தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கல்லூரி ஆசிரியர்களுக்கு இணையவழியில் இடமாறுதல் கவுன்சிலிங் - உயர் கல்வித்துறை அறிவிப்பு! - COLLEGE PROFESSORS COUNSELING

அரசு கல்லூரி பேராசிரியர்களுக்கு பொது இடமாறுதல் கலந்தாய்வு இணையவழி மூலம் மீண்டும் நடத்தப்படும் என உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 9, 2024, 10:16 AM IST

சென்னை:அரசு கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என உயர் கல்வித்துறை தெரிவித்துள்ள நிலையில், இணையவழியில் விண்ணப்பிக்க நவம்பர் 18 கடைசி நாள் எனவும், www.dcetransfer.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கல்லூரி கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கல்லுாரி கல்வித் துறையின் கீழ் இயங்கும், அரசு கலை - அறிவியல் கல்லுாரி மற்றும் கல்வியியல் கல்லுாரி ஆசிரியர்கள், தொழில்நுட்பக் கல்வி துறையின் கீழ் இயங்கும் அரசு இன்ஜினியரிங் கல்லுாரிகள், பாலிடெக்னிக்குகள், சிறப்பு பயிலகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் இடமாறுதலுக்கான பொது கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அதன்படி, கல்லூரிகள் ஆசிரியர்களுக்கு 2024-25 ஆம் கல்வி ஆண்டிற்கான பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வினை (counseling) உரிய நெறிமுறைகளைப் பின்பற்றி நவம்பர் 25-ஆம் தேதிக்குள்ளாக வெளிப்படைத் தன்மையுடன் இணையவழியின் வாயிலாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. அதற்கிணங்க, இணையவழியாகப் பெறப்படுகின்ற ஆசிரியர்களின் மாறுதல் விண்ணப்பங்கள் உரிய விதிகளின்படி பரிசீலனை செய்யப்பட்டு ஆணைகள் வழங்கப்படும்.

மேலும், இணைய வழியாக கலந்தாய்வு முடிந்தவுடன், இணையவழி வாயிலாகவே பணியிட மாறுதல் ஆணைகள் அளிக்கப்படும். கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் பணியாற்றும் துறையில் குறைந்தபட்சம் 50 சதவீதம் ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும்” என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமனம்!

அரசு கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பின் பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்துவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் பணியாற்றும் துறையில் குறைந்தபட்சம் 50 சதவீதம் ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனை வரவேற்புக்குரியது என தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம், “கடந்த கலந்தாய்வின் போது இந்த 50 சதவீத கணக்கீட்டிற்கு, கௌரவ விரிவுரையாளர்களின் எண்ணிக்கை கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. அரசு கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள 13 ஆயிரம் பணியிடங்களில், 4 ஆயிரத்து 500 நிரந்தர ஆசிரியர்கள் மட்டும் பணி புரிந்து வரும் நிலையில், 50 சதவீத கணக்கீட்டிற்கு கௌரவ விரிவுரையாளர்கள் எண்ணிக்கையை சேர்த்துக் சேர்த்துக் கொள்ளவில்லை என்றால், பணி இடமாறுதல் கலந்தாய்வில் மிகக் குறைந்த ஆசிரியர்களே பயன் பெற முடியும்.

மேலும், கலந்தாய்வுக்கு முன்னதாக, இரண்டு ஆண்டு முதல் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக புதிய கல்லூரிகளில் மாற்றுப்பணியில் பணி புரிந்து வரும் ஆசிரியர்களின் மாற்றுப்பணியினை ரத்து செய்ய வேண்டும். இரண்டாம் நிலை கல்லூரி முதல்வர் பணியிடங்களை நிரப்பி விட்டு, இதனால் ஏற்படும் காலிப்பணியிடங்களையும் கலந்தாய்வின் போது காட்ட வேண்டும்” என தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக பொதுச்செயலர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details