தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சத்தியமங்கலம் புலிகள் வேட்டை வழக்கு; முக்கிய குற்றவாளியை தமிழ்நாட்டுக்கு கொண்டு வர திட்டம்! - TIGER POACHING CASE

சத்தியமங்கலத்தில் ஐந்து புலிகளை வேட்டையாடிய வழக்கில் முக்கிய குற்றவாளியை தமிழ்நாடு கொண்டு வர போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நீலகிரி மாவட்ட வன அதிகாரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 4, 2024, 5:53 PM IST

சென்னை:ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் 5 புலிகள் கடந்த ஆண்டு வேட்டையாடப்பட்டன. புலிகள் வேட்டையின் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? அவற்றின் தோல், பல், நகங்கள் யாருக்கு விற்கப்பட்டன? இதில் சர்வதேச தொடர்பு குறித்து விசாரிக்கப்பட்டதா? என்று வனத்துறைக்கு ஆகஸ்டு மாதம் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.

இந்த வழக்கில் பவாரியா கொள்ளை கும்பலைச் சேர்ந்தவர்களை வனக்குற்ற தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். இதுகுறித்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அறிக்கையையும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வனத்துறை தரப்பில், புலிகள் வேட்டை வழக்கில் முக்கிய குற்றவாளியான புஜாரிசிங் மத்திய பிரதேச மாநில சிறையில் உள்ளதாகவும், சிறை மாற்று வாரண்டு மூலம் தமிழ்நாட்டுக்கு கொண்டு வருவதில் சிக்கல்கள் இருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க:'ஒரே நாடு ஓரே தேர்தல் அறிவிப்பை விஜய் திறந்த மனதுடன் பரிசீலிக்க வேண்டும்' - வானதி சீனிவாசன்

நீலகிரி மாவட்ட வன அதிகாரி கவுதமன், புஜாரி சிங்கை தமிழ்நாடு கொண்டு வருவதற்கான வாரண்ட் அடுத்த வாரம் ஊட்டி நீதிமன்றம் மூலம் பெறப்படும் எனத் தெரிவித்தார்.

மேலும் அவர், மத்திய பிரதேசத்தில் உள்ள புஜாரி சிங்கைகொண்டு வருவதில் உள்ள சிக்கல்களை களைய மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவுக்கு உதவ உத்தரவிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், புலிகள் வேட்டையாடிய வழக்கில் முக்கிய குற்றவாளியை கொண்டு வரத் தேவையான உதவிகளை வழங்க மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 2 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details