தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஏழு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஹாக்கி இந்தியா லீக்; ரூர்கேலாவில் டிசம்பர் 28 ஆம் தேதி துவங்குகிறது..! - HOCKEY INDIA LEAGUE

ஏழு ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஹாக்கி இந்தியா லீக் (HIL) தொடங்கப்படுவதாக இந்திய ஹாக்கி அணியின் பொருளாளர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு ட்ராகன் ஹாக்கி அணி
தமிழ்நாடு ட்ராகன் ஹாக்கி அணி (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 5 hours ago

சென்னை: சென்னையில் ஹாக்கி இந்தியா லீக் தொடர் குறித்தும், தமிழ்நாடு ட்ராகன் ஹாக்கி அணி அறிமுக நிகழ்ச்சியும் நடைப்பெற்றது. நிகழ்ச்சி குறித்து பேசிய இந்திய ஹாக்கி அணியின் பொருளாளரும், தமிழ்நாடு ஹாக்கி அணியின் தலைவருமான சேகர் ஜே மனோகரன், '' இந்த ஆண்டு நடைப்பெறும் ஹாக்கி இந்தியா லீக் தொடரில் 8 ஆண்கள் அணிகளையும், முதல் முறையாக 6 அணிகளைக் கொண்ட பெண்கள் அணியும் இந்தத் தொடரில் பங்கேற்க உள்ளனர்.

இதில் பெண்களுக்கான போட்டிகள், ஆண்களுக்கான போட்டிகள் தனித்தனியே நடைப்பெறாமல் அனைத்து போட்டிகளுடன் இணைந்து நடத்தப்படுவதால், ஆண் மற்றும் பெண் திறமைகளை ஊக்குவிக்க உதவும் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசியவர், '' தொடரின் லீக் போட்டிகள் டிசம்பர் 28 ரூர்கேலாவில் தொடங்கி, ரூர்கேலாவின் பிர்சா முண்டா ஹாக்கி ஸ்டேடியம் மற்றும் ராஞ்சியின் மராங் கோம் கே ஜைபால் சிங் அஸ்ட்ரோடர்ஃப் ஸ்டேடியம் ஆகிய இரண்டு மைதானங்களில் நடைபெறுகிறது. பெண்கள் லீக்கிற்கான இறுதிப்போட்டி ஜனவரி 26 தேதியும், ஆண்களுக்கான இறுதிப்போட்டி பிப்ரவரி 1 தேதியும் நடைபெறுகிறது.

ஹாக்கி இந்தியா லீக் தொடரில் சென்னை, ஒடிசா, பஞ்சாப் மற்றும் பிற பகுதிகளிலிருந்தும் அணிகள் பங்கு பெறுகிறது. ஒவ்வொரு அணியிலும் உள்ளூர் வீரர்கள் மற்றும் சர்வதேச போட்டியாளர்களும் பங்கேற்கின்றனர்.

ஹாக்கி இந்தியா லீக் மீண்டும் நடத்தப்படுவதின் முக்கிய நோக்கமே இந்திய ஹாக்கியின் எதிர்காலத்தை உருவாக்குவதற்கான ஒரு தொடக்கமாக இருக்கும். கடந்த 2024 அக்டோபர் 13 முதல் 15 வரை டெல்லியில் நடைபெற்ற ஹாக்கி இந்தியா லீக் (HIL) 2024-25 போட்டிகளுக்கான ஏலத்தில் 350-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.

ஜூனியர்களையும் உள்ளடக்கிய 16 இந்திய வீரர்கள், 8 சர்வதேச வீரர்கள் என ஒவ்வொரு அணியும் தங்களுடைய 24 பேர் கொண்ட தேர்வு செய்தனர். குறிப்பாக இந்த ஏலத்தின்போது, தமிழ்நாடு டிராகன்ஸ் அணியும் தங்களது வீரர்களை தேர்வு செய்தனர். ஹாக்கி இந்தியா லீக் தொடர் நடத்தப்படுவதால் வருங்காலத்தில் இளம் வீரர்களை உருவாக்க உதவியாக இருக்கும் என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு அணியின் உரிமையாளர் ஜோஸ் சார்லஸ் மார்டின், தமிழ்நாடு அணியின் முதன்மை செயல் அதிகாரி உதய் சின் வால் ஒலிம்பியன் அமித் ரோஹிதாஸ், உதவி பயிற்சியாளர் சார்லஸ் டிக்சன், ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details