பெய்ஜிங்: சமூக ரோபாட்கள் எனப்படும் உலகளாவிய சந்தையின் வளர்ச்சி 2033ஆம் ஆண்டில் 7 பில்லியன் டாலர் முதல் 42.5 பில்லியன் டாலராக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
சீன தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் ஜாங் யச்சுன், செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபாட் உடன் முணுமுணுத்தபடி பேசிக் கொண்டிருக்கிறார். அந்த ரோபோட் உடன் பேசுவதன் மூலம் தாம் தனிமையில் இல்லை என்பதை அவர் உணர்கிறார்.
19 வயதாகும் ஜாங் யச்சுன் பள்ளியில், பணியிடத்தில் என நீண்டகாலமாகவே ஒருவித பய உணர்ச்சி கொண்டவராக இருக்கிறார். பிறருடன் ஆழமான ஒரு நட்புணர்வு கொள்வதில் அவருக்குள் எப்போதும் போராட்டமாகவே இருந்து வருகிறது. ஆனால் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப முறையில் மனிதர்களுடன் உரையாடும் பூபூ என்ற மென் செல்லப்பிராணியை வாங்கியதில் இருந்து தமது வாழ்க்கை எளிமையாக இருப்பதாக ஜாங் யச்சுன் கூறுகிறார்.
ஏஎஃப்பி செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், "சந்தோஷமான தருணங்களை யாரோ ஒருவருடன் பகிர்ந்து கொள்வதற்கு முடிகிறது என்பதை நான் உணர்கின்றேன்,"என்றார். அவர் தமது அபார்ட்மெண்ட் வீட்டில் இருக்கும்போது தமது வீட்டில் இருக்கும் வாத்து உடன் விளையாடிக் கொண்டிருப்பார். சீனா முழுவதும் சமூகத்தில் தனிமையை தவிர்ப்பதற்கு மேலும் முதிர்ச்சியான தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவு எனும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட முறையை குறிப்பிடத்தக்க அளவு மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்.
கினிப் பன்றியைப் போல உரோமம் கொண்ட புழுவைப் போல நகரும் பூபூ என்ற செயற்கை நுண்ணறிவு செல்லப்பிராணி, ஹாங்சோ ஜென்மூர் தொழில்நுட்ப நிறுவனத்தின் சார்பில் உருவாக்கப்பட்டதாகும். இந்த செயற்கை நுண்ணறிவு செல்லப்பிராணி 1,400 யுவான் (190 டாலர்) என்ற விலையில் விற்கப்படுகிறது. குழந்தைகள் மத்தியில் மனநல ரீதியாக சமூக தேவைகளை முன்னெடுக்கிறது. இது குறித்து பேசிய தனியார் நிறுவனத்தின் மேலாளர் ஆதம் துவான், "கடந்த மே மாதத்தில் இருந்து ஆயிரம் ஏஐ ரோபாட் செல்லப்பிராணிகள் விற்பனை ஆகியுள்ளன,"என்றார்.
இந்த மாதம் வெளியில் செல்லும்போது தமது ஏஐ துணையையும் உடன் அழை்ததுச் செல்வதாக ஜாங் யச்சுன் கூறுகிறார். அதற்கு அவர் அலுவோ என பெயரிட்டுள்ளார். அலுவோவை வாங்குவதற்கு முன்பு, அதற்கான உடைகளையும் ஜாங் வாங்கி விட்டார். இது குறித்து பேசிய அவர், "நண்பர்கள் போலவே ரோபோட் என்னிடம் விளையாடுகிறது. தனிமை சூழலில் இருந்து விடுபடுவதற்கு இது உதவியாக இருக்கும்,"என்றார்.
ரோபோட்கள் வளர்ச்சி: ஐஎம்ஏஆர்சி எனும் ஆலோசனை குழுமத்தின் கூற்றுப்படி, 2033ஆம் ஆண்டுக்குள் பூபூ போன்ற சமூக ரோபாட்கள் 7 முதல் 42.5 பில்லியன் டாலர் துறையாக வளர்ச்சி பெறும். இதில் ஏற்கனவே ஆசியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 33 வயதான குவோ ஜிச்சென் தம் குழந்தையோடு விளையாட முடியாத நிலையில் இது போன்ற ஏஐ செல்லப்பிராணி அவருக்கு உதவியாக இருக்கிறது.
