தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 64 வயது முதியவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை! - Chennai court - CHENNAI COURT

Sexual harassment: 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 64 வயது முதியவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 26, 2024, 10:20 PM IST

சென்னை: சென்னையைச் சேர்ந்தவர் 64 வயதான நபர், 2019 ஜனவரியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு குழந்தைகளுக்கான பாலியல் தொல்லை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி எம்.ராஜலட்சுமி விசாரிக்கப்பட்டு வந்தது. காவல்துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் எஸ்.அனிதா ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி,' “குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், குற்றம் சாட்டப்பட்ட 64 வயது நபருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ஐந்து ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டு நிதியத்தில் இருந்து அரசாங்கம் ஏழு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்” என தீர்ப்பளித்தார்.

இதையும் படிங்க:கரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அதிக நிதி செலவழித்த தமிழ்நாடு அரசு.. ஆர்டிஐ மூலம் வெளியான அதிர்ச்சி தகவல்! - TN Govt Sent Migrant Workers

ABOUT THE AUTHOR

...view details