ETV Bharat / state

பாலமேடு ஜல்லிக்கட்டு: எட்டு காளைகளை அடக்கி நத்தம் பார்த்திபன் முன்னிலை! - MADURAI PALAMEDU JALLIKATTU

பாலமேடு ஜல்லிக்கட்டு
பாலமேடு ஜல்லிக்கட்டு (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 15, 2025, 7:10 AM IST

மாட்டுப்பொங்கலை மற்றும் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நடைபெறக்கூடிய உலகப் புகழ்பெற்ற மதுரை மாவட்ட பாலமேடு ஜல்லிகட்டு இன்று அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் வீரர்கள் உறுதிமொழி ஏற்புடன் தொடங்குகிறது. இதையொட்டி பாலமேடு மஞ்சமலையாற்றில் உள்ள வாடிவாசல், ஆடுகளம், பார்வையாளர்கள் மாடம், பரிசுபொருள் மாடம், இரண்டடுக்கு வேலி அமைக்கும் பணிகள் முடிவடைந்து தயார்நிலையில் உள்ளது.

பாலமேடு ஜல்லிகட்டிற்காக 1000 காளைகளும், 900 மாடுபிடி வீரர்களும் முன்பதிவு முன்பதிவு செய்துள்ளனர். சிறந்த காளைக்கு முதல் பரிசாக ஒரு டிராக்டரும் மற்றும் சிறந்த மாடுபிடி வீரருக்கு ஒரு காரும் வழங்கபடுகிறது. மேலும், 2-ஆவது பரிசுபெறும் காளைக்கு கன்று குட்டியுடன், நாட்டு பசுமாடும், வீரருக்கு பைக் பரிசாக வழங்கபடவுள்ளது. மாடுபிடியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு தங்கம், வெள்ளி நாணயங்கள் முதல் அண்டா சைக்கிள், பீரோ, குளிர்சாதனப் பெட்டி, டிவி, கட்டில், விவசாய உபகரணங்கள், விதைப் பைகள், உரங்கள், உள்ளிட்ட பல்வேறு பரிசுகளும் வழங்கப்படும் என விழாக் குழுவினர் தெரிவித்தனர்.

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறக்கூடிய மஞ்சமலை ஆறு ஜல்லிக்கட்டு திடல் என்பது நீண்ட நெடிய 2 கிலோமீட்டர் தூரத்திற்கான களம் என்பதால் நிரந்தர வாடிவாசல் வழியாக வரும் காளைகள் நின்று விளையாடி தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் என்பதாலும், மாடுபிடி வீரர்களும் காளைகளை அடக்குவதற்கான விசாலமானப் பகுதி என்பதாலும் போட்டி விறுவிறுப்பாக நடைபெறும்.

மேலும், பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் நிரந்தரமான பார்வையாளர்கள் அமரும் பகுதிகள் உள்ளதால், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை பார்ப்பதற்காக மதுரை மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகளும் வருகை தருவார்கள்.

முதலில் கிராமத்தின் மரியாதை காளைகள் எனப்படும் 7 கரை மாடுகள் அவிழ்க்கப்படும். பின்னர் போட்டியில் பங்கேற்கும் காளைகள் வரிசையாக அவிழ்த்து விடப்படும். முன்பதிவு செய்யப்பட்ட காளைகளும், வீரர்களும் மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே ஆடுகளத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.

ஆன்லைன் அனுமதிசீட்டு நம்பர் வரிசை படியே வாடிவாசலில் காளைகள் அவிழ்த்து விடப்படும். பார்வையாளர்களுக்கு ஆங்காங்கே தண்ணீர், கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பேரூராட்சி நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு, பாலமேடு மகாலிங்க சுவாமி மடத்துக் குழு நிர்வாகம் செய்துள்ளனர். போட்டியினை முன்னிட்டு தென்மண்டல காவல்துறை தலைவர் (ஐஜி) பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் 2500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

