ETV Bharat / state

மூன்றரை கிலோ தங்க நகைகளை அணிந்து அண்ணாமலையாரை வழிபட்ட தொழிலதிபர்! - BUSINESSMAN SAMBASIVA RAO

விஜயவாடாவைச் சேர்ந்த தொழிலதிபர் மூன்றரை கிலோ தங்க நகைகள் அணிந்து திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

மூன்றரை கிலோ தங்க நகைகளை அணிந்து அண்ணாமலையாரை வழிபட்ட தொழிலதிபர் சாம்பசிவ ராவ்
மூன்றரை கிலோ தங்க நகைகளை அணிந்து அண்ணாமலையாரை வழிபட்ட தொழிலதிபர் சாம்பசிவ ராவ் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 20, 2025, 11:11 PM IST

திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலில் விஜயவாடாவைச் சேர்ந்த தொழிலதிபர் சாம்பசிவ ராவ் மூன்றரை கிலோ எடை கொண்ட தங்க நகைகளை அணிந்து கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளார். இது குறித்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த கோயிலுக்கு திருவண்ணாமலை மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்வர்.

மூன்றரை கிலோ தங்க நகைகளை அணிந்து திருவண்ணாமலை கோயிலுக்கு வந்த பக்தர் (ETV Bharat Tamil Nadu)

இந்நிலையில் இன்று (ஜனவரி 20) திங்கட்கிழமை காலை அண்ணாமலையார் கோயிலுக்கு, ஆந்திரா மாநிலம் விஜயவாடா பகுதியை சேர்ந்த தொழிலதிபர் சாம்பசிவ ராவ் சாமி தரிசனம் செய்ய வருகை புரிந்துள்ளார். அப்போது அவர், சுமார் மூன்றரை கிலோ எடை கொண்ட தங்க செயின்கள், மோதிரம், பிரேஸ்லெட் அணிந்து சாமி தரிசனம் செய்துள்ளார்.

இதையும் படிங்க: நீலகிரியில் வெகுசிறப்பாக நடந்த ஹெத்தையம்மன் திருவிழா; படுகர் சமூக மக்கள் உற்சாகம்!

தொடர்ந்து, அவர் கோயிலை சுற்றி வந்து சாமி தரிசனம் செய்துள்ளார். இதில், தொழிலதிபர் சாம்பசிவ ராவிற்கு அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் சார்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பிரசாதங்கள் வழங்கியுள்ளனர்.

இவர் துபாயில் நட்சத்திர விடுதி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. மூன்றரை கிலோ தங்க நகைகள் அணிந்து கோயிலுக்கு வருகை தந்த தொழிலதிபரை கோயிலில் கூடியிருந்த பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.