தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காதல் கணவன் ஏமாற்றியதால் மனைவி தற்கொலை.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம் - a women attempt suicide - A WOMEN ATTEMPT SUICIDE

சென்னையில் கணவன் - மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை செய்து கொண்ட பெண், காசிமேடு காவல் நிலையம்
தற்கொலை செய்து கொண்ட பெண், காசிமேடு காவல் நிலையம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 3, 2024, 5:09 PM IST

சென்னை : சென்னை தண்டையார்பேட்டை முத்தமிழ் நகர் பகுதியில் வசித்து வருபவர் நவீனா(30). இவர் அதே பகுதியைச் சேர்ந்த நம்பிராஜன் என்பவரை காதலித்து கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் ஆறு வயதில் ஒரு மகன் இருக்கிறார்.

இந்நிலையில், நம்பிராஜன் புரசைவாக்கம் பகுதியில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். இவருக்கும், ஐரின் என்ற பெண்ணுக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தொடர்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இது இவருடைய மனைவி நவீனாவுக்கு தெரியவந்தால், கணவன் - மனைவிக்கிடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரையும் நவீனாவின் குடும்பத்தினர் சமாதானம் செய்து வைத்துள்ளனர்.

இதையும் படிங்க :எட்டு நாட்களாக ஆழ்கடலில் தத்தளித்த கப்பல்.. உயிர் தப்பிய மீனவர்கள் ஆட்சியரிடம் கண்ணீர் கோரிக்கை!

இந்நிலையில், இன்று(அக் 3) காலை நவீனா தற்கொலை செய்து கொண்டது நம்பிராஜனுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பின்னர் நவீனாவை மீட்ட நம்பிராஜன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். அங்கு நவீனாவை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் செல்லுங்கள் எனக் கூறியதால், அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

தற்கொலையை கைவிடுக (Credits - ETV Bharat Tamil Nadu)

அப்போது அங்குள்ள அரசு மருத்துவர்கள் நவீனாவை பரிசோதித்த போது, அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டார் என தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து காசிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details