போட்டிகளில் வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்படும் காளைகளின் மீது பவுடர் பூசியபடியோ அல்லது மஞ்சள் தூள் பூசியபடியே காளைகள் வெற்றி பெற்றாலும் பரிசுகள் வழங்கப்படாது எனவும் காளைகள் மீது பவுடரை பூசிய படி போட்டியில் கலந்துகொள்ள வைத்தால் அடுத்த போட்டிகளில் கலந்து கொள்ள விடாமல் தடை விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காளைகளுடன் ஒரு நபர் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் எனவும் காளைகளுடன் வருபவர்கள் மது அருந்தினால் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் எனவும் மாடுபிடி வீரர்கள் மது அருந்தி இருந்தால் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் மாவட்ட காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் முழுவதிலும் கிராம கமிட்டி எது நடத்துவதால் பாரம்பரிய முறைப்படி போட்டி முழுவதிலும் அரசின் கண்காணிப்போடு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

போட்டியானது காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளது. போட்டியின் போது 10 சுற்றுகள் நடத்தப்பட்டு ஒவ்வொரு சுற்றுக்களிலும் தேர்வு செய்யக்கூடிய சிறந்த மாடுபிடி வீரர்கள் இறுதி சுற்றில் கலந்துகொள்வார்கள். ஒவ்வொரு மணி நேரத்திற்கு நடைபெற உள்ள சுற்றுகளிலும் தலா 75 மாடுபிடி வீரர்கள் பல்வேறு வண்ண சீருடைகளில் களம் இறங்கி மாடுகளை பிடிப்பார்கள்.

போட்டி நடைபெறும் வாடிவாசல் முன்பாக 50 அடி தூரத்திற்கு முழுவதிலுமாக தேங்காய் நார் 2 அடி உயரத்திற்கு பரப்பப்பட்டுள்ளன. போட்டியின்போது வாடிவாசல் பகுதியில் குளறுபடி ஏற்படுத்தினாலும் மாட்டின் உரிமையாளருடன் சண்டையிட்டாலோ மாடிபிடு வீரர்கள் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள் எனவும் காளை உரிமையாளர்கள் மாடுபிடி வீரர்களை தாக்கினாலோ சண்டையிட்டாலோ அந்த காளைக்கு பரிசுகள் வழங்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LIVE FEED

11:51 AM, 15 Jan 2025 (IST)

காலை 11 மணி நிலவரம்!

இதுவரை பரிசோதனை செய்யப்பட்ட 301 ஜல்லிக்கட்டு காளைகளில் (காலை 11 மணி நிலவரப்படி) ஒரு காளை மட்டும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

11:01 AM, 15 Jan 2025 (IST)

இரண்டாம் சுற்று முடிவு: 20 காளைகள் பிடிபட்டன

இரண்டாவது சுற்றில், பச்சை நிற உடை அணிந்த மாடுபிடி வீரர்கள் களம் கண்டனர். இதில் மொத்தம் 102 (மொத்தம் 203) மாடுகள் அவிழ்த்து விடப்பட்டது. அதில் 20 (மொத்தம் 39) மாடுகள் பிடிபட்டன. மேலும், எட்டு காளைகளை அடக்கிய நத்தம் பகுதியைச் சேர்ந்த பார்த்தீபன் (எண் 64), நான்கு காளைகளை அடக்கிய புதுக்கோட்டையைச் சேர்ந்த யோகேஷ் (எண் 72), 56 மற்றும் 54 எண் கொண்ட வீரர்கள் தலா ஒரு காளைகளை அடக்கியுள்ளனர். இந்த சுற்றில் 2 காளைகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளன.

10:35 AM, 15 Jan 2025 (IST)

காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை!

