ETV Bharat / state

“காவல் உதவி செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்” - மாணவிகளுக்கு அமைச்சர் அட்வைஸ்! - KAAVAL UTHAVI APP

கல்லூரி மாணவிகள், பெண்கள் காவல் உதவி செயலியை தங்களது செல்போனிலில் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு தமிழக காவல்துறையும், அமைச்சர் கோவி செழியனும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

காவல் உதவி செயலி கோப்புப்படம்
காவல் உதவி செயலி கோப்புப்படம் (ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 15 hours ago

சென்னை: பெண்கள் குறிப்பாக மாணவிகள் 'காவல் உதவி செயலியை' தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்வதை அனைத்துக் கல்லூரிகளும் உறுதி செய்ய வேண்டும் என உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கல்லூரி மாணவிகள் அனைவரும் காவல் உதவி செயலியை தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து, ஆபத்தாக உணரும் காலத்தில் பயன்படுத்துமாறு அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் கோவி செழியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், ஆபத்துக் காலங்களில் உடனடியாக காவல்துறையைத் தொடர்பு கொள்ள உதவும் ‘காவல் உதவி’ செயலியை அனைத்துப் பெண்களும் குறிப்பாக மாணவிகள் தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

அவசரக் காலங்களில் ‘சிவப்பு நிற அவசரம்’ என்ற பொத்தானை அழுத்துவதன் மூலமாக, பயனாளர் விவரம், தற்போதைய இருப்பிட விவரம் மற்றும் வீடியோ, கட்டுப்பாட்டு அறையில் பெறப்பட்டு காவல்துறையின் அவசர சேவை வழங்கப்படும். மாணவிகள் காவல் உதவி செயலியை தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்வதை அனைத்துக் கல்லூரிகளும் உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இச்செயலியை Google Play Store, App Store-இல் இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்" எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில், "காவல் உதவி செயலி" (KAAVAL UTHAVI APP) பொதுமக்களின் பாதுகாப்பிற்காக கொண்டு வரப்பட்டது. எந்த வகையான இன்னல் அல்லது அவசரநிலையின் போதும், உடனடி உதவியைப் பெறுவதற்காக கட்டுப்பாட்டு அறைக்கு அவசர எச்சரிக்கையை அனுப்புவதற்கும் காவல் உதவி செயலியைப் பயன்படுத்தலாம்.

பெண்கள் தாங்கள் பாதிக்கப்படக்கூடிய அல்லது அச்சுறுத்தலாக உணரும் போதெல்லாம் இந்த பயன்பாட்டைப் பயன்படுத்தலாம். அவர்கள் எங்கிருந்தாலும் தமிழ்நாடு காவல்துறை விரைவில் சென்று அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும்.

இதையும் படிங்க: மாணவர்கள் இரவு 7.30 மணிக்குள் விடுதியில் இருக்க வேண்டும் - சென்னை பல்கலை. உத்தரவு..!

செப்டம்பர் 1ஆம் தேதி முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை, தமிழ்நாடு காவல்துறையினரால் பெறப்பட்ட மொத்த அழைப்புகள் 10,708; நடவடிக்கை மேற்கொண்ட அழைப்புகள் 1,241; தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை டிசம்பர் 15ஆம் தேதி வரை 4,87,565 பேர் பதிவு செய்துள்ளனர். இது தவிர, 5 லட்சம் பெண்களுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்கும் நோக்கத்துடன் "அவள் திட்டம்" தொடங்கப்பட்டு, இதுவரை 35,000 பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

விரிவான விழிப்புணர்வு திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகள் மூலம் இந்த ஆப்-ன் பதிவிறக்கங்கள் அதிகரித்து வருகின்றன. இது சம்பந்தமாக மற்றொரு திட்டம் கல்வி நிறுவனங்களில் தொடங்கப்பட உள்ளது. குறிப்பாக, மாணவிகள் இந்த APP-ஐப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.