தஞ்சாவூர்:மாற்றுக்கட்சியினர் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் தாராசுரம் பிராபாகரன் முன்னிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் விழா நேற்று, வெள்ளிக்கிழமை (நவம்பர் 22) கும்பகோணம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் ஏராளமான பெண்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி புதிய உறுப்பினர்களாக, ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட பொறுப்பாளர் விஜய் சரவணன் முன்னிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களாக தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். இவர்களை பொறுப்பாளர் விஜய் சரவணன், தவெக சால்வை அணிவித்து வரவேற்றுள்ளார்.
இதையும் படிங்க:சென்னை - செங்கல்பட்டு ரயில்கள் ரத்து: கூடுதல் பேருந்துகள் இயக்கம் - போக்குவரத்துக் கழகம்!