சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர் தொடர் நடைபெற்று வருகிறது.
நேற்று (பிப்.5) நடைப்பெற்ற போட்டியில் இந்திய இரட்டையர் அணியின் இரண்டாம் நிலை வீரர்களான ஜீவன் நெடுஞ்செழியன் - விஜய் சுந்தர் பிரசாந்த் மற்றும் நடப்பு சாம்பியன்களான ராம்குமார் ராமநாதன் - சாகேத் மைனேனி ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறினர்.
கடந்த செப்டம்பரில் சீனாவில் நடைப்பெற்ற ஏடிபி ஹாங்சோ ஓபனை வென்ற நெடுஞ்செழியன் - பிரசாந்த் மற்றொரு இந்திய அணியான சிராக் துஹான் - தேவ் ஜாவியா ஜோடியை 6-3, 3-6, 13-11 என்ற கணக்கில் வெற்றி பெற்றனர்.
இதையும் படிங்க: IND vs ENG 1st ODI: இன்னும் 5 விக்கெட்டுகள்.. வரலாற்று சாதனையை படைப்பாரா முகமது ஷமி?
மற்றொரு ஆட்டத்தின் இரட்டையர் பிரிவில் மூன்றாவது இடத்தில் உள்ள ராமநாதன் - மைனேனி மற்றும் கிம்மர் கோப்பேஜன்ஸ் - எர்கி கிர்கின் ஜோடியை 6-3, 6-1 என்ற செட்டில் வெற்றி பெற்றனர்.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஒற்றையர் பிரிவில், ஸ்வீடனின் எலியாஸ் ய்மர் இங்கிலாந்தின் ஜே கிளார்க் ஆகியோர் மோதினர். இரண்டு மணி நேரம் நீடித்த இந்த போட்டியில் 7-5, 7-6 என்ற கணக்கில் எலியாஸ் ய்மர் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு ஒற்றையர் போட்டியில் ஜப்பானின் ரியோ நோகுச்சியும், முன்னாள் விம்பிள்டன் ரன்னர்-அப் மேட்டியோ பெரெட்டினியின் தம்பியான இத்தாலியின் ஜாகோபோ பெரெட்டினியை 7-5, 6-3 என்ற கணக்கில் வீழ்த்தினார்.