காளைகளுக்கு இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. காலை 10 மணி நிலவரப்படி, பரிசோதனை செய்யப்பட்ட 216 காளைகளில் ஒரு காளை மட்டும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

10:25 AM, 15 Jan 2025 (IST)

பாலமேட்டில் ஒலித்த டங்ஸ்டன் எதிர்ப்புக் குரல்!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி பகுதியில் ஒன்றிய அரசு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி வழங்கிய நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில், 'SAVE ARITTAPATTI' என்ற வசனத்துடன் ஜல்லிக்கட்டு போட்டியில் பதாகைகளை கையில் ஏந்தி கிராம மக்கள் அமர்ந்து டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

10:08 AM, 15 Jan 2025 (IST)

முதற்சுற்றில் பிடிபட்ட 19 காளைகள்!

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் முதல் சுற்றில், மஞ்சள் நிற உடை அணிந்த மாடுபிடி வீரர்கள் களம் கண்டனர். இதில் மொத்தம் 101 மாடுகள் அவிழ்த்து விடப்பட்டது. அதில் 19 மாடுகள் பிடிபட்டன. மேலும், ஆறு காளைகளை அடக்கிய மஞ்சம்பட்டியைச் சேர்ந்த துளசி (எண் 37), பாலமேட்டைச் சேர்ந்த அஜித்குமார் (எண் 16), தினேஷ்குமார் (எண் 17) ஆகியோர் தலா இரு காளைகள், சேத்தமங்கலத்தைச் சேர்ந்த முத்துபிரகாஷ் (எண் 25) இரண்டு காளைகள் என மொத்தம் 12 காளைகளை அடக்கி 4 மாடுபிடி வீரர்கள் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

9:05 AM, 15 Jan 2025 (IST)

திரும்பி வந்துட்டேன் பாரு!

ஜல்லிக்கட்டு களத்தில் வாடி வாசலில் அவிழ்த்து விட்டு வெற்றி பெற்ற காளை மீண்டும் வாடிவாசலுக்கு வந்த நிலையில், மற்றொரு காளையை அவிழ்த்து விட வந்த காளையின் உரிமையாளரை முட்டி தூக்கியது.

8:08 AM, 15 Jan 2025 (IST)

முதலில் களமிறங்கிய மஞ்சள் அணி!

முதல் சுற்றில் மஞ்சள் நிற ஜெர்சி அணிந்த மாடுபிடி வீரர்கள் களம் கண்டுள்ளனர்.

7:47 AM, 15 Jan 2025 (IST)

உறுதிமொழி எடுத்துக்கொண்ட மாடுபிடி வீரர்கள்!

போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர் முன்னிலையில் காளைகளுக்கு எந்த துன்புறுத்தல் ஏற்படுத்தமாட்டோம் என வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

7:45 AM, 15 Jan 2025 (IST)

அவிழ்த்து விடப்பட்ட மரியாதைக் காளைகள்

போட்டி தொடங்கிய நிலையில் முதலாவதாக 7 கரை கிராம காளைகள் வரவழைப்பட்டது. ஏழு கிராம காளைகள் வாடிவாசலில் அவிழ்க்கப்படும். ஆனால் அந்த காளைகளை யாரும் பிடிக்க கூடாது. அவற்றிற்கு கிராம காளைகளுக்கான மரியாதை அளிக்கப்படும்.

7:13 AM, 15 Jan 2025 (IST)

காளைகளுக்கு மருத்துவப் பரிசோதனை!

முன்பதிவு செய்யப்பட்ட காளை மாடுகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக, காளை மாடு 4 அடி உயரத்தில் இருக்க வேண்டும், 4 பற்கள் இருக்க வேண்டும், மாட்டின் கொம்பு கூர்மையாக இருக்கக் கூடாது, மாட்டின் உடலில் எந்தவித காயமும் இருக்கக் கூடாது என்பது விதியாகும். ஏழு மருத்துவக் குழுவினர் காளை மாடுகளுக்கு தகுந்த கண் பரிசோதனை, பல் பரிசோதனை செய்து காளை மாடுகளுக்கு மதுபானம் அல்லது ஊக்க மருந்துகள் எதுவும் கொடுக்கப்பட்டிருக்கிறதா என்று தொடர்ந்து கண்காணித்து மாட்டிற்கான தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டு, வாடிவாசல் வழியாக மாடுகள் அவிழ்க்கப்படும்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.