போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சந்தித்துப் பேச வந்த தவெக தலைவர் விஜய், 5 நிமிடங்கள் கூட முழுமையாக பேசாமல் புறப்பட்டதால் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
Live Update: போராடும் மக்களை சந்தித்த தவெக தலைவர் விஜய்.. கூறியது என்ன? - TVK VIJAY MEET PARANDUR PEOPLE
Published : Jan 20, 2025, 9:13 AM IST
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் சென்னையின் இரண்டாவது பசுமை வெளி விமான நிலையம் ரூ.20,000 கோடியில் அமைக்கும் திட்டத்தை இரண்டு ஆண்டுக்கு முன்பு மத்திய மாநில கொண்டு வந்தது. அதற்காக மாநில அரசு 5000 ஏக்கர் இடத்தை தேர்வு செய்து நிலத்தை கையகப்படுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், பரந்தூர் அருகில் உள்ள ஏகனாபுரம், நாகப்பட்டு, நெல்வாய் உள்ளிட்ட கிராம மக்கள் விளைநிலங்களையும், குடியிருப்பு பகுதிகளிலும் "விமான நிலையம் அமைக்க வழங்க மாட்டோம்" என எதிர்ப்பு தெரிவித்து கடந்த 910-வது நாளாக தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மேலும் ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களிலும் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்றி போராடி வருகின்றனர்.
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராடும் கிராம மக்களை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சந்தித்து தங்களது ஆதரவுகளை தெரிவித்து வந்த நிலையில், அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய் நடத்திய முதல் மாநாட்டில் பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் ஏகனாபுரம் கிராம மக்களுக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் அதன் பிறகு தமிழக வெற்றி கழகம் சார்பில் பரந்தூர் விமான நிலையம் எதிர்ப்பு குழுக்கு ஆதரவு தெரிவித்து எந்த ஒரு போராட்டமும் நடத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இன்று (ஜன.20) பரந்தூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் விமான நிலைய எதிர்ப்பு குழுவைச் சேர்ந்த ஏகனாபுரம் கிராம மக்களை சந்தித்து ஆதரவு தெரிவிக்கவுள்ளார்.
LIVE FEED
5 நிமிடங்கள் கூட முழுமையாக பேசாத விஜய்!
ஏகனாபுரத்திற்கு வர அனுமதி மறுப்பு!
பரந்தூரில் போராடும் மக்களை ஏகனாபுரத்திற்கு உள்ளே வந்து சந்திக்க நினைத்தேன். ஆனால், அதற்கு அனுமதி தரவில்லை. ஒரு துண்டு சீட்டு வழங்கக் கூட அனுமதி மறுக்கப்பட்டது. நம்பிக்கை உடன் இருங்கள் நல்லது நடக்கும். மீண்டும் சந்திக்கும் வரை நன்றி வணக்கம் எனக் கூறி தவெக தலைவர் விஜய் உரையை முடித்தார்.
வளர்ச்சி என்ற பெயரில் அழிவு? - விஜய்
"வளர்ச்சி தான் மக்களை முன்னேற்றும். ஆனால், வளர்ச்சி என்ற பெயரில் நடக்கும் அழிவு மக்களை மிகவும் பாதிக்கும். நம்பிக்கையை இழந்து விடாதீர்கள். உங்கள் வீட்டுப் பிள்ளையான நானும், தவெக தோழர்களும் உங்களுக்காக சட்டத்திற்குட்பட்டு எல்லா வழிகளிலும் உறுதியாக இருப்பேன்" என்றார்.
எதிர்கட்சியாக இருந்த போது மட்டும் ஆதரவா?
"எதிர்கட்சியாக இருக்கும் போது விவசாயிகளுக்கு ஆதரவு, ஆளுங்கட்சியாக இருக்கும் போது எதிர்ப்பா? உங்கள் நாடகத்தை பார்த்து மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள். உங்கள் வசதிக்காக மக்களுடன் நிற்பது, நாடமாடுவதும்? நம்புகிற மாதிரி நாடகம் ஆடுவதில் நீங்கள் கில்லாடிகள் ஆட்சே" என விஜய் விமர்சனம் செய்தார்.
