தசரா, தீபாவளி ஆகிய பண்டிகைகள் நெருங்கும் வேளையில், டெக் நிறுவனங்கள் தங்களின் புதிய தயாரிப்புகளைக் களமிறக்கத் திட்டமிட்டுள்ளது. அதன்படி அக்டோபர் 2024, சியோமி 15 சீரிஸ், ஒன்பிளஸ் 13, விவோ எக்ஸ்200, ஒப்போ ஃபைண்டு எக்ஸ்8 போன்ற பிரபல சீன நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் இம்மாதத்தில் வெளியாகிறது.
அப்படி வெளியாகும் ஸ்மார்ட்போன்களின் பட்டியல், அவை வெளியாகும் தேதி, அதன் அம்சங்கள் என்ன என்பது போன்ற தகவல்களை விரிவாகப் பார்க்கலாம்.
- சாம்சங் கேலக்சி எஸ்24 ஃபேன்ஸ் எடிஷன் (Samsung Galaxy S24 FE):
செப்டம்பர் மாதம் வெளியான புதிய சாம்சங் கேலக்சி எஸ்24 ஃபேன்ஸ் எடிஷன் மொபைல் நாளை (அக்டோபர் 3) விற்பனைக்கு வருகிறது. 6.7-அங்குல முழு எச்டி+ டைனமிக் அமோலெட் 2x டிஸ்ப்ளே, 120 Hz ரெப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா விக்டஸ் பிளஸ், 4 nm சாம்சங் டெக்கா-கோர் எக்சினாஸ் 2400e சிப்செட், 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார் OIS உடன், 8 மெகாபிக்சல் 3x டெலிஃபோட்டோ சென்சார், 12 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் லென்ஸ் அடங்கிய பின்பக்க கேமரா, 10 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா, 8 ஜிபி ரேம் / 512 ஜிபி வரை ஸ்டோரேஜ் ஆகிய சிறப்பம்சங்கள் இதில் உள்ளன. அறிமுகச் சலுகையாக சாம்சங் கேலக்சி எஸ்24 FE போனின் 128 ஜிபி மாடலின் ரூ.59,999 எனும் விலைக்கே, 256 ஜிபி வேரியன்டை பயனர்கள் வாங்கலாம்.
- லாவா அக்னி 3 (Lava Agni 3):
சீனத் தயாரிப்புகளுடன் உள்நாட்டின் லாவா நிறுவனம் புதிய லாவா அக்னி 3 மொபைல் அக்டோபர் 4, 2024 அன்று அறிமுகம் செய்கிறது. இதில் 6.78-அங்குல அமோலெட் திரை 120 Hz ரெப்ரெஷ் ரேட்டுடன் இருக்கும். மேலும், CMF போன் 1, மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ ஸ்மார்ட்போன்களில் உள்ள மீடியாடெக் டிமென்சிட்டி 7300 சிப்செட் இதில் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 8 ஜிபி ரேம், 256 ஜிபி வரை ஸ்டோரேஜ் ஆகியவை இதன் அம்சங்களில் அடங்கும். கேமராவைப் பொறுத்தவரை 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொடுக்கப்படலாம்.
- விவோ எக்ஸ் 200 (Vivo X200 Series):
அக்டோபர் 14, 2024 அன்று சீனாவில் அறிமுகம் செய்யப்படும் விவோ எக்ஸ் 200 சீரிஸ் ஸ்மார்ட்போன் மூன்று வகைகளில் சந்தைக்குக் கொண்டுவரப்படுகிறது. அதில் விவோ எக்ஸ் 200, விவோ எக்ஸ் 200 ப்ரோ, விவோ எக்ஸ் 200 ப்ரோ மினி ஆகிய மாடல்கள் அடங்கும். இதில் மீடியாடெக் டிமென்சிட்டி 9400 சிப்செட் பயன்படுத்தப்பட உள்ளது. மிக முக்கியமாக, Zeiss கேமரா அமைப்பு இதில் நிறுவப்படுகிறது. இதனால் இந்த ஸ்மார்ட்போன் சிறந்த கேமரா மொபைலாக டெக் சந்தையில் வலம்வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- சியோமி 15 சீரிஸ் (Xiaomi 15 Series):