தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tech Team

Published : 3 hours ago

ETV Bharat / technology

இலவச மின்சாரம் வேண்டுமா; ஒன்றிய அரசின் புதிய சோலார் திட்டத்திற்கு விண்ணப்பிக்கவும்! - How to get Solar Subsidy

மின் கட்டணச் சுமையை குறைக்க, பிரதம மந்திரி சூர்ய கர் முஃப்த் பிஜிலி யோஜனா (PM - Surya Ghar: Muft Bijli Yojana) சூரியசக்தி மின் திட்டத்தை (சோலார் திட்டம்) ஒன்றிய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தில் எப்படி மானியம் பெறுவது? திட்டத்தின் பலன்கள் என்ன? அரசு எவ்வளவு நிதி அல்லது கடன் வழங்கும் என்ற விவரங்களைக் காணலாம்.

apply solar subsidy online
இலவச மின்சாரம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? (ETV Bharat)

நாட்டின் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் சிறப்பு பிரதம மந்திரி சூர்ய கர் முஃப்த் பிஜிலி யோஜனா (PM - Surya Ghar: Muft Bijli Yojana) திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக கோடிக்கணக்கான வீடுகளில் சோலார் கூரை அமைப்பு நிறுவப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், பயனாளிகள் ஒவ்வொரு மாதமும் 300 யூனிட் வரை இலவச மின்சாரத்தைப் பெறலாம். இத்திட்டத்தின் கீழ் ரூ.75,021 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக ஒரு கிலோவாட் முதல் 2 கிலோவாட் வரை 30,000 ரூபாயும், அடுத்த ஒரு kW-க்கு கூடுதலாக 18,000 ரூபாயும் வழங்கப்படுகிறது.

மேலும், 3 கிலோவாட்டுக்கு அதிகமான கிடைக்கும் மொத்த மானியம் ரூ.78,000 ஆகும். இதற்கான வங்கிக் கடன்களையும் பெரும்பாலான பொதுத்துறை வங்கிகள் குறைந்த வட்டியில் வழங்குகின்றன.

எப்படி பதிவு செய்வது? (Solar Registration):

  • இதற்காக பிரத்யேகமாக உள்ள இணையதளத்தைப் (https://www.pmsuryaghar.gov.in) பார்வையிடவும்.
முதலில் பதிவு செய்யும் முறை. (pmsuryaghar.gov.in)
  • இந்தத் தளத்தில் உங்கள் மாநிலத்தைத் தேர்ந்தெடுத்து, உங்கள் மின்சார விநியோக நிறுவனத்தைக் (எ.கா. TANGEDCO) குறிப்பிடவும்.
  • பின்னர் உங்கள் மின்சார வாடிக்கையாளர் எண், மொபைல் எண், மின்னஞ்சல் ஐடி ஆகியவற்றை உள்ளிடவும்.
  • இந்த விவரங்களை பூர்த்தி செய்த பின்னரே உங்கள் விண்ணப்பம் பதிவு செய்யப்படும்.
  • இது தவிர, இந்த இணையதளத்தில் சோலார் கூரை நிறுவலுக்கு பொருத்தமான விற்பனை முகவர்களை நீங்கள் தேர்வு செய்யலாம்.

லாகின் / முன்பதிவு (Login and Apply):

  1. அரசின் இந்த இணைப்பைப் பயன்படுத்தி இணையத்தளத்திற்கு செல்லவும்.
  2. அதன்பின், உங்கள் வாடிக்கையாளர் எண், மொபைல் எண்ணைப் பயன்படுத்தி உள்நுழைக.
  3. இதில் கூரை மேல் சூரிய மின்சார தகடுகள் பொருத்துவதற்கான விண்ணப்ப முறை இருக்கும்.
  4. அதனைத் திறந்து முழுமையான விவரங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
அடுத்ததாக உள்நுழைந்து விண்ணப்பிக்கும் முறை. (pmsuryaghar.gov.in)

விண்ணப்ப சரிபார்ப்பு:

உங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பிறகு, உங்கள் உள்ளூர் மின்சார விநியோக நிறுவனம், உங்கள் விண்ணப்பத்தைச் சரிபார்க்கும். அனுமதி கிடைக்க சில வாரங்கள் ஆகும். அவர்களின் அனுமதி கிடைக்கும்போது, அது தொடர்பான தகவல்கள் நேரடியாக வந்து தெரிவிக்கப்படும்.