"ஆட்சியாளர்களுக்கு ஏதோ லாபம் உள்ளது" - விஜய்
"அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராகத் தமிழ்நாடு அரசு தீர்மானம் கொண்டு வந்தது வரவேற்கத்தக்கது. அதேபோன்ற நிலைப்பாட்டைத் தானே பரந்தூர் பிரச்சனையிலும் எடுத்திருக்க வேண்டும். அரிட்டாபட்டி போன்று பரந்தூர் மக்களும் நம்ம மக்கள் தானே. அப்படி தான் ஒரு அரசாங்கம் யோசிக்க வேண்டும். இந்த விமான நிலையத்தையும் தாண்டி, ஆட்சியாளர்களுக்கு ஏதோ லாபம் உள்ளது" என்றார்.
"மக்கள் விரோத அரசு" - விஜய்
"ஆண்டுதோறும் சென்னை மழையில் தத்தளிக்கக் காரணம் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள நீர் நிலைகள், சதுப்புநிலங்களை அழித்ததுதான் என ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், 90 சதவீதம் விவசாய நிலங்களை அழித்து விமான நிலையத்தைக் கொண்டு வர நினைக்கும் அரசு, மக்கள் விரோத அரசாகத் தான் இருக்க முடியும்" என்றார்.
நான் வளர்ச்சிக்கு எதிரானவன் இல்லை - விஜய்
நான் வளர்ச்சிக்கு எதிரானவன் கிடையாது. ஏர்போர்ட் வரக்கூடாது என்று கூறவில்லை. ஆனால், பரந்தூரில் வரக்கூடாது என்று தான் கூறுகிறேன்.
"ஓட்டு அரசியலுக்காக இல்லை" - விஜய்
"முதல் மாநாட்டில் கூறிய கட்சியின் கொள்கையில் ஒன்றுதான், இயற்கை வளம் பாதுகாப்பு. இதனை இங்கு கூறக் காரணம் ஓட்டு அரசியலுக்காக இல்லை. மேலும், விவசாய நிலங்கள் பாதுகாப்பு தீர்மானம், பரந்தூர் திட்டத்தை ஒன்றிய மாநில அரசு கைவிட வேண்டும் எனவும் கூறியிருந்தோம். நம் விவசாயிகள் பாதிக்கும் இந்த திட்டத்துக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம் என தெரிவித்த நிலையில், அதனை உங்கள் முன்னே ஸ்ட்ராங்காக வலியுறுத்துகிறேன்" என்றார்.
விவசாயிகளின் காலடி மண்ணைத் தொட்டுக் கும்பிட்டு பயணம் - தவெக விஜய்
"ஒவ்வொரு வீட்டுக்கும் மிக முக்கியமானவர் வீட்டில் உள்ள பெரியவர்கள், அதேபோல நம் நாட்டுக்கு மிக முக்கியமானவர் உங்களை மாதிரி விவசாயிகள் தான். அதனால், உங்களைப் போன்ற விவசாயிகளின் காலடி மண்ணைத் தொட்டுக் கும்பிட்டு தான், என் பயணத்தைத் துவங்க வேண்டும் என்ற முடிவோடு இருந்தேன். அதற்கான சரியான இடம் பரந்தூர் தான். உங்கள் வீட்டில் ஒரு மகனாக, எனது கள அரசியல் பயணம் இங்கிருந்துதான் துவங்குகிறது" என்றார்.
சிறுவன் ராகுலின் வீடியோ என் மனதை ஏதோ செய்துவிட்டது!
"எல்லோருக்கும் வணக்கம்!. பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக 910 நாட்களுக்கு மேலாக, உங்கள் மண்ணுக்காக போராடி வருகிறீர்கள். இதுகுறித்து, ராகுல் என்ற சிறுவன் பேசியதை கேட்டேன். அதுமனதை ஏதோ செய்துவிட்டது. உடனே உங்கள் எல்லோரையும் பார்த்து, பேசியே ஆக வேண்டும் எனவும், உங்கள் எல்லோர் கூடவே தொடர்ந்து நிற்பேன் எனத் தோணியது" என்றார்.
வந்தடைந்தார் தவெக விஜய்!
பொன்னேரிக்கரையில் உள்ள தனியார் மண்டபத்திற்கு அருகே தவெக தலைவர் விஜய் வந்தடைந்துள்ளார்.
மண்டபத்திற்குள் கூட்ட நெரிசல்!
கிராம மக்கள் மட்டுமல்லாமல் தவெக நிர்வாகிகள், விஜய் ரசிகர்கள் என அனைவரும் தனியார் மண்டபத்தின் உள்ளே வந்துகொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், காவல்துறை அவர்களை தடுத்து உரிய சோதனை செய்து அவர்கள் எந்த பகுதையை சேர்ந்தவர்கள் போன்ற எந்த சோதனைகளையும் செய்யாமல் உள்ளே செல்ல விடுவதால், மண்டபத்தின் உள்ளே கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இளைஞர்கள் பலர் மண்டபத்தின் உள்பகுதிகளில் உள்ள கட்டடத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ள கூரைகள் மீது ஆபத்தான முறையில் அமர்ந்துள்ள நிலையில், இதனையும் காவல்துறை கண்டுகொள்ளாமல் இருந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
"விஜய்க்கு என்றும் நன்றி கடன் பட்டிருப்போம்"
எங்கள் பகுதிக்கு விமான நிலையம் வேண்டாம். அதனால், அரசு வேறு இடத்தை தேர்வு செய்ய வேண்டும். இந்த பிரச்சனைக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மூலம் எங்களுக்கு தீர்வு கிடைத்தால் அவருக்கு என்றும் நன்றி கடன் பட்டிருப்போம் எனத் தெரிவித்த கிராம மக்கள், விஜய் எங்களை சந்திக்க எங்கள் பகுதிக்கு வரவிடாமல் ஆட்சியாளர்கள் காவல்துறை மூலம் தடுத்துள்ளது எனக் குற்றம் சாட்டியுள்ளனர்.
கூடுதலாக 200 போலீசார்!
இன்று காலை வரை 200 போலீசார் பாதுகாப்புப் பணியில் இருந்த நிலையில், பொதுமக்கள் அதிகளவில் வந்து கொண்டிருப்பதால், பரந்தூர், பொன்னேரிக்கரை, கண்ணந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த 200 போலீசார் தடுப்புகளில் கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனால், தற்போது மொத்தம் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சோதனைக்குப் பின் போராட்டக்காரர்கள் அனுமதி - கூடுதலாக 100 போலீசார் வரவழைப்பு!
பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்களுக்கு மட்டுமே போலீசார் அனுமதி அளித்துள்ள நிலையில், அதற்காக 7 சோதனை சாவடி அமைத்து, அவர்களை சோதனை செய்து அனுமதித்து வருகின்றனர். ஏற்கனவே, 135 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், கூடுதலாக 100 போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்
புஸ்ஸி ஆனந்த் வருகை!
தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் நிகழ்ச்சி நடைபெறும் தனியார் மண்டபத்திற்கு வருகை புரிந்துள்ளார். மேலும், முக்கிய கட்சி நிர்வாகிகளும் பரந்தூர் தனியார் மண்டபத்துக்கு வருகை புரிந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, போராட்டக்காரர்களைத் தவிர பொதுமக்கள் சிலர் வருவார்கள் என்பதால், மண்டபத்திற்கு வெளியே பேரிக்காடுகள் தடுப்புகள் அமைத்து குறிப்பிட்ட நபரை மட்டும் நிற்கவைக்கவும் காவல்துறை ஏற்பாடு செய்துள்ளனர்.
பலத்த போலீஸ் பாதுகாப்பு!
இன்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேரடியாக மக்களை சந்தித்து பேசுவதால் பரந்தூர் வீனஸ் தனியார் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 135 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில், ஏகனாபுரம், நாகப்பட்டு, நெல்வாய் ஆகிய 3 கிராமங்களிலிருந்தும் சுமார் 50 வாகனங்களில் 1,600 பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர்.
காவல்துறை விதித்த கட்டுப்பாடுகள்!
பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடும் கிராம மக்கள் மட்டுமே தமிழக வெற்றி கழகம் கட்சித் தலைவர் விஜய் சந்திக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும்; சட்டம் ஒழுங்கை பாதுகாக்க காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், திட்டமிட்டபடி மதியம் 12.30 மணிக்குள் நிகழ்ச்சியை நடத்தி முடிக்க வேண்டும். பொதுமக்களுக்கும், பொதுசொத்திற்கும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் நிகழ்ச்சியை நடத்தி முடிக்க வேண்டும் என நிபந்தனைகள் விதித்து காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.