தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Tamil Nadu News - தமிழ்நாடு செய்திகள் இன்று நேரலை Mon Oct 28 2024 சமீபத்திய செய்திகள் - TAMIL NADU NEWS TODAY MON OCT 28 2024

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

By Tamil Nadu Live News Desk

Published : Oct 28, 2024, 7:50 AM IST

Updated : Oct 28, 2024, 10:28 PM IST

10:27 PM, 28 Oct 2024 (IST)

நெல்லையில் அல்வா மட்டும் அல்ல கை முறுக்கு பேமஸ்.. அமெரிக்கா வரை செல்லும் 'கை முறுக்கு' சிறப்புத் தொகுப்பு!

தீபாவளியை முன்னிட்டு திருநெல்வேலிக்கு பெயர் போன கை முறுக்கு தயார் செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது. இது குறித்து விளக்குகிறது இச்செய்தி தொகுப்பு. | Read More

ETV Bharat Live Updates - TIRUNELVELI

10:04 PM, 28 Oct 2024 (IST)

போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 10 வருடங்கள் கடுங்காவல் தண்டனை!

போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 10 வருடங்கள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.3000 அபராதம் விதித்து தூத்துக்குடி மகிளா நீதிமன்ற நீதிபதி மாதவ ராமானுஜம் உத்தரவிட்டுள்ளார். | Read More

ETV Bharat Live Updates - POCSO CASE

09:40 PM, 28 Oct 2024 (IST)

"விஜய் ஆறுதல் கூட சொல்ல முடியாதா?" - புஸ்ஸி ஆனந்திடம் கொந்தளித்த தவெக நிர்வாகியின் உறவினர்கள்!

திருச்சியைச் சேர்ந்த தவெக நிர்வாகிகள் இருவர் சாலை விபத்தில் உயிரிழந்தனர். இதற்கு விஜய் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என உறவினர்கள் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியுள்ளனர். | Read More

ETV Bharat Live Updates - BUSSY ANAND

09:29 PM, 28 Oct 2024 (IST)

சென்னை கடற்கரை - வேளச்சேரிக்கு நாளை முதல் மின்சார ரயில்கள் இயக்கம்

சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு செல்லும் மின்சார ரயில்கள் சேவை நாளை முதல் துவங்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. | Read More

ETV Bharat Live Updates - கடற்கரை டூ வேளச்சேரி ரயில்

09:30 PM, 28 Oct 2024 (IST)

"விஜய் மாநாட்டில் கூட்டம் சேர உதயநிதி தான் காரணம்" - ஆர்.பி.உதயகுமார் கூறிய விளக்கம் என்ன?

தமிழக வெற்றிக் கழகத்தால் அதிமுகவுக்கு எள் முனையளவு கூட பாதிப்பில்லை, ஆளும் கட்சியான திமுகவுக்கு தான் தவெக பாதிப்பாக இருக்க போகிறது என அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். | Read More

ETV Bharat Live Updates - RB UDHAYAKUMAR

09:31 PM, 28 Oct 2024 (IST)

சேலம் இரும்பாலை தொழிலாளர்கள் திடீர் போராட்டம்.. 1500 டன் உற்பத்தி பாதிப்பு!

சேலம் இரும்பாலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் 1500 டன் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates - சேலம்

09:25 PM, 28 Oct 2024 (IST)

போதைப்பொருள் கடத்தல் வழக்கு: இயக்குனர் அமீர், ஜாபர் சாதிக் ஆஜராக உத்தரவு

சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் ஜாபர் சாதிக் மற்றும் இயக்குனர் அமீர் உள்ளிட்டோர் நவம்பர் 11ஆம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates - JAFFER SADIQ

07:12 PM, 28 Oct 2024 (IST)

தீபாவளிக்கு புத்தாடை வாங்கிவிட்டு வீடு திரும்பிய தந்தை, மகள் விபத்தில் பலி.. திருவாரூர் அருகே சோகம்!

திருவாரூர் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்தில், தந்தை, மகள் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். | Read More

ETV Bharat Live Updates - திருவாரூர் விபத்து

06:48 PM, 28 Oct 2024 (IST)

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் போலி நீட் சான்றிதழ் அளித்து சேர முயன்ற ஹிமாச்சல் மாணவர் கைது!