சோலார் பேனல்களை நிறுவுதல்: Installation of Solar Panels:

DISCOM இடம் ஒப்புதல் பெற்ற பிறகு, உங்கள் பட்டியலிடப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே உங்கள் வீட்டில் சூரியஒளி மின்சார தகடை நிறுவ முடியும். இந்த மானியத்தைப் பெற இந்த விற்பனையாளர்களின் அங்கீகாரம் அவசியம்.

நிகர அளவீட்டுக்கு விண்ணப்பிக்கவும் (Apply for Net Metering):

  • நிறுவல் முடிந்ததும், உங்கள் மின் உற்பத்தி நிலைய விவரங்களை இணையதளத்தில் உள்ளிட வேண்டும்.
  • அதன் பிறகு நீங்கள் நெட் மீட்டரிங் கோரி விண்ணப்பிக்க வேண்டும்.
  • இந்த சாதனம் உங்கள் சோலார் பேனல்கள் மூலம் உருவாக்கப்படும் மின்னோட்டத்தையும், கிரிட்டிலிருந்து உட்கொள்ளும் மின்சாரத்தையும் பதிவு செய்கிறது.
  • இந்த அமைப்பில் உற்பத்தி செய்யப்படும் உபரி மின்சாரத்தை மீண்டும் DISCOM-க்கு (மின்சார பகிர்மான நிறுவனத்தை அடையாளப்படுத்தும் வார்த்தை) விற்கலாம்.
  • அதனால் கூடுதல் வருமானம் பெறலாம்.

மானியம் வழங்கல்: (Subsidy Disbursement):

நெட் மீட்டர் பொருத்திய பின் மின்சாரத் துறை அலுவலர்கள் வந்து சரிபார்ப்பார்கள். இந்த ஆய்வுகள் முடிந்ததும் இணையதளத்தில் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம். இந்தச் சான்றிதழைப் பெற்ற பிறகு, உங்கள் வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் ரத்து செய்யப்பட்ட காசோலையை இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் 3 கிலோவாட் வரையிலான கூரை சோலார் சிஸ்டங்களை நிறுவுவதற்கு எந்த முன்பணமும் இல்லாமல் 7% வரை குறைந்த வட்டியில் கடன் பெறலாம். அதாவது, 3 கிலோவாட் திறன்கொண்ட சூரியஒளி மின்சாரத் தகடுகளைப் பொருத்துவதற்கு ரூ.78 ஆயிரம் வரை மானியம் கிடைக்கும். இந்த மானியத் தொகை 30 நாட்களுக்குள் உங்கள் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படும்.

திட்டத்தின் பலன்கள் (Benefits of The Scheme):

இது உங்களுக்கு இலவச மின்சாரம் வழங்குவது மட்டுமின்றி மின் கட்டணத்திலும் சேமிப்பை உறுதி செய்கிறது. உதாரணமாக, ஒரு குடும்பம் மாதம் ஒன்றுக்கு 300 யூனிட் மின்சாரத்தை உபயோகிக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம். 3 கிலோவாட் சோலார் சிஸ்டத்தை நிறுவுவதன் வாயிக்லாக ஆண்டுக்கு ரூ.15,000 சேமிக்க முடியும்.

கூடுதலாக, இத்திட்டம் 2 kW வரையிலான அமைப்புகளுக்கு 60% மானியத்தையும், 2 முதல் 3 kW வரையிலான அமைப்புகளுக்கு 40% மானியத்தையும் வழங்குகிறது. ஆரம்பத்தில் உங்கள் வீட்டில் சோலார் பேனல்களை நிறுவ பிணையில்லாக் கடன்களும் வழங்கப்படுகிறது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய (ETV Bharat)

இங்கே கிளிக் செய்யவும்.

இதையும் படிங்க:

  1. முத்ரா கடன்: ரூ.10 லட்சம் வரை எளிதில் கடன்! - mudra loan online apply
  2. ஜியோ AirFiber ரீசார்ஜ் இலவசம்: தீபாவளி சலுகை! - Jio AirFiber Diwali Offer

ABOUT THE AUTHOR

...view details