ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஏழாம் சுற்று முடிவில், திமுக வேட்பாளர் சந்திரகுமார் 38,518 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
- திமுக - 49,124
- நாதக - 10,606
- நோட்டா - 2,345
Published : Feb 8, 2025, 7:15 AM IST
|Updated : Feb 8, 2025, 12:59 PM IST
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (காங்கிரஸ்), உடல்நலக்குறைவு காரணமாக கடந்த டிசம்பர் மாதம் காலமானார். அதையடுத்து இத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும், அதற்காக வாக்கு எண்ணிக்கை பிப்.8ஆம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அந்த வகையில், கடந்த 5 ஆம் தேதி திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி என்ற இருமுனைப் போட்டியில் வாக்குப்பதிவு சுமுகமாக நடந்து முடிந்தது. இந்த நிலையில், இன்று (பிப்.8) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இதில், யார் வெற்றி பெறப்போவது, முன்னிலை உள்ள வேட்பாளர் யார் என்பது தொடர்பான நேரலை அப்டேட்டை காணலாம்.
LIVE FEED
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஏழாம் சுற்று முடிவில், திமுக வேட்பாளர் சந்திரகுமார் 38,518 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை 6வது சுற்று நிலவரப்படி,
5வது சுற்று நிலவரப்படி,
4வது சுற்று நிலவரப்படி,
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் தொடர்ந்து முன்னிலை பெற்று வருவதால், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
தபால் வாக்கு எண்ணிக்கை நிலவரம்:
பதிவான மொத்த தபால் வாக்குகள் : 251
3-ம் சுற்று முடிவு வரை
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக, நாதக வேட்பாளர்களைத் தொடர்ந்து நோட்டா 3-வது இடத்தைப் பிடித்து வருகிறது.
முதல் சுற்று முடிவில் நோட்டாவுக்கு 264 வாக்குகளும், இரண்டாவது சுற்றில் 517 வாக்குகளும் கிடைத்தன. 2-ம் சுற்று முடிவில் நோட்டாவுக்கு மொத்தம் 781 வாக்குகள் கிடைத்துள்ளன.
திமுக -16073
நாதக -2268
வாக்கு வித்தியாசம் : 13805
முதல் சுற்று முன்னிலை நிலவரம்
திமுக -7961
நாதக -1081
வாக்கு வித்தியாசம் : 6880
வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்த நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலெட்சுமி, நாதக முகவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை என்று போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் போலீசார் அவரை சமாதானப்படுத்தி உள்ளே அனுமதித்தனர்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் பதிவான மொத்த தபால் வாக்குகள் 246. அதனை எண்ணும் பணி நடந்து வருகிறது
ஈரோடு இடைத் தேர்தலில் தபாலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது