அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் களம் கண்ட கார்த்தி என்பவர் இன்று நடைபெறும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 126 பனியன் அணிந்து விளையாடி வருகிறார். மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் ஏதேனும் ஒரு ஜல்லிக்கட்டு போட்டியில் தான் வீரர்கள் அல்லது காளைகளோ பங்கேற்க அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்த நிலையில், அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றிய பிறகு இன்று மீண்டும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 'முடிந்தால் தொட்டுப்பார்' - வீரர்களுக்கு சவால் விடும் காளைகள்! - ALANGANALLUR JALLIKATTU 2025 LIVE
Published : Jan 16, 2025, 7:29 AM IST
மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்தபடும் அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டைத் தொடர்ந்து உலக புகழ்பெற்ற அலங்காநல்லூரில் இன்று (ஜனவரி 16) ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.
ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 5 ஆயிரத்து 786 காளைகளும், 1698 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்துள்ள நிலையில், அவர்கள் ஆன்லைன் பதிவு சான்றிதழை காண்பிக்கும் போது டோக்கன் வழங்கப்படும் என்றும் அதே நேரத்தில் மருத்துவ பரிசோதனை, எடை சரிபார்ப்பு உள்ளிட்டவற்றுக்குப் பிறகு மாடு பிடி வீரர்களுக்கும் ஜல்லிக்கட்டு காளைகளும் களமிறக்கப்படுவர் என்றும் விழாக்குழு தெரிவித்துள்ளது.
இந்த போட்டியில் வெற்றிபெறும் காளைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் சார்பில் டிராக்டர் பரிசும், வெற்றுபெறும் மாடுபிடி வீரருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் காரும் பரிசாக வழங்கப்படுகிறது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மதுரை மட்டுமல்லாது திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு காளைகளும் மாடுபிடி வீரர்களும், ஜல்லிக்கட்டு பார்வையாளர்களும் அதிகாலை முதலே அலங்காநல்லுாருக்கு வருகை தந்துள்ளனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை சுமார் 7:30 மணியளவில் துணை முதலமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்து பார்வையிடுவதுடன், களத்தில் வெற்றி பெறும் மாடுபிடி வீரர்களுக்கும் காளை உரிமையாளர்களுக்கும் மோதிரம், தங்க நாணயம் உள்ளிட்ட பரிசுகளையும் அவர் வழங்குகிறார் என போட்டிக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கிய வீரருக்கும், பிடிபடாத சிறந்த காளைக்கும் கார்கள் பரிசாக வழங்கப்படுவதுடன் தங்கம் வெள்ளி காசுகள், சைக்கிள், பீரோ, மெத்தை உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள், சில்வர் பாத்திரங்கள் என ஏராளமான பரிசுப் பொருட்கள் வழங்கப்படவுள்ளது.
LIVE FEED
விதியை மீறி போட்டியில் பங்கேற்ற வீரரால் பரபரப்பு!
அலங்காநல்லூருக்கு படையெடுத்த வெளிநாட்டவர்கள்!
ஆஸ்திரேலிய அமைச்சர் உட்பட இஸ்ரேல், கலிபோர்னியா என பல்வேறு நாட்டவர்கள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு படையெடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி, இலங்கை முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான் மேடைக்கு வருகை தந்துள்ளார்.
இரண்டாம் சுற்று முடிவு!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின் இரண்டாம் சுற்றில் மொத்தம் 211 காளைகளில் 101 காளைகள் களம் கண்டனர். மொத்தம் 43 காளைகளில் 29 காளைகள் பிடிபட்டுள்ளனர்.
மேலும், இறுதிச்சுற்றுக்கு (அபி சித்தர், பூவந்தி ( பச்சை - 72) - 9 காளைகள்; விஜய், ஏனாதி (பச்சை - 80) - 6 காளைகள்; விக்னேஷ், மடப்புரம் (பச்சை - 66) - 4 காளைகள்; அருண்குமார், வாவிடைமருதூர் (பச்சை - 91) - 4 காளைகள்) நான்கு பேர் தகுதி பெற்றுள்ளனர்.
இரண்டாம் சுற்றில் இருவர் காயம்!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியின் இரண்டாவது சுற்றில் மாடுபிடி வீரர்கள் 4 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 3, பார்வையாளர் ஒருவர் என மொத்தம் எட்டு பேர் காயடைந்துள்ளனர். இதில் ஒருவர் மேல்சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முதல் சுற்று முடிவு: 4 வீரர்கள் இறுதிச்சுற்றுக்கு தகுதி!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின் முதல் சுற்றில் சூர்யா ( மஞ்சள் - 3) - 3 காளைகள்; தினேஷ் ( மஞ்சள் -50) - 2 காளைகள்; கண்ணன் (மஞ்சள் - 24) - 2 காளைகள் ; கௌதம் (மஞ்சள் - 28) - 2 காளைகள் ஆகிய நான்கு பேரும் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் காளை வெற்றி!
ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை, மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் ஆட்டம் காட்டிச் சென்று தங்க மோதிரத்தை பரிசாகத் தட்டிச் சென்றது.
நடிகர் சூரி மாடு பிடிபடவில்லை!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் நடிகர் சூரியின் மாடு பங்கேற்றது. அப்போது அந்த காளையை அடக்கும் நபருக்கு சைக்கிள் பரிசு என அறிவிக்கப்பட்ட நிலையில், சூரியின் மாடு யாருக்கும் பிடிபடாமல் சென்றது.
காலை 8.30 நிலவரம்!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 7 மாடு பிடி வீரர்கள் உடல் எடை குறைவு காரணமாக உடல் தகுதி இல்லை என வெளியேற்றப்பட்ட நிலையில், 150 மாடு பிடி வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
கோயில் காளைகளுக்கு தங்க காசு!
போட்டி தொடங்கியதும் முதலில் கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டது. அதில் முதலாவதாக வந்த அருள்மிகு கருப்பசாமி கோயில் காளைக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தங்க காசினை வழங்கினார்.
மகனுடன் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் உதயநிதி!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இவருடன் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர் உடனிருந்தனர்.
துணை முதலமைச்சருக்காகக் காத்திருப்பு!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காலை 7 மணிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்படும் என்று விழாக் குழு தெரிவித்திருந்த நிலையில், தற்போது அவர் வருகைக்காக காளைகளும், மாடுபிடி வீரர்களும் காத்திருக்கின்றனர்.
கோயில் காளைகள் அவிழ்ப்பு?
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்குவதற்கு முன்னதாக மரியாதைக் காளைகள் அவிழ்க்கப்படும். அந்த வகையில், அலங்காநல்லூர் முனியாண்டி சாமி கோயில், அரியமலை கருப்பசாமி கோயில் காளை, வலசை கருப்பசாமி காளை என மூன்று மரியாதை காளைகள் அவிழ்க்கப்படும். இதை மாடுபிடி வீரர்கள் யாரும் அடக்க முற்பட கூடாது என்பது விதியாக உள்ளது.
மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்பு!
முதற்சுற்றில் கலந்துகொள்ளும் 50 மாடுபிடி வீரர்கள் மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில் நெறிமுறைகளுடன் தாங்கள் விளையாடுவோம் எனவும், காளைகளுக்கு எந்தவித அச்சுறுத்தலையும் கொடுக்க மாட்டோம் எனவும் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்த நேரத்தில் திமுக மக்களவை உறுப்பினர் தங்கத் தமிழ்செல்வன் உடனிருந்தார்.