருள்களை தயாரிக்கலாம் என்பது குறித்து விவரித்து பல தொழில்நுட்பத்தில் புதிய தொடக்கத்தை உருவாக்கி உள்ளோம்.
இதில் 400 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர். அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பொருளாதார உதவி செய்யும் வகையில் பீச் பெஸ்ட் எனப்படும் ஒரு திட்டத்தை உருவாக்கி உள்ளோம். ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நடத்துபவர்கள் 15 நிமிடத்தில் அவர்களது தயாரிப்பு குறித்து விவரிப்பர்.
அதில் சிறப்பாக உள்ள தொழில்நுட்பத்தை தொழில்துறையை சேர்ந்தவர்கள் ஏற்றுக் காெண்டு மூதலீடு செய்யலாம். மேலும் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய உள்ளார்கள், பிஸ் பஜார் எனப்படும் அமைப்பின் மூலமாக அவர்கள் எவ்வாறு அவர்கள் பொருட்களை விற்கலாம் எனப்படும் யுக்தியை கற்றுக் கொள்ளலாம்.
இதன் பின்னர் ஸ்டார்ட் அப் கம்பெனியை வைத்து வளர்ச்சி அடையலாம். ஏற்கனவே நிறுவப்பட்ட 42 ஸ்டார்ட் நிறுவப்பட்ட நிறுவனங்களும் இதில் கலந்து கொள்கின்றனர். இவர்களின் வளர்ச்சியை மேலும் எப்படி முன்னேற்றி கொண்டு செல்வது என்பதை குறித்து அதான கலந்துரையாடல் மிகவும் இருக்கும்.
E summit எனப்படும் நிகழ்வில் 400 புதிய ஸ்டார்ட் அப் இந்தியா முழுவதும் இருந்து சுமார் 1,000 நிறுவனர்கள், 50க்கும் அதிகமான முதலீட்டாளர்கள், 400-க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்க உள்ளார்கள். பிப்ரவரி 28 முதல் மார்ச் 2-ஆம் தேதி வரை இ-உச்சி மாநாடு நடைபெறும். 5,000 பேர் 400 ஸ்டார்ட் அப் ஒன்று சேர்வது பெரிய விஷயமாக இருக்கிறது. முதலீட்டாளர்கள் 2 நாட்கள் இங்கேயே தங்கி இருப்பது தொழில் முனைவோருக்கு பெரிதும் உதவியாக அமையும்.
மாணவர்கள் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தவும், விற்பனை செய்யவும் ஏதுவாக செயலாக்கம் கொண்ட சந்தையை இ-உச்சிமாநாடு 2025-ல் முதன்முறையாக ‘பிஸ்-பஜார்’ என்ற பெயரில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்கள் வணிகம் மற்றும் தொழில்முனைவு வாய்ப்பைப் பெறுவதற்கான குறுகியகாலத் தயாரிப்பாக இந்நிகழ்வு இடம்பெற உள்ளது.
ஆர்வமுள்ள தொழில்முனைவோர், ஆரம்பகால கண்டுபிடிப்பாளர்கள், நிதி திரட்டுதல், தொடக்கநிலை முதலீடு ஆதரவைத் தேடும் ஆரம்ப கட்ட ஸ்டார்ட்அப்கள், சென்னை ஐஐடியில் இருந்து பிராண்ட் தெரிவுநிலை அல்லது பணியமர்த்தல் போன்ற தேவைகளை எதிர்பார்க்கும் ஸ்டார்ட்அப்களுக்கு ஒவ்வொரு கட்டத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் மாநாடுகளை நடத்தியிருக்கிறோம்.
இந்த மாநாட்டில், இந்தியா முழுவதும் இருந்து 400க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 1,000 நிறுவனர்கள், ஏறத்தாழ 50 முதலீட்டாளர்கள், 15,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.
'ஸ்டார்ட்அப்-எக்ஸ்போ' எனப்படும் மற்றொரு முக்கிய நிகழ்வு நடைபெறுகிறது: இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான மாணவர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் நிபுணர்கள் கலந்துகொள்ளும் இடங்களுக்கு ஸ்டார்ட்அப்கள் தங்கள் தயாரிப்புகள், சேவைகளை 100 அரங்குகளில் காட்சிப்படுத்த உள்ளனர்.
- பூட்கேம்ப்: வணிக உலகில் கருத்துகளை அளவீடு செய்வதற்கான நிபுணத்துவம், திறன்களை ஆறு வார அதிவிரைவுத் திட்டம் ஆரம்பகட்ட ஸ்டார்ட்அப்களுக்கு வழங்குகிறது. பூட்கேம்ப் கவனமாக வடிவமைக்கப்பட்ட பட்டறைகள், ஸ்டார்ட்அப் தொடர்பான வழிகாட்டுதலைக் கொண்டுள்ளது.
- இன்குபேட்டர் மாநாடு அல்லது ஐ-மாநாடு: சென்னை ஐஐடி-யின் தொழில்முனைவோர் பிரிவு ஏற்பாடு செய்த பிரத்யேக நிகழ்வு, வழக்கமான தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ளாமல் இந்தியா முழுவதும் உள்ள தொழில் ஊக்குவிப்பு பெரு நிறுவனங்களில் இருந்து தொழில் ஊக்குவிப்புக்கான நேரடி வழியை ஸ்டார்ட்அப்களுக்கு வழங்குகிறது. பான்-இந்தியா இன்குபேட்டர்களுடன் இணைவதற்கும் வேகமான மதிப்பீடுகளைக் கொண்டிருப்பதற்கும் மையத்தளமாக இது செயல்படுகிறது.
- எலிவேட்: நம்பிக்கைக்குரிய ஸ்டார்ட்அப்களை சிறந்த வழிகாட்டிகள் மற்றும் முதலீட்டாளர்களுடன் இணைக்கும் ஒரு பான்-இந்தியா நிதி திரட்டும் நிகழ்வு, தொடர் சுற்று நிதியைத் திரட்டவும், அவர்களின் திறன்களை மேம்படுத்தவும், மதிப்புமிக்க சந்தை வளங்களை அணுகவும் அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குகிறது. இது ஆரம்ப கட்ட தொழில்முனைவோர், வழிகாட்டிகள், புதிய நிறுவனங்களில் முதலீடு செய்வோர், துணிகர முதலீட்டாளர்கள் ஆகியோருக்கு இடையே ஒத்துழைப்பை வளர்க்கச் செய்கிறது. மேலும் அறிவுப் பரிமாற்றம், வணிக வளர்ச்சி மாற்றத்திற்கான தளத்தை உருவாக்குகிறது.
'கல்வி-21' என்பது பள்ளி மாணவர்கள் ஒரு தொழில்முனைவு மனநிலையைக் கொண்டிருக்கும் நம்பமுடியாத ஆற்றலைப் பாராட்ட உதவும். 'தொழில்முனைவோர் மேம்பாட்டு இயக்கம்' பிற சமூக நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அந்தந்த வளாகங்களில் தொழில்முனைவோர் பிரிவுகளை அமைப்பதில் மாணவர் குழுக்களை ஈடுபடுத்தி ஆதரிக்கும் 'தொழில்முனைவு மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்படுகிறது என தெரிவித்தார்.