தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் வாசலில் தீ வைத்த மர்ம நபர்! - Kapaleeswarar Temple

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் வாயிலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மர்ம நபரை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 7, 2024, 12:49 PM IST

Updated : Feb 7, 2024, 4:44 PM IST

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் வாசலில் தீ வைத்த மர்ம நபர்

சென்னை:மயிலாப்பூர் பகுதியில் பழமை வாய்ந்த கபாலீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் தமிழகத்தில் மட்டும் இல்லாமல் வெளி மாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலை துறை கட்டுப்பாட்டில் இந்த கோயில் உள்ளது.

இந்த நிலையில் நேற்று(பிப்.06) நள்ளிரவில் போதை ஆசாமி ஒருவர் கையில் பெட்ரோல் கேனுடன் கோயிலின் பூட்டப்பட்ட கதவு முன்பு உள்ள நுழைவு வாயிலில் அமர்ந்துகொண்டு பெட்ரோலை தரையில் ஊற்றி பற்ற வைத்துக் கொண்டு இருந்துள்ளார். இது குறித்த அப்பகுதியில் இருந்த மக்கள் மயிலாப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அறநிலை துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த கோயிலில் பாதுகாவலர்கள் யாரும் இல்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மதுபோதையில் பெட்ரோலை ஊற்றி பற்ற வைத்த நபர் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:உதகை அருகே மண்சரிவு; 6 பெண்கள் உயிரிழப்பு.. 4 பேர் காயம்!

Last Updated : Feb 7, 2024, 4:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details