ETV Bharat / entertainment

"ரத்தம், பவுடர் எல்லாம் வராம பாத்துக்கோங்க"... லோகேஷ் கனகராஜின் ’மிஸ்டர் பாரத்’ பட ப்ரோமோ வெளியீடு! - LOKESH KANAGARAJ G SQUAD

Lokesh kanagaraj G Squad Movie promo: லோகேஷ் கனகராஜ் தயாரித்துள்ள ’மிஸ்டர் பாரத்’ படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

மிஸ்டர் பாரத் பட போஸ்டர்
மிஸ்டர் பாரத் பட போஸ்டர் (Credits - @GSquadOffl X account)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Dec 18, 2024, 6:30 PM IST

சென்னை: லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் ’மிஸ்டர் பாரத்’ திரைப்படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ’மாநகரம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். மாநகரம் திரைப்படம் மூலம் கோலிவுட்டையே திரும்பி பார்க்க வைத்த லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக இயக்கிய ’கைதி’ திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.

இதனைத்தொடர்ந்து நடிகர் விஜய்யை வைத்து ’மாஸ்டர்’ படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் அந்தஸ்து பெற்றார். கமல்ஹாசனின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ’விக்ரம்’ திரைப்படம், வசூல் சாதனை படைத்தது. இதன் மூலம் லோகேஷ் கனகராஜ் எல்சியூ யுனிவர்ஸை உருவாக்கினார். இதனைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கிய ’லியோ’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், அதிக வசூலை பெற்று சாதனை படைத்தது.

தற்போது ரஜினிகாந்த், நாகார்ஜுனா உள்ளிட்ட பலர் நடித்து வரும் ’கூலி’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதனிடையே லோகேஷ் கனகராஜ் ’G squad’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். இந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ’benz’ திரைப்படத்தை தயாரிக்கவுள்ளார். இப்படம் எல்சியூ யுனிவர்சில் இடம்பெறுகிறது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜின் 'G squad' மற்றும் ஜகதீஷ் பழனிசாமியின் ’பேஷன் ஸ்டுடியோஸ்’ இணைந்து தயாரிக்கும் மிஸ்டர் பாரத் படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. காமெடி ஜானரில் உருவாகும் இப்படத்தில் ’Finally’ யூடியூப் சேனலை சேர்ந்த பாரத், சம்யுக்தா, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த ப்ரோமோ வீடியோவில் லோகேஷ் கனகராஜ் கடத்தல் கும்பலின் தலைவனாக தோன்றுகிறார்.

இதையும் படிங்க: ஏ.ஆர்.ரகுமான் இசையில் மனதை மயக்கும் Lavender nerame பாடல்; ’காதலிக்க நேரமில்லை’ இரண்டாவது சிங்கிள் வெளியீடு! - LAVENDER NERAMAE SONG

இந்த ப்ரோமோ வீடியோவில் காமெடி வசனங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ரத்தம் தெறிக்கும் காட்சிகளை கொண்ட படங்களை இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ், இந்த ப்ரோமோவில் "ரத்தம், பவுடர் எல்லாம் வராமல் பாத்துக்கோங்க" என்று கூறுவது சிரிப்பை ஏற்படுத்துகிறது. மிஸ்டர் பாரத் படத்தின் ப்ரோமோ வீடியோ நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் மிஸ்டர் பாரத் என்ற தலைப்பில் முன்னதாக ரஜினிகாந்த், சத்யராஜ் ஆகியோர் ஒரு படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.