தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

வினேஷ் போகத்துக்கு வெள்ளிப் பதக்கம்? இன்று தீர்ப்பு வெளியாகிறது! - Vinesh Phogat - VINESH PHOGAT

இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெள்ளிப் பதக்கம் கோரி தாக்கல் செய்த மனுவில் இன்று மாலை 6 மணிக்கு சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

Etv Bharat
Vinesh Phogat (AP)

By ETV Bharat Sports Team

Published : Aug 11, 2024, 6:35 AM IST

பிரான்ஸ்: பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் மகளிருக்கான 50 கிலோ கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார். ஆனால், போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற எடை பரிசோதனையில் அவர், 100 கிராம் அதிகமாக இருந்தார். இதனால் வினேஷ் போகத்தை தகுதி நீக்கம் செய்து பாரிஸ் ஒலிம்பிக் போட்டி அமைப்பாளர்கள் உத்தரவிட்டனர்.

இதனால் வினேஷ் போகத்தின் பதக்க கனவு நொறுங்கியது. அவர், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தால் குறைந்த பட்சம் வெள்ளிப் பதக்கம் ஆவது கைப்பற்றி இருப்பார். இந்நிலையில், தனது தக்தி நீக்கத்தை எதிர்த்து சர்வதேச விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் முறையிட்டு இருந்தார்.

வினேஷ் போகத்தின் மனுவை ஏற்றுக் கொள்ள நீதிமன்றம் மறுப்பு தெரிவித்த நிலையில், தனக்கு வெள்ளிப் பதக்கம் வேண்டுன் என முறையிட்டார். இந்த மனுவை விசாரணைக்கு நடுவர் மன்றம் ஏற்றுக்கொண்டது. இதைத் தொடர்ந்து வினேஷ் போகத் தரப்பில் வாதாடுவதற்காக முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலான ஹரிஷ் சால்வே மற்றும் விதுஷ்பத் சிங்கானியா ஆகியோரை இந்திய ஒலிம்பிக் சங்கம் நியமித்துள்ளது.

இதற்கிடையே நடுவர்மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு மணி நேரத்துக்குள் தகுதி நீக்கம் பற்றிய முடிவை அறிவிப்பது சாத்தியமில்லை. அனைவரிடமும் விசாரணை நடத்த வேண்டும். வினேஷ் போகத் மேல்முறையீட்டில் அனைத்து தரப்பிடமும் விசாரணை நடத்தப்படும். டாக்டர் அன்னபெல் பென்னட் என்ற நடுவர் விசாரணை நடத்துவார் என கூறப்பட்டது.

விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று (ஆக.10) இரவு 9.30 மணியளவில் தீர்ப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது இந்த தீர்ப்பு இன்று (ஆக.11) ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக விளையாட்டு நடுவர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஒலிம்பிக் போட்டி முடியும் முன்னர் அதாவது இன்று மாலை 6 மணி அளவில் தீர்ப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க:வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு சவால் விட்ட சாய்னா நேவால்! - Saina Nehwal about bumrah

ABOUT THE AUTHOR

...view details