இந்திய அரசு மின்சார வாகனங்களை (EVs) ஊக்குவிக்கும் முக்கிய முயற்சியாக ரூ.10,900 கோடி ரூபாய் ($1.3 பில்லியன்) ஊக்கத்தொகை (PM E-DRIVE) திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த நடவடிக்கை, புவி மாசுபாட்டை குறைத்து, சுத்தமான எரிபொருள் மாற்றங்களை நோக்கி நகர்ந்து செல்லும் நாட்டின் முயற்சிக்கு பெரிய பங்களிப்பாக இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக மின்சார வாகன சலுகைகள் எதேனும் கிடைக்குமா, யார் யாருக்கு இதில் லாபம் இருக்கும், எந்தெந்த வாகனங்களுக்கு இந்த ஊக்கத்தொகை திட்டம் பொருந்தும் என்பது குறித்து எளிமையாகத் தெரிந்துகொள்வோம். திட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்ன என்பதை கீழ்வருமாறு பார்க்கலாம்.
1. PM E-DRIVE அறிமுகம்:
- இந்த திட்டம் பிரதமர் மின் இயக்க நவீன வாகன மேம்பாட்டுத் திட்டம் (PM E-DRIVE) என அழைக்கப்படுகிறது.
- இதன் முக்கிய நோக்கம் மின்சார வாகனங்களை அதிகரிக்க ஊக்கத்தொகைகளையும், உள்கட்டமைப்புகளையும் மேம்படுத்துவதாகும்.
2. பல்வேறு மின் வாகன வகைகளுக்கு மானியங்கள்:
இந்த திட்டத்தில் பல்வேறு மின்சார வாகனங்களுக்கு 3,679 கோடி ரூபாய் (ரூ.36.79 பில்லியன்) மானியம் வழங்கப்படும் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக;
- மின்சார இரு சக்கர வாகனங்கள்
- மின்சார மூன்று சக்கர வாகனங்கள்
- மின்சார அவசரஊர்தி வாகனங்கள்
- மின்சார கனரக வாகனங்கள்
இதில் மின்சார அவசர ஊர்திகளுக்கு மட்டும் சுமார் 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது ஒரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒதுக்கீடாக அரசு பெருமிதம் கொண்டுள்ளது. இதேபோல, பழைய கனரக வாகனங்களை (லாரிகள்) ஒழிக்க ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
3. பொதுப் போக்குவரத்தில் மின்சார வாகனங்கள்:
அதிகமாக மக்கள் பயன்படுத்தும் பொதுப் போக்குவரத்திற்கு அதிகமான மின்சார வாகனங்களைச் சேர்க்க ரூ.4,391 கோடி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக புதிதாக 14,028 மின்சார பேருந்துகள் இந்திய சாலைகளை அலங்கரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. மின்சார வாகனங்களை அதிகரிக்க பங்களிப்பு:
ஒப்பீட்டளவில், தற்போது விற்பனை செய்யப்படும் 42 லட்சம் வாகனங்களில் 2 விழுக்காட்டிற்கும் குறைவான அளவே மின்சார வாகனங்கள் விற்பனை செய்யப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.
மின்சார வாகன சார்ஜிங் ஸ்டேஷன். (ETV Bharat) இதை, 2030-ஆம் ஆண்டிற்குள் 30 விழுக்காடாக உயர்த்துவதே அரசின் இலக்காகக் கருதப்படுகிறது. இதனை சாத்தியமாக்க மின்சார சார்ஜிங் ஸ்டேஷன்கள் (EV Charging station), புதிய மின்சார வாகன தொழில்நுட்பங்களை ஊக்குவிக்கும் கட்டமைப்புகளை உருவாக்க நிதி ஆதாரங்கள் வழங்கப்படும் எனவும் ஒன்றிய அரசு கூறியுள்ளது.
5. வாகனக் கழிவு மேலாண்மை:
ஒன்றிய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, மாசுபடுத்தும் வாகனங்களை சாலைகளில் இருந்து அகற்றவும், புதிய வாகன விற்பனையை 18 முதல் 20% உயர்த்தவும் வாகன கழிவு மையங்களை அமைக்க வாகன உற்பத்தியாளர்களை ஊக்குவித்துள்ளார். இதற்கான தேவைகளை கண்டறிந்து அரசு பூர்த்திசெய்யும் என்றும் கூறியுள்ளார்.
ஒன்றிய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி. (ETV Bharat) PM E-DRIVE திட்டமானது, இந்தியாவின் சுத்தமான எரிபொருள் (Green fuel) மற்றும் நிலையான போக்குவரத்திற்கு மாறும் முயற்சியில் ஒரு முக்கியமான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் ஊக்கத்தொகைகள், பொது போக்குவரத்திற்கான மின்சார வாகனங்கள், சார்ஜிங் ஸ்டேஷன்களுக்கான உள்கட்டமைப்புகள் ஆகியவற்றை மேம்படுத்த அரசு எடுத்திருக்கும் ஒரு சீரிய முயற்சி என்றே சொல்லலாம். இதன் வாயிலாக எலக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டை அதிகரிக்கவும், அதன் வாயிலாக மாசுபாட்டை குறைக்கவும் அரசு முயற்சிகள் மேற்கொள்கிறது.
இதையும் படிங்க:
- இலவச மின்சாரம் வேண்டுமா; ஒன்றிய அரசின் புதிய சோலார் திட்டத்திற்கு விண்ணப்பிக்கவும்! - How to get Solar Subsidy
- பாய்ந்து சென்ற சில நிமிடங்களில் எலும்புக்கூடான ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்! - Ola S1 Pro Fire Accident
- வரலாறு படைத்த ஸ்பேஸ்-எக்ஸ்: சாதனைப் பாதையின் 10 முக்கிய நிகழ்வுகள்! - spacex private spacewalk
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய (ETV Bharat) இங்கே கிளிக் செய்யவும்.