விஜய் சொல்வதுபோல நானும் சினிமாவில் பெரிய பெரிய வெற்றிகளை கொடுத்து உச்ச நடிகராக இருந்தபோதுதான் மக்கள் சேவைக்காக அரசியலுக்கு வந்தேன் என்று சரத்குமார் தெரிவித்துள்ளார். | Read More
Tamil Nadu News - தமிழ்நாடு செய்திகள் இன்று நேரலை Fri Nov 15 2024 சமீபத்திய செய்திகள் - TAMIL NADU NEWS TODAY FRI NOV 15 2024
Published : Nov 15, 2024, 8:00 AM IST
|Updated : Nov 15, 2024, 11:09 PM IST
"விஜய் போலதான் நானும்" - நடிகர் சரத்குமார் பேட்டி பெருமிதம்!
"திமுக - அதிமுக இரு கட்சிகளுக்கும் நல்லது செய்யும் எண்ணம் இல்லை" - நீதிபதி வேல்முருகன் வேதனை!
ஜனநாயகத்தை வலுப்படுத்துகிறோம் என்ற போர்வையில் ஒரு அரசியல் கட்சி, மற்றொரு கட்சியை குற்றம்சாட்டுவதே இன்றைய நிலையாக உள்ளது என்று நீதிபதி வேல்முருகன் வேதனை தெரிவித்துள்ளார். | Read More
சென்னை எஸ்பிஐ வங்கியில் மர்ம நபர் கொள்ளை முயற்சி; போலீஸ் விசாரணை..!
சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலை பாரத ஸ்டேட் வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். | Read More
மருத்துவர் கத்திக்குத்து சம்பவம்: கிண்டி அரசு மருத்துவமனையில் மனித உரிமைகள் ஆணையம் விசாரணை!
சென்னை கிண்டி அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர் கத்திக்குத்துக்கு ஆளான சம்பவம் தொடர்பாக. மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் கண்ணதாசன் மருத்துவமனைக்கு இன்று நேரில் சென்று விசாரணை நடத்தினார். | Read More
"அரசியல் கட்சியினருக்கு மக்களைப் பற்றி அக்கறை இல்லை" - உயர் நீதிமன்றம் அதிருப்தி!
அரசியல் கட்சியினருக்கு மக்களைப் பற்றி அக்கறை இல்லை; அவர்களுக்கு அவர்களது சொந்தக் கட்சியை பற்றி மட்டும் தான் அக்கறை இருக்கிறது என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. | Read More
'போராட்டம் நடத்துவோம்'.. அரசு மருத்துவமனை காலி பணியிடங்களை நிரப்புங்க - சிபிஐ முத்தரசன்..!
அரசு மருத்துவமனையில் காலிப் பணியிடங்கள் நிரப்ப தேவைப்பட்டால் போராட்டம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். | Read More
ED Raid : விசிகவின் ஆதவ் அர்ஜுனா வீட்டில் அமலாக்கத் துறை சோதனை!
விடுதலை சிறுத்தைகள் கட்சித் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர். | Read More
ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து வழக்கு: சமரச தீர்வு மையத்தை அணுக நீதிபதி அறிவுறுத்தல்!
நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி விவாகரத்து வழக்கில் இருவருக்கும் இடையே சமரச தீர்வு மையத்தின் மூலம் பேச்சுவார்த்தை நடத்த சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More
வேட்டையன் திரைப்படத்திற்கு தடை விதிக்கக்கோரிய மனு முடித்துவைப்பு - ஐகோர்ட் மதுரை கிளை!
வேட்டையன் திரைப்படத்திற்கு தடை விதிக்க உத்தரவிடக் கோரிய பொது நல மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை முடித்து வைத்தது. | Read More
ஆசிரியர்களை காப்பாளர் பணிக்கு அனுப்புவது குறித்து அமைச்சருக்குத் தெரியாதா?
ஆசிரியர்களை காப்பாளர் பணிக்கு அனுப்புவது குறித்து அமைச்சருக்குத் தெரியாதா எனவும், இதை யார் முடிவெடுத்தது எனவும் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார். | Read More
திருப்பத்தூர் தாய்-சேய் உயிரிழந்த விவகாரம்: மருத்துவர் பணியிடம் மாற்றம்!
முறையான சிகிச்சையின்றி தாய் - சேய் உயிரிழந்ததாக கூறப்படும் விவகாரத்தில், சிகிச்சையளித்த மருத்துவரை பணியிடம் மாற்றம் செய்து திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். | Read More
350 சீர்வரிசையுடன் கண்டெய்னர் லாரியில் வந்த தாய்மாமன் சீர்; மாஸ் காட்டிய தாய்மாமன்கள்!
