தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Tamil Nadu News - தமிழ்நாடு செய்திகள் இன்று நேரலை Sat Nov 09 2024 சமீபத்திய செய்திகள்

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

By Tamil Nadu Live News Desk

Published : Nov 9, 2024, 8:00 AM IST

Updated : Nov 9, 2024, 11:03 PM IST

11:02 PM, 09 Nov 2024 (IST)

வாயு கசிவு விவகாரம்: மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் 100 மணி நேர சோதனை நிறைவு.. பள்ளி திறப்பு எப்போது?

சென்னை திருவொற்றியூரில் வாயு கசிவு வெளியானதாகக் கூறப்படும் தனியார் பள்ளியில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் 100 மணி நேர சோதனை நிறைவுற்ற நிலையில், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என பெற்றோர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. | Read More

ETV Bharat Live Updates - மாசு கட்டுபாட்டு வாரியம்

10:24 PM, 09 Nov 2024 (IST)

"234 சட்டமன்றத் தொகுதிக்கும் ஒரு மாவட்டச் செயலாளர்" - திருமாவளவன் தேர்தல் வியூகம் என்ன?

அம்பேத்கர் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் யாரெல்லாம் பங்கேற்கிறார்கள் என்பதை பதிப்பகம் தான் அறிவிக்க வேண்டும். ஆனால் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டுமென சிலர் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates - VIDUTHALAI CHIRUTHAIGAL KATCHI

10:11 PM, 09 Nov 2024 (IST)

முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது..விண்ணப்பிப்பது எப்படி? - முழு விவரம் இதோ!

முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விரிவான விதிமுறைகள் தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates - STATE SPORTS AWARD

09:19 PM, 09 Nov 2024 (IST)

கரூரில் மனைவி மற்றும் மகளை கொன்று விட்டு கணவர் தற்கொலை முயற்சி!

கரூரில் நோய்த்தொற்றால், 6 மாத கர்ப்பிணியான மனைவி மற்றும் 6 வயது மகளை கொன்று விட்டு கணவரும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. | Read More

ETV Bharat Live Updates - கரூர் கொலை வழக்கு

09:16 PM, 09 Nov 2024 (IST)

போதைப் பொருள் விற்பனை செய்ததாக சீரியல் நடிகை மீனா கைது!

மெத்தப்பெட்டமைன் எனும் போதைப் பொருளை விற்பனை செய்ததாக சீரியல் நடிகை மீனா கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். | Read More

ETV Bharat Live Updates - METHAMPHETAMINE

06:12 PM, 09 Nov 2024 (IST)

வார்டு அளவில் மாணவர், இளைஞர்களை இழுக்க முடிவு.. ஆட்டத்தை தொடங்கிய செந்தில் பாலாஜி..!

திமுக மாணவர் அணி தான் தமிழகம் மாணவர்களுக்கு அரணாக விளங்குகிறது என்று கரூரில் நடைபெற்ற திமுக மாணவர் அணி கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசினார். | Read More

ETV Bharat Live Updates - DMK STUDENT WING

06:03 PM, 09 Nov 2024 (IST)

"திமுக கூட்டணி உடைய அதிக வாய்ப்பு" - தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு!

திமுக கூட்டணியில் உள்ளவர்கள் வெளியேறுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது எனவும், மக்களிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயற்கையான வரவேற்பை தான் பெற்று வருகிறார் என முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates - தமிழிசை செளந்தரராஜன்

06:05 PM, 09 Nov 2024 (IST)

ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: குன்னூர் சாலையில் உடைத்து அகற்றப்பட்ட பாறைகள்!

நீலகிரி குன்னூர் சாலையில் ராட்சத பாறை அந்தரத்தில் தொங்கியதை 7ஆம் தேதி ஈடிவி பாரத் வெளியிட்டது. அதன் எதிரொலியாக தற்போது அந்த பாறைகள் உடைத்து அகற்றப்பட்டுள்ளன. | Read More

ETV Bharat Live Updates - COONOOR

06:02 PM, 09 Nov 2024 (IST)

“தேர்தலில் பட்டியல் சமூகத்தினர் பதிலடி தருவோம்”- அறிவுச்சமூகம் அமைப்பினர் ஆர்பாட்டம்!

தமிழக அரசு தொடர்ந்து பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான விரோதப் போக்கினைக் கடைப்பிடித்து வருகிறது அதற்கு நாங்கள் வருகிற தேர்தலில் பதிலடி தருவோம் என அறிவுச்சமூகம் அமைப்பின் தலைவர் தமிழ் முதல்வன் கூறியுள்ளார். | Read More

ETV Bharat Live Updates - SC ST OFFICERS PROMOTION PROTEST

05:57 PM, 09 Nov 2024 (IST)

நிர்வாண வீடியோவை வைத்து மிரட்டிய இன்ஸ்டாகிராம் நண்பர்..வளசரவாக்கம் போலீசார் விசாரணை!

