ETV Bharat / state

"ஆட்சியில் பங்கு வேண்டாம், அதிக சலுகைகள் வேண்டும்" - விக்ரமராஜா! - VIKRAMARAJA

2026 ஆம் ஆண்டு யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை முடிவு செய்யும் மாநாடாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநாடு அமையும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 6, 2025, 6:17 PM IST

தேனி: ஆன்லைன் வர்த்தகத்தில் இருந்து வணிகர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் சிறப்பு பாதுகாப்பு சட்டத்தை உருவாக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 42-வது மாநில மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு, வணிகர்களின் ஆலோசனை கூட்டம் தேனியில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று (பிப்ரவரி 06) நடைபெற்றது. இதில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா கலந்து கொண்டு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோரிடம் கலந்துரையாடினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து விக்ரமராஜா பேசியதாவது, “தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 42 வது மாநில மாநாடு செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற உள்ளது. அதற்கான ஆலோசனை கூட்டம் இன்று தேனியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 7 ஆயிரம் வணிகர்கள் பங்கேற்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா பேட்டி (ETV Bharat Tamil Nadu)

வணிகர்களின் பிரச்சினைகள் மற்றும் வாடகை கட்டடங்களுக்கு வரி, தொழில் வரி உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோருக்கு அழைப்பு விடுக்க உள்ளோம்.

இதையும் படிங்க: தூத்துக்குடிக்கு கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்...4 பேர் கைது!

இந்த மாநாடு 2026 ஆம் ஆண்டு யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை தீர்மானிக்கும் மாநாடாக அமையும். கார்ப்பரேட் கம்பெனிகளின் ஆன்லைன் வர்த்தகத்தில் இருந்து வணிகர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் சிறப்பு பாதுகாப்பு சட்டத்தை உருவாக்க வேண்டும். பல்வேறு அரசியல் கட்சியினர் எங்களுடன் கூட்டணி குறித்து அணுகி வருகிறார்கள்.

புதிதாக கட்சி தொடங்குபவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். நாங்கள் அரசியல் அமைப்பு இல்லை, அரசு சார்ந்த அமைப்பு. எனவே, ஆட்சியில் பங்கு வேண்டாம் கூட்டணியில் இடம் வேண்டாம், அதிக சலுகைகள் வேண்டும்.

குட்கா, புகையிலை நாடு முழுவதும் உள்ள பிரச்சினை. இதை ஒட்டுமொத்தமாக தடை செய்தால் மட்டுமே ஒழிக்க முடியும். புகையிலை உற்பத்தி தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. அதனை வரி செலுத்தி வாங்கி விற்பனை செய்ற வியாபாரிகள் மீது அரசு வழக்கு பதிவு செய்கிறது. உற்பத்தி செய்ய அனுமதி கொடுக்கும் அரசு அதை விற்பனை செய்வது குற்றம்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.