சென்னை:சுதந்திர தின விடுமுறை கால கூட்ட நெரிசலைச் சமாளிக்க விழுப்புரம் வழியாக டாக்டர்.எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் இடையே ஒரு குளிர்சாதன சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் சிறப்பு ரயில் (06055) சென்னையிலிருந்து இன்று (ஆகஸ்ட் 14) இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, நாளை மதியம் 12.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
அதேபோல், மறுமார்க்கத்தில் நாகர்கோவில் - சென்னை ஆவடி சிறப்பு ரயில் (06056) நாகர்கோவிலில் இருந்து நாளை (ஆகஸ்ட் 15) மாலை 03.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.10 மணிக்கு சென்னை ஆவடி வந்தடையும். இந்த ரயில்கள் அரக்கோணம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.