தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

அரியானா தேர்தலில் வினேஷ் போகத் வெற்றி! முதல்முறையாக எம்எல்ஏ ஆனார்!

Vinesh Phogat wons haryana Election: அரியானா சட்டப் பேரவை தேர்தலில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி பெற்றார்.

Etv Bharat
Vinesh Phogat (X/@BajrangPunia)

By ETV Bharat Sports Team

Published : Oct 8, 2024, 12:57 PM IST

சண்டிகர்:ஜம்மு காஷ்மீர் மற்றும் அரியானாவில் நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அரியானாவில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் கடந்த 5ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (அக்.8) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

இதில் ஜிந்து மாவட்டத்தில் உள்ள ஜூலானா தொகுதியில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் போட்டியிட்டார். காலை முதலே வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்த நிலையில் வினேஷ் போகத் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் இந்திய விமானப் படை கமாண்டரும் பாஜக வேட்பாளருமான யோகேஷ் குமார் தோல்வியை தழுவினார்.

வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் முன்னிலை வகித்த வினேஷ் போகத், இடையிடையே பின் தங்கினார். இருப்பினும், 8வது சுற்றில் 60 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்று முன்னிலை வகித்தார். இந்நிலையில் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சக மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியா, வினேஷ் போகத்தின் வெற்றி குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:சின்ன சேஞ்ச்.. எகிறும் விராட் கோலியின் சம்பளம்! என்ன காரணம்?

ABOUT THE AUTHOR

...view details