டெல்லி: இந்தியாவிற்குள் காலடி எடுத்து வைக்கும் வியட்நாம் மின்சார கார் (எலெக்ட்ரிக் கார்) தயாரிப்பு நிறுவனமான வின்-ஃபாஸ்ட் (VinFast), தமிழ்நாட்டின் ‘முத்து நகரம்’ என்று அழைக்கப்படும் தூத்துக்குடி மாவட்டத்தில் தனது ஆலையை நிறுவியுள்ளது. நிறுவனத்தின் முதல் கார் தயாரிப்பு எப்போது தொடங்கும் என வாடிக்கையாளர்கள் காத்திருந்த நேரத்தில், நடந்துவரும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 கண்காட்சியில், வின்-ஃபாஸ்ட்டின் புதிய எலெக்ட்ரிக் கார் காட்சிப்படுத்தப்பட்டது.
பிரீமியம் தரத்தில் சாலையை அலங்கரிக்கக் காத்திருப்பது வின்-ஃபாஸ்ட்டின் VF 7 மற்றும் VF 6 மாடல் மின்சார கார்கள் ஆகும். கார் தயாரிப்பில் 2017 முதல் செயல்பட்டு வரும் இந்நிறுவனம் பல பிரீமியம் ரக கார்களை உலக நாடுகளில் தயாரித்து வருகிறது. தற்போது இந்தியா போலவே, அமெரிக்காவிலும் புதிய தயாரிப்பு ஆலையை நிறுவனம் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருப்புமுனையை ஏற்படுத்தும்
இதுதொடர்பான அறிக்கையில், முதல் இரண்டு மின்சார கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளோம். வலது பக்கம் இருந்து வாகனத்தை இயக்கும் வகையில் நாங்கள் தயாரிக்கப் போகும் முதல் வாகனம் இதுவாகும். மாசற்ற இந்தியாவின் பயணத்தில் நாங்களும் இணைய இருக்கிறோம் என்பதில் மகிழ்ச்சி என்று கூறப்பட்டிருந்தது.
The spotlight shines on us! We're honored to be awarded for Best Show.
— VinFast India (@VinFastIN) January 20, 2025
Meet us at the VinFast Pavilion (Hall Number 14) from 19th - 22nd January 2025.#VinFast #VinFastIndia #VinFastBharatMobilityExpo25 #highlights #VF7 #VF6 #vf3 #VinFastVF7 #vinfastvf6 #vinfastvf3 pic.twitter.com/DBRHM0CpXF
வின்ஃபாஸ்ட் ஆசியாவின் தலைமை நிர்வாக அலுவலர் ஃபாம் சான் சாவ் பேசுகையில், "எங்கள் பிரீமியம் எஸ்யூவி ரக மின்சார கார்களான VF 7 மற்றும் VF 6 ஆகியவை, இந்தியாவில் மின்சார வாகனங்கள் கிடைப்பதை விரைவுபடுத்தும் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
கண்காட்சியில் எங்கள் பரந்த அளவிலான மின்சார வாகனத் தயாரிப்புகளை காட்சிப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இங்கு எங்கள் இருப்பு இந்திய சந்தைக்கான எங்கள் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுவது மட்டுமல்லாமல், நிலையான மின்சார வாகனங்களுக்கான பயனர் தேவைகள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்திற்கான எங்கள் பார்வையையும் காட்டுகிறது," என்று கூறினார்.
வின்-ஃபாஸ்ட் திட்டங்கள்
இந்தியாவை மையமாகக் கொண்ட பிரீமியம் SUV VF 7 மற்றும் VF 6 ஆகிய எலெக்ட்ரிக் கார்கள் 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியின் தொடக்கத்தில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று வின்-ஃபாஸ்ட் இந்தியாவின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் துணை தலைமை நிர்வாக அலுவலர் அஷ்வின் அசோக் பாட்டீல் பேசினார்.
Gear up for a Futuristic, Dynamic & Avante Garde driving experience with our Showstoppers – VF 7 & VF 6.#VinFast #VinFastIndia #BoundlessTogether #VinFastBharatMobilityExpo25 #highlights #BrandLaunch #BharatMobilityExpo #VF7 #VF6 #vf3 #VinFastVF7 #vinfastvf6 #vinfastvf3 pic.twitter.com/ClnxxZYsXd
— VinFast India (@VinFastIN) January 20, 2025
இதையும் படிங்க |
வின்ஃபாஸ்ட் இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் தங்களின் டீலர்களை நியமித்து வருகிறது. பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025-இல், VF 7 மற்றும் VF 6 உடன், வின்ஃபாஸ்ட் அதன் VF 3, VF e34, VF 8, VF 9 எஸ்யூவி மின்சார கார்கள்; Evo 200, Klara, Feliz, Vento, Theon மின்சார ஸ்கூட்டர்கள்; DrgnFly மின்சார பைக் மற்றும் VF வைல்ட் பிக்கப் டிரக் கான்செப்ட் ஆகியவற்றைக் காட்சிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
ஆசியா, அமெரிக்கா, ஐரோப்பியா ஆகிய தளங்களை தங்களின் மின்சார கார், பைக் மற்றும் வணிக வாகனங்கள் கொண்டு நிரப்ப புதிய திட்டங்களை வின்ஃபாஸ்ட் வகுத்து வருகிறது. இதற்கான பெரும் திட்டமாக தூத்துக்குடியில் அமைக்கப்பட்டிருக்கும் உற்பத்தி ஆலை இருக்கும் என நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.