வளசரவாக்கத்தில் நிர்வாண வீடியோவை வைத்து இன்ஸ்டாகிராம் நண்பர் பணம் கேட்டு மிரட்டுவதாக இளம்பெண் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. | Read More

ETV Bharat Live Updates - வளசரவாக்கம் போலீசார்

05:59 PM, 09 Nov 2024 (IST)

வீட்டு மனை விற்பனையில் மோசடி? கோவையில் ரியல் எஸ்டேட் அதிபர் கைது!

தவணை முறையில் பணம் கட்டினால் வீட்டுமனை தருவதாகக் கூறி மோசடி செய்ததாக ரியல் எஸ்டேட் அதிபர் தங்கராஜை, கோவை போலீசார் கைது செய்துள்ளனர். | Read More

ETV Bharat Live Updates - வீட்டு மனை விற்பனை

05:13 PM, 09 Nov 2024 (IST)

"தேவாரம், திருவாசகத்தை பாடப் புத்தகத்தில் சேர்க்க வேண்டும்".. தமிழக அரசுக்கு ஓதுவா மூர்த்திகள் கோரிக்கை!

"தேவாரம், திருவாசகத்தை பள்ளி பாட புத்தகத்திலும் சேர்க்க வேண்டும்" என தமிழ்நாடு அரசிற்கு ஓதுவா மூர்த்திகள் கோரிக்கை விடுத்துள்ளனர். | Read More

ETV Bharat Live Updates - சதய விழா

05:13 PM, 09 Nov 2024 (IST)

"டிரக் தமிழ்நாடு திட்டத்தை கைவிட உத்தரவிடுக" - சென்னை ஐகோர்ட்டில் விலங்குகள் நல ஆர்வலர் மனுத்தாக்கல்!

தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்துள்ள 'Trek Tamilnadu' என்ற மலையேற்ற பயணத் திட்டத்தை கைவிட அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் வழக்கு தொடர்ந்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates - டிரக் தமிழ்நாடு

04:23 PM, 09 Nov 2024 (IST)

தாயை கயிற்றால் இறுக்கி கொல்ல முயன்ற மகள்.. அலறிய மூதாட்டி.. பதறிய பொதுமக்கள்.. சென்னை அதிர்ச்சி!

சென்னையில் சொத்து பிரச்சனையில் தாயை சரமாரியாக தாக்கி கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்ற மகள் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். | Read More

ETV Bharat Live Updates - DAUGHTER ASSAULTED MOTHER

04:17 PM, 09 Nov 2024 (IST)

'வியாசர்பாடி வாசிக்கிறது' ராணுவ விஞ்ஞானி நிறுவிய 'கலாம்-சபா' நூலகம்.. மயில்சாமி அண்ணாதுரை திறந்துவைத்தார்!

சென்னை வியாசர்பாடி மல்லிகைப்பூ காலனியில், ராணுவ விஞ்ஞானி டில்லிபாபு நிறுவிய ‘கலாம் - சபா’ நூலகம், வழிகாட்டி மையத்தை விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை திறந்து வைத்தார். | Read More

ETV Bharat Live Updates - KALAM SABHA LIBRARY

04:10 PM, 09 Nov 2024 (IST)

“திடீர்னு காலி செய்ய சொன்னால் எங்கே போவோம்?” கண்ணீர் மல்க கோரிக்கை வைக்கும் மதுரை மக்கள்...

மதுரை செல்லூரில் உள்ள பீ.பீ.குளம், முல்லை நகர் பகுதியில் மதுரை மாவட்ட நிர்வாகம் நீர்வளத்துறையின் மூலமாக நீர்நிலையை ஒட்டியுள்ள வீடுகள், கடைகளை காலி செய்ய எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டியதையடுத்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். | Read More

ETV Bharat Live Updates - மதுரை பீபீ குளம் முல்லை நகர்

04:11 PM, 09 Nov 2024 (IST)

இன்ஸ்டாகிராமில் 4 நாட்களே பழக்கம்.. ட்ரிப்-க்கு சென்ற 16வயது சிறுமி பரிதாபமாக பலி!

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, வீட்டிற்கு தெரியாமல் இன்ஸ்டாகிராம் நண்பருடன் ட்ரீப்-க்கு சென்ற இடத்தில் இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில், சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். | Read More

ETV Bharat Live Updates - இன்ஸ்டாகிராம்

04:07 PM, 09 Nov 2024 (IST)

"வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தால் ஆன மணி கண்டெடுப்பு" - அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் பதிவு!