தூத்துக்குடியில் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு செண்டை மேளங்கள் முழங்க, வானவேடிக்கையுடன் 350 சீர்வரிசைகளை கண்டெய்னர் லாரியில் கொண்டு வந்து தாய்மாமன்கள் சீர்வரிசை வழங்கியுள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. | Read More
சென்னையில் அதிகரிக்கும் போதைப்பொருள்; கேமரூன் நாட்டைச் சேர்ந்தவர் உள்பட நால்வர் கைது!
நீலாங்கரை மற்றும் விருகம்பாக்கம் பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த கேமரூன் நாட்டைச் சேர்ந்தவர் உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். | Read More
19,000 புதிய ஆசிரியர்கள் பணி நியமனம்.. அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்!
2026 -க்குள் 19,000 ஆசிரியர்கள் புதிதாக பணி நியமனம் செய்யப்பட உள்ளனர் என்றும் பள்ளிக்கல்வித் துறைக்கு தனியாக பட்ஜெட் வந்தால் சந்தாேஷமாக இருக்கும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியுள்ளார். | Read More
"காமராஜர், நேரு போன்றவர்கள் சர்வாதிகாரிகள்" - சீமான் பேட்டி..!
காமராஜர், நேரு போன்ற மிகச் சிறந்த ஆட்சியாளர்கள் எல்லோரும் அன்பான சர்வாதிகாரிகளாகத்தான் இருந்துள்ளார்கள் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். | Read More
தனியார் மருத்துவமனை மோசடி: காப்பீடுக்கு மேல் அதிகம் வசூல் - முதலமைச்சருக்கு கோரிக்கை
தனியார் மருத்துவமனைகள் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறுபவரிடம் காப்பீடு தொகையை விட அதிகம் பணம் வசூலிப்பது குறித்து முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என செல்லக்காமு கோரிக்கை வைத்துள்ளார். | Read More
G-Pay மூலம் வழிப்பறி: சிறுவன் உள்பட 5 பேர் கைது - சிக்கியது எப்படி?
திருமுல்லைவாயில் பகுதியில் தனியாக நடந்து சென்ற கல்லூரி மாணவரை மிரட்டி, அவரிடமிருந்து G-Pay மூலம் ரூ.29 ஆயிரம் வழிப்பறி செய்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். | Read More
டிஜிட்டல் பயிர் சர்வே பணிகளில் இருந்து மாணவர்களை அரசு விடுவிக்க வேண்டும் - ராமதாஸ்
டிஜிட்டல் பயிர் சர்வே பணிகளில் இருந்து மாணவர்களை அரசு விடுவிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். | Read More
“சிறு பிள்ளைகள் கர்ப்பிணி ஆவதற்கு இதுதான் காரணம்!”- சீமான் பரபரப்பு பேட்டி
தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு மிக எளிதாக போதைப்பொருட்கள் கிடைக்கிறது. இதனால் சிறு பிள்ளைகள் கர்ப்பிணி ஆகின்றார்கள் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சையைக் கிளப்பும் வகையில் பேசியுள்ளார். | Read More
செந்தில் பாலாஜி வழக்கு: மனுவை திரும்ப பெறவில்லை என்றால் அபராதம் - எச்சரித்த நீதிபதிகள்!
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More
அரசு உதவித் தொகை வாங்கித் தருவதாகக் கூறி குழந்தையை கடத்திய பெண்!
சென்னையை சேர்ந்த தம்பதிக்கு குழந்தை பிறந்து 45 நாள்களே ஆன நிலையில் பெண் ஒருவர் உதவி தொகை வாங்கித் தருவதாகக் கூறி குழந்தையை கடந்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. | Read More
வாக்குச்சாவடிகளாக்கப்படும் பள்ளிகளுக்கு நெறிமுறைகள்; தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு!
தேர்தல் நேரங்களில் வாக்குச் சாவடிகளாக பயன்படுத்தப்படும் பள்ளிகளை தேர்தலுக்குப் பிறகு சுத்தப்படுத்துவது தொடர்பாக வழிகாட்டி நெறிமுறைகள் ஏதேனும் உள்ளதா? என விளக்கம் அளிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More
உள்ளாட்சி தேர்தலுக்குள் புதிய வாக்காளர் பட்டியல்? - தேர்தல் ஆணையம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!
ஒவ்வொரு பஞ்சாயத்திலும் இறந்தவர்கள், இடம் மாறிய வாக்காளர்களின் பெயர்களை நீக்கி ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான புதிய வாக்காளர் பட்டியலை தயாரிக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் தேர்தல் ஆணைய பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More
அஜிதா ஆக்னலா.? பாலாவா..? தூத்துக்குடி தவெக-வினரிடையே வெடித்த கோஷ்டி பூசல்..! மாவட்ட செயலாளர் கோஷத்தால் பரபரப்பு!
