ETV Bharat / bharat

உலகின் மிகப்பெரிய ஆன்மீக நிகழ்வு மகா கும்பமேளா 2025 தொடக்கம்...பக்தர்களுக்கு பிரதமரின் சிறப்பு தின செய்தி! - MAHA KUMBH MELA 2025

2025ஆம் ஆண்டின் மகா கும்பமேளா இன்று தொடங்கி உள்ள நிலையில் அதில் 35 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் மிகப்பெரிய ஆன்மீக நிகழ்வுக்கு பெரும் அளவிலான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவை முன்னிட்டு குவிந்துள்ள பக்தர்கள்
பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவை முன்னிட்டு குவிந்துள்ள பக்தர்கள் (Image crdits-Etv Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 13, 2025, 2:01 PM IST

பிரயாக்ராஜ்: உத்தரபிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜில் 2025ஆம் ஆண்டி மகா கும்பமேளாவுக்காக அடுத்த ஒ்ன்றரை மாதங்களுக்கு 35 கோடி பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைக்கு பௌஷ் பெளர்ணமி தினத்தை முன்னிட்டு மகா கும்பமேளாவின் முதல் நாள் புனித நீராடல் தொடங்குகிறது.

திரிவேணி சங்கமம் என்ற கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சந்திக்கும் இடத்தை சுற்றியே மகா கும்பமேளா நடைபெறுகிறது. மகா கும்பமேளாவின் முதலாவது புனித நீராடல் தினமான இன்று பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் பிரயாக்ராஜின் மூன்று நதிகளின் சங்கமத்துக்கு வந்துள்ளனர். மூன்று நதிகளின் சங்கமத்தில் சனிக்கிழமை முதல் 85 லட்சம் பேர் புனித நீராடியுள்ளனர். சனிக்கிழமையன்று மட்டும் 35 லட்சம் பேர் புனித நீராடி உள்ளனர். ஞாயிற்றுக்கிழமையன்று 50 லட்சம் பேர் புனித நீராடி உள்ளனர்.

பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவை முன்னிட்டு குவிந்துள்ள பக்தர்கள்
பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவை முன்னிட்டு குவிந்துள்ள பக்தர்கள் (Image credits- ETV Bharat)

இது குறித்து எக்ஸ் தளத்தில் கருத்துத் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி,"பாரதத்தின் விழுமியங்களையும், கலாச்சாரத்தையும் போற்றும் கோடிக்கணக்கான மக்களுக்கு இது ஒரு மிகவும் சிறப்பு வாய்ந்த நாள். பிரயாக்ராஜில் தொடங்குகிற மகா கும்பமேளா 2025 எண்ணற்ற மக்களை நம்பிக்கை, பக்தி மற்றும் கலாச்சாரத்தின் புனிதமான சங்கமத்தில் ஒன்றிணைக்கிறது. இந்தியாவின் காலம் கடந்த ஆன்மீக பாரம்பரியத்தை உள்ளடக்கிய மகா கும்பமேளா, நம்பிக்கை மற்றும் நல்லிணக்கத்தைக் கொண்டாடுகிறது,”என்று கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இன்னொரு எக்ஸ் பதிவில், "பிரயாக்ராஜில் எண்ணற்ற மக்கள் வந்திருப்பதையும், அவர்கள் கடவுள் ஆசிர்வாத த்தை பெற புனித நீராடுவதையும் கண்டு மகிழ்ச்சி கொள்கின்றேன். இந்த சிறந்த தருணத்துக்காக சுற்றுலாப்பயணிகள், அனைத்து பக்தர்களையும் வாழ்த்துகின்றேன்,"என்று கூறியுள்ளார்.

பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவில் பங்கேற்க வருகை தரும் பக்தர்கள்
பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவில் பங்கேற்க வருகை தரும் பக்தர்கள் (Image credits- ANI)

பௌஷ் பெளர்ணமி 2025; தேதி மற்றும் நேரம்

திரிக் பஞ்சாங்கத்தின்படி முழு நிலவு நாளான பெளஷ் மாத்தில் சுக்ல பட்சம் ஜனவரி 13ஆம் தேதி காலை 5.03 மணிக்கு தொடங்குகிறது. இது நாளை ஜனவரி 14 அன்று 3.56க்கு முடிவடைகிறது.

