தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இன்ஸ்டாகிராமில் சாதனை படைத்த விராட் கோலி! இந்தியாவிலேயே கோலி தான் முதல் ஆளாம்! என்ன தெரியுமா? - Kholi get 10 million like in insta

Virat Kholi Instagram 1 crore like: இன்ஸ்டாகிராமில் 1 கோடி லைக்குகளை பெற்ற முதல் இந்தியர் என்ற சிறப்பை இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி பெற்று உள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 25, 2024, 3:26 PM IST

Updated : Mar 7, 2024, 1:47 PM IST

டெல்லி :இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி - பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா தம்பதி கடந்த 15ஆம் தேதி தங்களது இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்தனர். தங்களது இரண்டாவது குழந்தை குறித்தும் அவருக்கு Akaay (அகாய்) என பெயர் வைத்து உள்ளது குறித்தும் விராட் கோலி கடந்த 10 நாட்களுக்கு முன் சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார்.

இதையடுத்து உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் விராட் கோலி வெளியிட்ட பதிவு 1 கோடி லைக்குகளை பெற்று சாதனை படைத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இன்ஸ்டாகிராமில் ஒரு கோடி லைக்குகளை குவித்த ஒரே இந்தியர் என்ற சிறப்பை விராட் கோலி பெற்றதாக கூறப்பட்டு உள்ளது.

இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி இன்ஸ்டாகிராம் மட்டும் ஏறத்தாழ 22 கோடியே 60 லட்சம் பாலோயர்ஸ்களை கொண்டு உள்ளார். கர்ப்பிணி மனைவியை உடன் இருந்து கவனித்து கொள்வதற்காகவே இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகினார்.

அண்மையில் விராட் கோலி இங்கிலாந்து தொடரில் இருந்து விலகியது சந்தேகத்தை கிளப்பிய நிலையில், அவர் விரைவில் அப்பா ஆக உள்ளதாக தென் ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் ஆன்லைன் கலந்துரையாடல் நிகழ்வில் தெரிவித்து கோலியின் ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தார்.

இதையும் படிங்க :ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து முகமது ஷமி விலகல்? - என்ன காரணம்?

Last Updated : Mar 7, 2024, 1:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details