தூத்துக்குடியில் ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்திஸ் சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற இடத்தில் தவெக நிர்வாகிகளிடையே யார் மாவட்ட செயலாளர் என்ற கோஷத்தினால் பரபரப்பு நிலவியது. | Read More
பஸ் பாடி கட்டும் நிறுவனத்தில் தீ விபத்து; ஒருவர் உயிரிழப்பு!
கரூரில் பேருந்து பாடி கட்டும் நிறுவனத்தில், ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் தொழிலாளி ஒருவர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. | Read More
தேனியிலிருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்த முயற்சி; 5 பேர் கைது!
தேனியில் கஞ்சா கடத்திய விவகாரத்தில் 5 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். | Read More
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; 27 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 27 பேரும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அனைவருக்கும் குற்றப்பத்திரிகை நகலானது வழங்கப்பட்டுள்ளது. | Read More
பொங்கல் வேட்டி, சேலை தயாரிப்பில் தாமதமா? அமைச்சர் சொன்ன முக்கியத் தகவல்
பொங்களுக்கான இலவச வேட்டி, சேலை தயாரிக்கும் பணிகள் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக டெண்டர் விடுவதில் தாமதம் ஏற்பட்டது, இருப்பினும் அவை ஜனவரி 15ஆம் தேதிக்குள் மக்களுக்கு கொடுக்கப்படும் என அமைச்சர் ஆர்.காந்தி கூறியுள்ளார். | Read More
"என்னுடைய அம்மா தான் எனக்கு ரோல் மாடல்" - மாணவர் கேள்விக்கு ஆர்.என் ரவி பதில்!
'எண்ணித் துணிக' என சிறப்புக் குழந்தைகளை ஊக்குவிக்கும் விதமாக நேற்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என் ரவி என்னுடைய தாய் தான் எனக்கு ரோல் மாடல் எனத் தெரிவித்துள்ளார். | Read More
துபாயிலிருந்து 10% தள்ளுபடியில் தங்க நகை; நூதன முறையில் பண மோசடி!
துபாய் நாட்டிலிருந்து 10% தள்ளுபடியில் தங்க நகைகள் வாங்கி தருவதாகக் கூறி காலணி தொழிற்சாலை தொழிலதிபரை ஏமாற்றி, பண மோசடி செய்த நபரை திருப்பத்தூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். | Read More
சங்கராபுரம் ஊராட்சி மன்ற தேர்தல்: தேவியின் வெற்றி செல்லாது; நீதிமன்றம் உத்தரவு!
காரைக்குடி சங்கராபுரம் ஊராட்சி மன்ற தேர்தலில், ஊராட்சி மன்ற தலைவியாக உள்ள தேவியின் வெற்றி செல்லாது என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. | Read More
கிண்டி கலைஞர் மருத்துவமனையில் தம்பி மரணம்; முறையான சிகிச்சை இல்லை என அண்ணன் குற்றச்சாட்டு!
சென்னை கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததால் 33 வயது விக்னேஷ் இறந்து விட்டதாக அவரது அண்ணன் பார்த்திபன் குற்றம் சாட்டியுள்ளார். | Read More
கோவை தொழிலதிபர் லாட்டரி மார்ட்டின் இடங்களில் இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை சோதனை..!
கோவையில் தொழிலதிபர் லாட்டரி மார்ட்டின் இல்லம், மார்ட்டின் குழும அலுவலகம், உறவினர்கள் வீடு என 5 இடங்களில் 2 வது நாளாக அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். | Read More
இரண்டு பிஞ்சு உயிர்களைப் பறித்த எலி மருந்து: எமனாக மாறிய நச்சுக் காற்று!
சென்னை குன்றத்தூரில் வீட்டில் எலியைக் கட்டுப்படுத்த வைக்கப்பட்டிருந்த மருந்திலிருந்து வெளியேறிய நெடியால் 2 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. | Read More
ஓபிஜி குழுமத்தில் கட்டுகட்டாக பணம்; அமலாக்கத்துறை சோதனையில் பிடிபட்டது எப்படி?
சென்னையில் ஓபிஜி குழுமம் தொடர்புடைய பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், பல கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. | Read More
"மருத்துவமனைகளைத் தாக்கினால் கடும் நடவடிக்கை" - டிஜிபி வார்னிங்!
அனைத்து மருத்துவமனைகளிலும் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் எனவும், அசம்பாவித சம்பவங்கள் கவனத்திற்கு வந்தால் உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு டிஜிபி உத்தரவிட்டுள்ளார். | Read More
ஆசிரியர்கள் சங்கம்: எடப்பாடி பழனிசாமியின் அரசியல் இரட்டை நாடகம் போடுகிறார்!
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் ஆசிரியர், அரசு ஊழியர் கோரிக்கைகளை குறித்த திடீர் கவலைகளைப் பாராட்டாது என கடுமையாக விமர்சித்துள்ளது. | Read More