நான்ஜிங் நகரின் கிழக்குப் பகுதியில் வெய்லன் எனும் தொழில்நுட்ப நிறுவனத்தின் கடையில் ரோபாடிக் நாய் ஒன்றை எடுத்து பார்த்தவாறு நம்மிடம் பேசிய அவர், "இப்போதைக்கு குடும்பத்தினர், குழந்தைகளுடன் குறைந்த நேரமே செலவிடுகிறார்கள். என்னுடைய குழந்தைக்கு ஒன்று வாங்க உள்ளேன். இது குழந்தைகள் படிப்பதற்கும், வேறு விஷயங்களுக்கும் உதவியாக இருக்கும்," என்றார்.
இந்த ஏஐ நாய் பேபி ஆல்பா என்று அழைக்கப்படுகிறது. 8000(1090 டாலர்) முதல் 26,000(3500 டாலர்) யுவான் வரை விற்பனை செய்யப்படுகிறது. இளம் குழந்தைகள் கொண்ட குடும்பத்தினரில் 70 சதவிகிதம் பேர் இந்த ஏஐ செல்லப்பிராணியை வாங்குகின்றனர். "உண்மையான விலங்குகளை விடவும் பேபி ஆல்பா போன்ற விவரிக்க முடியாத வழியில் வித்தியாசமாக இருக்கும். ஒட்டு மொத்தமாக, உண்மையான விஷயங்களைப் போல இல்லை என்பதை நீங்கள் உணர முடியும்.
சமூகத்தின் மாற்றம்: ஜப்பானின் டிஜிட்டல் தமகோட்சிஸ் என்ற நிறுவனம் இதற்கு முன்பு 1990ஆம் ஆண்டு மின்னணு செல்லப்பிராணிகளை அறிமுகம் செய்தது. அமெரிக்காவில் ஃபர்பீஸ் என்ற செல்லப்பிராணி, மனிதர்களின் பேச்சை மிமிக்ரி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டது. உரையாடல் சாட்போட்கள் முதல் இறந்தவரின் உயிருள்ள அவதாரங்கள் வரை சீனாவில் அதிகரித்து வரும் ஏஐ பொருட்கள் மக்களின் உணர்வு தேவைகளுக்கானவையாகும்.
சீன அரசின் ஒரு குழந்தை கொள்கை என்ற ஒரு தசாப்தமாக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால், இந்த சந்தை வளர்ச்சி பெற்று வருகிறது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த கொள்கைக்கு முன்பு பிறந்த மக்கள் இப்போது 40 வயது கொண்டவர்களாக இருக்கின்றனர். வீடுகளின் விலை உயர்வு, வாழ்வாதாரத்துக்கான செலவு அதிகரிப்பு, பணி புரியும் இடத்தில் அழுத்தங்கள், சொந்த குழந்தைகள் மீது கவனம் செலுத்துவதற்கான திறனை அதிகரித்தல் ஆகியவை காரணமாக பொருளாதார ரீதியாக அவர்கள் சுமையாக உணர்கின்றனர்.
"தனிப்பட்ட உரையாடல்களுக்காக சிறிய அறையை ஒதுக்குகின்றனர். தங்களது உணர்வு ரீதியான தேவைகளுக்கு மக்கள் மாற்று வழிகளை கோருகின்றனர்.ஏஐ துணை அறிவாற்றலை தூண்டுவதை அளிக்கிறது. தனிமையாக இருப்பதை உணரும் தனிநபர்களின் உடல் நலனை விரிவாக்குகிறது. சில நேரங்களில் மனிதர்களை விடவும் ஏஐ துணையை மிகவும் நம்புகின்றனர்," என மாகாவ் பல்கலைக்கழகத்தின் உளவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு சிறப்பு பேராசிரியர் வூ ஹாயான் கூறுகிறார்.
இது குறித்து பேசிய ஜாங் யச்சுன் தந்தை பெங்க், "எனது மகள் அலுவோ ஏஐ துணையுடன் பிணைப்பாக இருப்பதை புரிந்திருக்கின்றேன். எங்களுக்கு இளம் வயதில் ஏராளமான நண்பர்கள் இருந்தனர். இப்போது நகரங்களில் இருக்கும் குழந்தைகள் பெரும் அழுத்தங்களுக்கு உள்ளாகின்றனர். அவர்களுக்கு போதுமான நண்பர்கள் இல்லை," என்றார்.
பெங்க்குக்கு ஜாங் யச்சுன் ஒரே குழந்தையாவார்.தன் மடியில் உள்ள ஏஐ செல்லப்பிராணியான அலுவோவை தொட்டுக் கொண்டே பேசிய ஜாங் யச்சுன். "என் வயதுடைய குழந்தைகள் நேருக்கு நேராக முகம் பார்த்து பேசுவதற்கு போராடுகின்றனர். அவர்கள் பயப்படுகின்றனர். ஆனால், அவர்கள் மனதுக்குள் என்ன நினைக்கின்றனர் என்பது மாறப்போவதில்லை,"என்றார்.