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டையில் நடைபெறும் மூன்றாம் கட்ட அகழாய்வில், தங்கத்தால் ஆன மணி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது என நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். | Read More

ETV Bharat Live Updates - தங்கம் தென்னரசு

03:33 PM, 09 Nov 2024 (IST)

வேளச்சேரி 'நன்னீர் குளம்'... ஆறு மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு வரும்.. மழை நீரை தேக்கி நீர் ஆதாரமாக மாறும் - அமைச்சர் உறுதி!

வேளச்சேரியில் மழைநீர் தேக்கி வைக்கும் புதிய நன்னீர் குளம் ஆறு மாத காலத்தில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates - VELACHERY WATER LOGGING AREAS

02:35 PM, 09 Nov 2024 (IST)

மருத்துவர்கள், மருத்துவமனைகள் ஊடகங்களில் விளம்பரம் செய்ய தடையா? ஐகோர்ட் உத்தரவு!

மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் ஊடகங்களில் விளம்பரம் செய்வதற்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates - HOSPITALS ADVERTISEMENT ISSUE

02:27 PM, 09 Nov 2024 (IST)

"9 ஆண்டுகளாக வழங்கப்படாத தொல்காப்பியர் விருதுகளை வழங்குக" - ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ் செம்மொழிக்கான சேவை மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டோருக்கு கடந்த 9 ஆண்டுகளாக வழங்கப்படாத தொல்காப்பியர், குறள் பீடம் உள்ளிட்ட விருதுகளை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். | Read More

ETV Bharat Live Updates - TOLKAPPIYAR AWARD

02:00 PM, 09 Nov 2024 (IST)

19 ஆயிரம் புதிய ஆசிரியர்களை கொண்டு வர முடிவு... அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

இந்தியாவில் எத்தனை மாநிலங்களில் ஆசிரியர்கள் இருந்தாலும், தமிழகத்தை சேர்ந்த ஆசிரியர்களை யாராலும் அடித்துக் கொள்ள முடியாது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். | Read More

ETV Bharat Live Updates - NEW TEACHERS

01:39 PM, 09 Nov 2024 (IST)

தமிழ்நாட்டுக்கு ரூ.1 லட்சம் கோடி வருமான வரி இலக்கு!

நடப்பு நிதியாண்டில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 1 லட்சத்து 38 ஆயிரத்து 820 கோடி வருமான வரி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை முதன்மை ஆணையர் டி.வசந்தன் தெரிவித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates - INCOME TAX

01:14 PM, 09 Nov 2024 (IST)

காருக்குள் ரகசிய அறை அமைத்து 136 கிலோ கஞ்சா கடத்தல்.. தஞ்சையில் நான்கு பேர் கைது..!

தஞ்சையில் கார்களில் ரகசிய அறை அமைத்து 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சா கடத்திய நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். | Read More

ETV Bharat Live Updates - SMUGGLING GANJA

12:39 PM, 09 Nov 2024 (IST)

திருமண நாளில் பறிபோன பெண்ணின் உயிர்... பரிதவிக்கும் மூன்று பிள்ளைகள்..! தஞ்சையில் சோகம்..!

தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே திருமண நாளில் மின்சாரம் தாக்கி பெண் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. | Read More

ETV Bharat Live Updates - WOMAN ELECTROCUTED

11:52 AM, 09 Nov 2024 (IST)

“2026 தேர்தலில் நிச்சயம் திருமா எங்கள் கூட்டணியில்தான் இருப்பார்”- அமைச்சர் ரகுபதி பேட்டி

எடப்பாடி பழனிச்சாமி எப்போதும் பகல் கனவு கண்டு கொண்டிருப்பவர் நிச்சியமாக 2026 தேர்தலில் எங்களது கூட்டணி வென்று மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக முதலமைச்சராகி வரலாறு படைப்பார் என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். | Read More

ETV Bharat Live Updates - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

11:44 AM, 09 Nov 2024 (IST)

'அமரன்' திரைப்பட எதிர்ப்பு; 'தமிழ்நாடு வன்முறைக்காடாகி விடும்' - வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிளக்கத் துடிக்கும் பயங்கரவாதிகள் 'மண்ணுரிமைப் போராளிகள்' என்று போற்றுபவர்கள் மீது தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். | Read More

ETV Bharat Live Updates - VANATHI SRINIVASAN ON AMARAN

11:23 AM, 09 Nov 2024 (IST)

"எந்த அணையையும் தூர்வார முடியாது" - அமைச்சர் துரைமுருகன்!