ராமநாதபுரத்தில் தற்காலிகமாக இயங்கி வரும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்வதற்காக, போலியான நீட் மதிப்பெண் சான்றிதழுடன் வந்த இளைஞர் கைது. | Read More

ETV Bharat Live Updates - MADURAI AIIMS

06:40 PM, 28 Oct 2024 (IST)

குரூப்-4 காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 9491-ஆக உயர்வு - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

குரூப்-4 காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 9,491-ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. | Read More

ETV Bharat Live Updates - தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

06:02 PM, 28 Oct 2024 (IST)

மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழ் தேர்விலிருந்து விலக்கு..தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

காதுகேளாத, வாய் பேச முடியாத தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய உதவிப்பொறியாளருக்கு தமிழ் மொழித் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates - HOUSING BOARD ASSISTANT ENGINEER

06:03 PM, 28 Oct 2024 (IST)

உயர் கல்வியில் மாணவர்களுக்கான சவால்கள்? - ஐஐடி மாணவர்களின் மாநாடு

மாணவர்களின் மாநாடு, பிரதிநிதிகளிடையே நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தியது மட்டுமின்றி, ஐஐடி வளாகங்களில் நிலவிவரும் முக்கிய பிரச்சனைகளுக்கு திறம்பட தீர்வு காண்பதில் ஒருமித்தகருத்து ஏற்பட்டுள்ளது என ஐஐடி இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates - சென்னை

05:59 PM, 28 Oct 2024 (IST)

அதிகார ஆசை காட்டும் விஜய்! விடுதலை சிறுத்தைகள் நிலைப்பாடு என்ன?

ஆட்சியில் அதிகாரம் என்பதை திமுகவோ, அதிமுகவோ கூறினால் அதில் ஒரு தாக்கம் இருக்கும் என விஜயின் அழைப்பு குறித்து வி.சி.க. பதிலளிக்கிறது. | Read More

ETV Bharat Live Updates - VIJAY SPEECH

05:59 PM, 28 Oct 2024 (IST)

"200 தொகுதிகளில் வெல்ல வேண்டும்" - 2026 க்கு டார்கெட் ஃபிக்ஸ் செய்த ஸ்டாலின்.

2026 சட்டமன்றத் தேர்தலுக்காக தொகுதிவாரியாக பார்வையாளர்களை நியமித்து திமுக தேர்தல் பணியை தொடங்கியிருக்கும் நிலையில் இவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருக்கிறார். | Read More

ETV Bharat Live Updates - முதலமைச்சர் ஸ்டாலின்

05:53 PM, 28 Oct 2024 (IST)

கீழ்பாக்கம் அரசு மனநல மருத்துவமனை தனியார் மயமாக்கபடாது - மருத்துவத்துறை அமைச்சர் உறுதி!

கீழ்பாக்கம் அரசு மனநல மருத்துவமனை தனியார்மயமாக்கப்படாது என்றும், மருத்துவமனையை மேம்படுத்துவதற்காக தொழில்நிறுவனங்களிடம் இருந்து நிதி கேட்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates - அமைச்சர் மா சுப்பிரமணியன்

04:50 PM, 28 Oct 2024 (IST)

பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது எப்படி? அமைச்சர் மா சுப்பிரமணியன் வலியுறுத்துவது என்ன?

பட்டு, நைலான் மற்றும் நீளமான உடைகளை அணிந்துக் கொண்டு பட்டாசுகளை வெடிக்க கூடாது என நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார். பட்டாசுகளை வெடிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டியவை என்னென்ன? என்பதை தெரிந்து கொள்ளலாம்... | Read More

ETV Bharat Live Updates - DIWALI 2024

04:09 PM, 28 Oct 2024 (IST)

"ரஜினி அரசியலுக்கு வராததால் விஜயை இறக்கி விட்டிருக்கலாம்" - சபாநாயகர் அப்பாவு சூசகம்!

நடிகர் ரஜினி அரசியலுக்கு வராத காரணத்தால், பாஜக தான் விஜயை இறக்கி இருப்பார்களோ? என்ற சந்தேகம் எழுகிறது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates - APPAVU TALK ABOUT TVK VIJAY

04:10 PM, 28 Oct 2024 (IST)

உதயநிதிக்கு எதிரான 'ஏஞ்சல்' பட வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

ஏஞ்சல் பட விவகாரத்தில் தனக்கு எதிரான வழக்கை நிராகரிக்கக் கோரி உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பினை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. | Read More

ETV Bharat Live Updates - UDHAYANITHI STALIN

03:44 PM, 28 Oct 2024 (IST)

திமுக குறித்து விஜய் விமர்சனம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரியாக்சன் என்ன?