20025ஆம் ஆண்டின் பெளஷ் பெளர்ணமி நல்ல நேரங்கள்

ரவி யோகா: காலை 7.15 முதல் 10.38 வரை

பிரம்ம முகூர்த்தம்: காலை 5.27 முதல் 6.21 வரை

அபிஜித்: நண்பகல் 12.09 முதல் மதியம் 12.51 வரை

விஜய முகூர்த்தம்: மதியம் 2.15 முதல் 2.57 வரை

காதுலி முகூர்த்தம்: மாலை 5.42 முதல் 6.09 வரை

சாயான சந்தியா: மாலை 5.45 முதல் இரவு 07.06 வரை

பிரதாக் சந்தியா: காலை 5.54 முதல் இரவு 7.15 வரை

நிஷிதா மூகூர்த்தம்: ஜனவரி 14ஆம் தேதி அதிகாலை 12.03 முதல் 12.57 வரை

பிரயாக்ராஜில் கடல் போல குவிந்திருக்கும் பக்தர்கள்

இன்று காலை முதலே மூன்று நதிகளின் சங்கமத்தில் பெரும் எண்ணிக்கையிலான பக்தர்களை காண முடிந்தது. இன்றைய புனித நாளை முன்னிட்டு சங்கமத்தில் புனித நீராடிய பக்தர்கள், பின்னர் புனித சடங்குகளையும் மேற்கொண்டனர். நம்மிடம் பேசிய விஜயகுமார் என்ற பக்தர்,"கும்பமேளாவுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. தங்கும் இடம், உணவு உட்பட அனைத்து வசதிகளும் நன்றாக உள்ளது. சாலைகளும் நன்றாக உள்ளன,"என்றார். இன்னொரு பக்தர், "இந்தியாவில் உள்ள ஒவ்வொரு புனித தலத்துக்கும் சென்று வருகின்றேன். நான் ஒரு சிறிய கோவிலில் வசிக்கின்றேன். கும்பமேளா எப்போது நடைபெற்றாலும் நான் தொடர்ந்து வருகின்றேன்,"என்றார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்த சன்னி லால்,"பிரதமர் மோடி, முதலமைச்சர் யோகி ஆதித்தியாநாத் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றேன். அரசு நல்ல ஏற்பாடுகளை செய்துள்ளது. அதே போல ஊடகத்துக்கும் நான் நன்றி சொல்கின்றேன். இங்கே இருப்பதை நாங்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக உணர்கின்றோம். நாங்கள் இனிமேல்தான் புனித நீராட உள்ளோம்,"என்றார்.

தேசிய பேரிடர் மேலாண்மை படையின் குழுவினர், உத்தரப்பிரதேச மாநில போலீசார் ஏராளமானோர் மகா கும்பமேளா நடக்கும் இடத்தை சுற்றிலும் பக்தர்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக குவிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு மகா கும்பமேளா என்றது உலகின் ஆன்மீக கூடலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். வானில் உள்ள கோள்கள் பூமிக்கு நெருக்கமாக தோன்றும் அரிய நிகழ்வு 144 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது நிகழ்கிறது.

போக்குவரத்து போலீசார் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.மகா கும்பமேளாவுக்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சுமுகமான போக்குவரத்தை உறுதி செய்ய விரிவான திட்டத்தை அவர்கள் அமல்படுத்தியுள்ளனர். குறிப்பாக சங்கமம் பகுதிக்கான நுழைவு வாயிலுக்கு ஜவஹர்லால் மார்க்(பிளாக் சாலை) வழியே செல்ல வேண்டும். திரிவேணி மார்க் வழியே வெளியே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். முக்கியமான புனித நீராடல் தருணங்களில் அக்ஷயவர்த் தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

ஜவூன்பூர் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் சினி மில் பார்க்கிங், புர்வா சுர்தாஸ் பார்க்கிங், காராப்பூர் சாலை, சம்யாமாய் கோவில் பார்க்கிங், பத்ரா செளனோத்தி ரஹிமாபூர் மார்க், வடக்கு, தெற்கு பகுதி பார்க்கிங் ஆகியவற்றில் நிறுத்த வேண்டும். மகா கும்பமேளா 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாப்படுகிறது. இது பிப்ரவரி 26ஆம் தேதி முடிவடைகிறது. 2025ஆம் ஆண்டின் மகா கும்ப மேளாவுக்காக ரூ.7000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

முன்னேற்பாடுகள்: இது குறித்து பேசிய உத்தரப்பிரதேச தலைமை செயலாளர் மனோஜ் குமார், "மவுனி அம்மாவாசை (ஜனவரி 26-20 வரை) காலகட்டத்தில் 4 முதல் 5 கோடி பக்தர்கள் புனித நீராடுவதற்காக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்றரை மாதம் கொண்டாப்படும் மகா கும்பமேளாவுக்காக ரூ.7000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு கும்பமேளா நடந்தது. இது மகா கும்பமேளாவாகும். கடைசியாக நடந்த கும்ப மேளாவுக்கு 24 கோடி பக்தர்கள் வருகை தந்தனர். இந்த முறை 35 கோடி பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மகா கும்பமேளாவுக்கான இடம் தோராயமாக 25 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த முறை 4000 ஹெக்டர் பரப்பளவில் ஏற்பாடுகள் நடைபற்றன. கடந்த கும்பமேளாவுக்கு 3200 ஹெக்டேர் நிலம் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது.

இது தவிர ரயில்வே, தேசிய நெடுஞ்சாலை போன்ற மத்திய அரசின் துறைகளும் மகா கும்பமேளாவுக்காக முன்னேற்பாடுகளை செய்துள்ளன. பக்தர்கள் அதிகம் வருவதை கருத்தில் கொண்டு யாருக்கும் விஐபி மரப்பின்படி மாநில அரசு அனுமதி அளிக்கவில்லை. எனவே விஐபிகள் யாரும் குறிப்பிட்ட 6 நாட்களில் வரவேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளோம். பக்தர்கள் நீராடக்கூடிய முக்கியமான புனித தினங்களை தவிர்த்து பிற நாட்களில் அவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.

ஆண்கள், பெண்கள், முதியோர், குழந்தைகள், சன்யாசிகள், மடாலயங்களின் தலைவர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கடவுளின் அருளை பெருவதற்காக புனிதநீராடி சடங்குகளை மேற்கொள்கின்றனர். மகா கும்பமேளா பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தொடர்ந்து விழிப்புணர்வுடன் பணியாற்றி வருகின்றனர். கூட்டத்தை மேலாண்மை செய்வது, சுகாதாரம், பொதுமக்கள் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது,"என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.