சென்னை:சென்னை, சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வாலிபால் வேர்ல்ட் பீச் ப்ரோ டூர் (volleyball world beach pro tour) தொடங்க உள்ளது. மெரினா கடற்கரை விளையாட்டு கிளப் சார்பாக நடைபெறும் இந்த போட்டிகள் குறித்து மெரினா கடற்கரை விளையாட்டு கிளப்-இன் தலைவர் ரவிகாந்த் ரெட்டி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "கடந்த 2010ம் ஆண்டுக்கு பிறகு சென்னையில் வாலிபால் வேர்ல்ட் பீச் ப்ரோ டூர் போட்டிகள் நடைபெற உள்ளது. இது மிகப்பெரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. சர்வதேச கூட்டமைப்பிடம் முறையாக அனுமதி வாங்கி தான் இந்த போட்டிகள் நடைபெற உள்ளது.
4 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் மொத்தமாக 150 வீரார்கள் பங்கேற்க உள்ளனர். குறிப்பாக, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வீரார்கள் கூட இந்த போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். இந்த நிகழ்வானது ஈசிஆரில் உள்ள இண்டர் கான்டினென்டல் என்ற தனியார் ஹோட்டலுக்கு பின்புறம் உள்ள கடற்கரையில் நடைபெற இருக்கிறது.
இந்த போட்டியில் 42 நாடுகளில் இருந்து விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்கின்றனர். முதல் 24 தரவரிசை அணிகள் இந்த போட்டிகளில் பங்கேற்க உள்ளது. 2,000 பார்வையாளர்கள் இருக்கைகளுடன் அமர்ந்து பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. Eurosport சேனல் போட்டி நாட்களில் தினமும் மூன்று மணி நேரம் மாலை 4 - 7 வரை நேரடி ஒளிபரப்பு செய்ய ஒப்புக் கொண்டுள்ளது.