திமுக குறித்து தவெக தலைவர் விமர்சனம் செய்திருந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் திமுகவால் வளர்ச்சி பெற்று உள்ளது என்றும், வளர்ச்சி தவிர மற்றவற்றில் கவனம் சிதையாது என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். | Read More

ETV Bharat Live Updates - அமைச்சர் சுப்பிரமணியன்

02:26 PM, 28 Oct 2024 (IST)

TNPSC குருப் 4 தேர்வு முடிவு வெளியீடு! தேர்வு முடிவுக்கான இணையதளம் இதுதான்!

8 932 பணியிடங்களை நிரப்புவதற்கான குருப் 4 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates - குருப் 4 தேர்வு முடிவு வெளியீடு

02:23 PM, 28 Oct 2024 (IST)

திராவிட மாடலை சீண்டிய விஜய்.. அமைச்சர் சேகர் பாபு கொடுத்த பதில்..!

எந்த சக்தியாலும் திமுகவை அசைத்துப் பார்க்க முடியாது என்று திராவிட மாடல் குறித்த விஜய் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates - TVK VIJAY

02:03 PM, 28 Oct 2024 (IST)

"விஜய் கொள்கை வேறு.. எங்களது கட்சியின் கொள்கை வேறு" - சீமான் பளிச் பதில்!

திராவிடத்தை தனது கண்ணாக சொல்லும் விஜயின் கொள்கை வேறு, நாதகவின் கொள்கை வேறு எனவும், என் பயணம் என் கால்களை நம்பித்தான். பிறரின் கால்களை நம்பி பயணிக்க முடியாது என சீமான் தெரிவித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates - TVK MAANADU

01:51 PM, 28 Oct 2024 (IST)

லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு எதிரான வழக்கை தொடர்ந்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவு!

லாட்டரி அதிபர் மார்ட்டின், அவரது மனைவி உள்ளிட்டோருக்கு எதிரான முறைகேடு வழக்கை தொடர்ந்து விசாரணை செய்ய அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates - லாட்டரி அதிபர் மார்ட்டின்

01:42 PM, 28 Oct 2024 (IST)

ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு நற்செய்தி - முதலமைச்சர் ஸ்டாலினின் முக்கிய அறிவிப்பு!

போக்குவரத்துக்‌ கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றோருக்கான நிதிப்பலன்களை வழங்க நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். | Read More

ETV Bharat Live Updates - TRANSPORT PENSIONERS

01:33 PM, 28 Oct 2024 (IST)

திராவிட மாடல்; விஜய் கருத்துக்கு அரசியல் மேடைகளில் எதிர்வினை ஆற்றுவோம் - அமைச்சர் பெரிய கருப்பன்!

அரசியல் மேடைகளில் எதிர்வினை ஆற்றுவோம் என்று திராவிட மாடல் குறித்த விஜயின் கருத்துக்கு அமைச்சர் பெரிய கருப்பன் பதில் அளித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates - VIJAY TVK

01:13 PM, 28 Oct 2024 (IST)

தேவர் ஜெயந்தி: பசும்பொன் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அக்டோபர் 30ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates - THEVAR JAYANTHI MK STALIN

12:32 PM, 28 Oct 2024 (IST)

"விஜய் பாஜகவின் C- டீம்.. தவெக மாநாடு மிகப் பிரமாண்டமான சினிமா சூட்டிங்" - அமைச்சர் ரகுபதி விமர்சனம்!

விஜய் பாஜகவின் C டீம் எனவும், நடந்து முடிந்ததை தவெக மாநாடு என்பதைவிட பிரமாண்டமான சினிமா சூட்டிங் என்றே சொல்லலாம் எனவும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates - VIJAY TVK CONFERENCE

11:33 AM, 28 Oct 2024 (IST)

தவெக கொடி உணர்த்துவது என்ன? விளக்கமளித்த விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று (அக்டோபர் 27) அதன் தலைவர் விஜய் தலைமையில் நடந்தது. அதில், தனது கட்சியின் கொடிக்கான காரணத்தை, விஜய் காணொளி வாயிலாக தொண்டர்களுக்கு உணர்த்தினார். | Read More

ETV Bharat Live Updates - TVK MAANADU

11:22 AM, 28 Oct 2024 (IST)

சிறு வயதில் எல்லாரும் பாம்பை பிடித்து தான் வளர்ந்து இருப்பார்கள் - விஜயை சாடிய செல்வப்பெருந்தகை!

ஜார்க்கண்ட மாநிலத்தில் இந்தியா கூட்டணி மிகப்பெரிய வெற்றி அடையும் என்றும், தேர்தலில் பாஜக மக்களை நம்பி இல்லை இயந்திரத்தை நம்பியுள்ளது அதனால் வெற்றி பெறாது என்றும் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். | Read More

ETV Bharat Live Updates - SELVAPERUNTHAGAI

11:14 AM, 28 Oct 2024 (IST)

"உதயாவிற்கு எதிராக உதயமாகி இருக்கிறது தவெக" - விஜய்க்கு தமிழிசை வாழ்த்து!

தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சியின் உதயாவிற்கு எதிராக உதயமாகியுள்ள தவெக தலைவர் விஜய் வாழ்த்துக்கள் என தமிழிசை சௌந்தரராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார். | Read More

ETV Bharat Live Updates - VIJAY TVK CONFERENCE

11:14 AM, 28 Oct 2024 (IST)

ஓடு பாதையில் தரையிறங்கி மீண்டும் பறந்த விமானம்.. சென்னை ஏர்போர்ட்டில் நடந்தது என்ன?

ஜெய்ப்பூரில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கி, திடீரென மீண்டும் மேலே எழும்பி வானில் பறக்கத் தொடங்கியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். | Read More

ETV Bharat Live Updates - JAIPUR FLIGHT

11:14 AM, 28 Oct 2024 (IST)

"விஜயால் பா.ஜ.க-விற்கு எந்த பாதிப்பும் இல்லை திமுகவினருக்கு தான் பாதிப்பு" - எச்.ராஜா திட்டவட்டம்!

பிரிவினைவாதம் பேசக்கூடிய த.வெ.க-வின் தலைவர் விஜயால் பா.ஜ.க-விற்கு எந்த பாதிப்பும் இல்லை. அவர் திராவிட சித்தாந்தத்தை பேசுவதால் திமுகவினருக்கு தான் பாதிப்பு என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates - H RAJA

10:47 AM, 28 Oct 2024 (IST)

2026-ல் த.வெ.க. சின்னம் என்ன? விஜய்க்கு இருக்கும் வாய்ப்புகள்

திமுக உதயசூரியன் சின்னத்தையும், அதிமுக இரட்டை இலை சின்னத்தையும் வைத்திருக்கின்றன. புதிதாக தவெகவை தொடங்கியிருக்கும் நடிகர் விஜய் தமது கட்சி சின்னமாக எதனை தேர்வு செய்யப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. | Read More

ETV Bharat Live Updates - TAMILAGA VETTRI KAZHAGAM

10:13 AM, 28 Oct 2024 (IST)

மஞ்சள் பையுடன் கிளம்பிய பஸ் .. நொறுங்கிப்போன மூதாட்டிக்கு உதவிய சிசிடிவி..! ஈரோட்டில் நெகிழ்ச்சி!

சத்தியமங்கலம் பேருந்தில் தவற விட்ட ரூ.1 லட்சம் பணத்தை 1 மணி நேரத்தில் புன்செய் புளியம்பட்டி போலீாசர் மீட்டு, பணத்தை தொலைத்த மூதாட்டியிடம் ஒப்படைத்தனர். | Read More

ETV Bharat Live Updates - ERODE BUS STAND

09:41 AM, 28 Oct 2024 (IST)

தஞ்சையில் 1,070 கிலோ குட்கா பறிமுதல்... இருவர் கைது..! ரகசிய தகவலால் போலீஸ் அதிரடி!

தஞ்சை ,திருவோணம் அருகே ரூ. 7 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். | Read More

ETV Bharat Live Updates - THANJAVUR CRIME

09:42 AM, 28 Oct 2024 (IST)

புலிமேடு அருவியில் ஆபத்தை உணராமல் சாகசம் செய்யும் சிறுவர்கள்.. நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

வேலூரில் குற்றால அருவிக்கு இணையாக ஒரு மினி குற்றாலமாக மாறியுள்ள புலிமேடு அருவியில், ஆபத்தை உணராமல் சிறுவர்கள் விளையாடுவதால் மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. | Read More

ETV Bharat Live Updates - VELLORE WATERFALLS

07:36 AM, 28 Oct 2024 (IST)

40 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்த இளைஞர்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!

சென்னை விமான நிலையத்தில், தீபாவளி பண்டிகைக்காக வண்ண விளக்கு அலங்காரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒப்பந்த கூலித் தொழிலாளி, சுமார் 40 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்ததில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். | Read More

ETV Bharat Live Updates - A YOUTH INJURED WHO FELL 40 FEET

06:41 AM, 28 Oct 2024 (IST)

நிதி இழப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது.. எந்த ராசிக்குத் தெரியுமா?

அக்டோபர் 28 திங்கட்கிழமையான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்களைக் காணலாம். | Read More

ETV Bharat Live Updates - OCT 28TH RASIPALAN
Last Updated : Oct 28, 2024, 10:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details