ETV Bharat / bharat

"சாதி ரீதியிலான பட்டியலினத்தவர்களுக்கு எதிரான பாஜகவின் மனநிலை வெளிப்பட்டுள்ளது" -அமித்ஷாவின் விமர்சனம் குறித்து மம்தா பதிவு! - REMARK ON AMBEDKAR

லட்சகணக்கான மக்கள் அம்பேத்கரை வழிகாட்டியாக, முன்னுதாரணமாக கொண்டுள்ள நிலையில் அவரை அவமதிக்கும் வகையில் பாஜகவினர் இழிவுபடுத்தியுள்ளனர் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி (Image credits-PTI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

கொல்கத்தா: லட்சகணக்கான மக்கள் அம்பேத்கரை வழிகாட்டியாக, முன்னுதாரணமாக கொண்டுள்ள நிலையில் அவரை அவமதிக்கும் வகையில் பாஜகவினர் இழிவுபடுத்தியுள்ளனர் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் 75 ஆவது ஆண்டை முன்னிட்டு மாநிலங்களவையில் நேற்று இரண்டாவது நாளாக அரசியலமைப்பு சட்டம் குறித்த விவாதம் நடைபெற்றது. இதற்கு பதில் அளித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "அம்பேத்கர், அம்பேத்கர் என்று கூறுவது ஒரு பாணியாக மாறி விட்டது. கடவுளின் பெயரை அவர்கள்(எதிர்க்கட்சியினர்) பல முறை கூறினால், அவர்களுக்கு சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்,"என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து தமது எக்ஸ் பதிவில் கருத்துத் தெரிவித்துள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி,"முகமூடி வெளிப்பட்டு விட்டது. அரசியலமைப்பு சட்டத்தின் புகழ்பெற்ற 75 ஆண்டுகள் என்ற நாடாளுமன்ற விவாதத்தில் இது எதிரொலித்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த தருணத்தை ஜனநாயகத்தின் கோவிலாக திகழும் பாபாசாகேப் அம்பேத்கரை இழிவுபடுத்தி அவரை களங்கபபடுவதற்காக பயன்படுத்திக் கொண்டார். இது பாஜகவின் சாதிரீதியிலான , பட்டியலினத்தவர்களுக்கு எதிரான மன நிலையைக் குறிக்கிறது.

இதையும் படிங்க: "அம்பேத்கரை அவமதித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா மன்னிப்புக் கேட்க வேண்டும்"-எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் வலியுறுத்தல்!

மக்களவையில் 240 தொகுதிகளை மட்டுமே பெற்றிருக்கும் நிலையில் கூட இவ்வாறு நடந்து கொண்டிருக்கும் பாஜக அவர்களின் கனவு இலக்கான 400 தொகுதிகளில் வென்றிருந்தால், அவர்கள் எவ்வளவு சேதத்தை விளைவித்திருப்பார்கள் என்பதை கற்பனை செய்து பாருங்கள். அம்பேத்கரின் பங்களிப்புகளை முழுவதுமாக அழித்து விட்டு அவர்கள் வரலாற்றை திருத்தி எழுதுகிறார்கள்.

பாபாசாகேப் அம்பேத்கரை வழிகாட்டியாக, முன்னோடியாக பார்க்கும் லட்சகணக்கான மக்களை உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் விமர்சனம் அவமதித்து விட்டது. வெறுப்பு, பாகுபாடு ஆகியவற்றை தன்னகத்தே கொண்டிருக்கும் கட்சியிடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்? பாபாசாகேப் அம்பேத்கர் அரசியலமைப்பு சட்டத்தின் தந்தையாவார். அவரின் இந்த ஆவேசமான கருத்து அம்பேத்கர் மீதான வெளிப்படையான தாக்குதல் மட்டுமின்றி, இந்தியாவின் அனைத்து சாதிகள், சமயங்கள், இனங்கள் மற்றும் மதங்களின் வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட இந்தியாவாக அடையாளப்படுத்தப்பட்ட அரசியலமைப்பு சட்டத்தின் வரைவு குழுவின் அனைத்து உறுப்பினர்களின் மீதான தாக்குதலும் ஆகும், எனவே தமது பேச்சுக்கு நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும்,"என்று கூறியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.