மேட்டூர் உள்ளிட்ட எந்த அணையையும் தூர்வார முடியாது என்று கூறிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அதற்கான விளக்கத்தையும் அளித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates - எடப்பாடி பழனிசாமி

10:54 AM, 09 Nov 2024 (IST)

"அருந்ததியர் 3% உள் ஒதுக்கீட்டை ரத்து செய்க" - ஆளுநரிடம் கிருஷ்ணசாமி மனு!

அருந்ததியர் சமூகத்தினருக்கு 3 சதவீதம் தனி ஒதுக்கீடு கொடுங்கள். ஆனால், 3 சதவீத உள் ஒதுக்கீட்டை வேண்டாம், அதனை ரத்து செய்ய வேண்டும் என ஆளுநரிடம் மனு அளித்துள்ளதாக கிருஷ்ணசாமி தெரிவித்தார். | Read More

ETV Bharat Live Updates - PUTHIYA TAMILAGAM PARTY

10:50 AM, 09 Nov 2024 (IST)

சேலம் அருகே கவிழ்ந்து தீ பிடித்து எரிந்த ஆம்னி பேருந்து.. ஒருவர் பலி.. உயிர் தப்பிய பயணிகள்..!

சேலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அதிக வேகத்தின் காரணமாக முன்னாள் சென்ற இரண்டு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்திய ஆம்னி பேருந்து கவிழ்ந்து தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. | Read More

ETV Bharat Live Updates - BUS ACCIDENT NEAR SALEM

10:16 AM, 09 Nov 2024 (IST)

கல்லூரி ஆசிரியர்களுக்கு இணையவழியில் இடமாறுதல் கவுன்சிலிங் - உயர் கல்வித்துறை அறிவிப்பு!

அரசு கல்லூரி பேராசிரியர்களுக்கு பொது இடமாறுதல் கலந்தாய்வு இணையவழி மூலம் மீண்டும் நடத்தப்படும் என உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது. | Read More

ETV Bharat Live Updates - TEACHER TRANSFER

10:08 AM, 09 Nov 2024 (IST)

சென்னை குற்ற நிகழ்வுகள்: எதிர் வீட்டுகாரர் தாக்கி கொலை; 20 சவரனை அபேஸ் செய்த கடை ஊழியர்!

சென்னையில் நேற்று முதல் இன்று வரை நடந்த குற்ற சம்பவங்களை சுருக்கமாக காணுங்கள். | Read More

ETV Bharat Live Updates - சென்னை குற்றச்செய்திகள்

10:01 AM, 09 Nov 2024 (IST)

கோயில் பூசாரி மீது பாய்ந்த போக்சோ; 17 வயது மாணவி கர்ப்பம்!

படிக்கச் சென்ற பள்ளி மாணவியை மிரட்டி பலமுறை பாலியல் வன்புணர்வு செய்த பூசாரியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். | Read More

ETV Bharat Live Updates - போக்சோ வழக்கு

08:24 AM, 09 Nov 2024 (IST)

கந்த சஷ்டி விழாவின் போது கூடுதல் கட்டணம் வசூல்? பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

திருச்செந்தூர் சுப்பிரமணிய கோயில் கந்த சஷ்டி விழாவில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வது தொடர்பான விசாரணையில், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கால அவகாசம் கோரியதால் வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates - HIGH COURT MADURAI BENCH

08:25 AM, 09 Nov 2024 (IST)

ஓய்வுபெற்ற நீதிபதிகளின் எண்ணிக்கை விவரங்கள்; பதிவுத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகளின் எண்ணிக்கை குறித்த புள்ளி விவரங்களை சேகரிக்க பதிவுத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates - ஓய்வுபெற்ற நீதிபதி

07:36 AM, 09 Nov 2024 (IST)

இ-பாஸ் இல்லாமல் ஊட்டி, கொடைகானலுக்கு போக வேண்டாம் - நீதிமன்றம் உத்தரவு!

ஊட்டி, கொடைக்கானலுக்கு இ-பாஸ் (E-pass) பெற்ற வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates - EPASS SYSTEM

06:58 AM, 09 Nov 2024 (IST)

காசிமேடு மீனவர் படகில் சிக்கிய ராக்கெட் லாஞ்சர்!

ஆழ்கடலில் மீன்பிடிக்க கொண்டிருந்த காசிமேடு மீனவர்கள் வலையில் ராக்கெட் லாஞ்சர் சிக்கியுள்ளது. இது தொடர்பான விசாரணையை மீன்வளத்துறை அலுவலர்களும், கடலோரக் காவல் படையும் மேற்கொண்டுள்ளனர். | Read More

ETV Bharat Live Updates - CHENNAI KASIMEDU
Last Updated : Nov 9, 2024, 11:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details