சென்னை:சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு பரிசுகளை வழங்கினார். அப்போது பேசிய அளுநர் கூறுகையில், “பெண்களால் இந்த நாடு உருவாக்கப்பட்டுள்ளது. நமது ஆன்மீகத்தையும், கலாச்சாரத்தையும் காலனிய ஆதிக்கம் ஒடுக்கியது.
ஆனால் சத்தியமும், தர்மமும் தான் வென்றது. இந்த நாடு தர்மத்தைக் கொண்டு வளர்ந்தது. ஆரம்பத்தில் இந்தியாவும் பொருளாதாரத்தில் 6வது இடத்தில் இருந்தது. ஆனால், நல்ல வழிகாட்டுதல் இல்லாததால் பொருளாதாரம், கல்வியில் 11வது இடத்திற்கு பின்தங்கினோம். கடைசி 10 வருடத்தில் நாட்டின் பொருளாதாரம் வளர்ந்து 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
உலகமே இந்தியாவின் ஆற்றல் திறனை திரும்பிப் பார்த்து வருகிறது. எந்த ஒரு பிரச்னைக்கும் இந்தியாவிடம் ஆலோசனை கேட்கப்படுகிறது. நூறாவது ஆண்டு சுதந்திர தினம் 2047ஆம் ஆண்டில் கொண்டாடும் போது, இந்தியா முழுமையாக வல்லரசு பெற்று விளங்கும். அதற்கு பெண் சக்தியின் பங்களிப்பு மிக அவசியம். ஒவ்வொரு வீட்டிற்கும் பெண்களே முதுகெலும்பாக இருக்கின்றனர். அதேபோல், நாட்டிற்கும், இந்த நாட்டின் வளர்ச்சிக்கும் பெண்கள் முக்கிய பங்காற்ற வேண்டும்.
நம் நாட்டின் வளர்ச்சிக்கு அடுத்த 25 வருடம் மிகவும் முக்கியமானது. இந்த நாட்டில் மிகப்பெரிய ஆற்றல், மிகப்பெரிய ஆளுமைகள் தேவை. நமது கனவு பெரிதாக இருக்க வேண்டும். பெண்கள் இல்லாத இந்தியா கிடையாது. பள்ளி மாணவர்களுக்கும் நவீன தொழில்நுடபத்தை அறிமுகப்படுத்த வேண்டும். மாநில பாடத்திட்டம் தேசிய பாடத்திட்டத்தை ஒப்பிடும்போது மோசமாக உள்ளது.