தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்குமார். இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி எனும் திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தின் இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடந்துவருகிறது. இதனுடனே குட் பேட் அக்லி எனும் படத்திலும் நடக்கிறார். பொதுவாக அஜித்குமாருக்கு கார் மற்றும் பைக் பந்தயங்களில் ஆர்வம் அதிகம். பைக்கில் பல மைல்கள் கடந்து பல ஊர்களுக்கு இவர் செல்வது வழக்கம்.
தற்போது, இந்திய மதிப்பில் சுமார் ரூ.4.39 கோடி வரும் புதிய போர்ஷ் 911 ஜிடி3 ஆர்எஸ் (Porsche 911 GT3 RS) வாங்கியுள்ளார். இதனை உறுதிசெய்யும் விதமாக, அவரது மனைவியும் முன்னாள் நடிகையுமான ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். இதேகாரை தெலுங்கு நடிகரான நாகச் சைதன்யாவும் வைத்திக்கிறார் என்பது கூடுதல் தகவல் ஆகும். இதற்கு முன் 9 கோடி ரூபாய் மதிப்புள்ள ஃபெராரி (Ferrari) காரை அஜித்குமார் வாங்கியது குறிப்பிடத்தக்கது.
போர்ஷ் 911 GT3 RS அதிவேக ரேஸ் கார் குறித்த முழுமையான விவரங்கள்:
போர்ஷ் 911 GT3 RS என்பது உலகின் முன்னணி ஸ்போர்ட்ஸ் கார்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த கார், ரேஸ் ட்ராக் மற்றும் சாலைகளில் கூட கையாளத்தக்க வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரின் தொழில்நுட்ப விவரங்களையும், அதனால் ஏற்படும் அனுபவத்தையும் விரிவாகப் பார்ப்போம்.
எஞ்சின் மற்றும் செயல்திறன்:
- எஞ்சின்: 4.0 லிட்டர் நேரடி இயங்கும் ஃபிளாட்-சிக்ஸ் இன்ஜின்
- பவர்: சுமார் 518 ஹார்ஸ் பவர் (bhp)
- டார்க்: சுமார் 470 நியூட்டன் மீட்டர் (Nm)
- டிரான்ஸ்மிஷன்: 7-ஸ்பீடு PDK டூயல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக்
- 0-100 கிமீ வேகம்: சுமார் 3.2 விநாடி
- அதிகபட்ச வேகம்: மணிக்கு சுமார் 312 கிலோமீட்டர் (கிமீ)
இதையும் படிங்க: விஜய், அஜித் போன் கால், 'கோட்' படம் பற்றி அஜித் கூறியது என்ன?... வெங்கட் பிரபு கூறிய சுவாரஸ்ய தகவல்கள்!
போர்ஷ் 911 GT3 RS கார், இதன் 4.0 லிட்டர், நேரடி இயங்கும் ஃபிளாட்-சிக்ஸ் இன்ஜினின் உதவியால் மிகுந்த வேகத்தையும், ஆற்றலையும் வெளிப்படுத்தும். இதன் 7-ஸ்பீடு PDK டிரான்ஸ்மிஷன் கியர் மாற்றங்கள் வேகமாகவும், துல்லியமாகவும் நடைபெறுகிறது. மேலும் மிக குறுகிய நேரத்தில் கார் அதிகபட்ச வேகத்தை அடைய உதவுகிறது.
வடிவமைப்பு:
- உடல் அமைப்பு: கார்பன் ஃபைபர் போன்ற இலகு பொருள்கள்
- ஏரோடைனமிக்ஸ்: பெரிய பின்புற துரும்பு, முன் ஸ்ப்ளிட்டர் மற்றும் ஆர்வத்தை தூண்டும் டிஃப்யூஸர்
- சக்கரங்கள்: முன் பக்கத்தில் 20 இன்ச், பின்புறத்தில் 21 இன்ச் சக்கரங்கள்