ETV Bharat / state

விவாகரத்தான பெண்களுக்கும் குறி; மேட்ரிமோனியில் பழகிய இளம்பெண்ணை ஏமாற்றி உல்லாச வாழ்க்கை.. இளைஞர் கைது - MATRIMONY MARRIAGE CHEATING

மேட்ரிமோனி ஆப்பில் பழக்கமான இளம்பெண்ணை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்ட கோவை இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைதான லெனின் மோகன்
கைதான லெனின் மோகன் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 18, 2024, 5:36 PM IST

சென்னை: பூந்தமல்லியை அடுத்த கரையான்சாவடியை சேர்ந்த 28 வயதான இளம்பெண் ஒருவர் ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில், தனியார் திருமண தகவல் மையம் மூலம் தொடர்பு கொண்ட கோயம்புத்தூரை சேர்ந்த லெனின் மோகன் (34) என்பவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பழகி வந்த நிலையில், தன்னிடமிருந்து பணத்தை பெற்றுக் கொண்டு திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி வருவதாக புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் பேரில், மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் உத்தரவின் பேரில் இணைய வழி குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் அறிவுறுத்தலின்படி, பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக பண மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த கோயம்புத்தூரை சேர்ந்த லெனின் மோகன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: ரிவர்ஸ் எடுத்தபோது கடலுக்குள் விழுந்த கார்.. ஓட்டுநரை காணவில்லை! - தேடும் பணி தீவிரம்!

விசாரணையில், இவர் மதுபான விடுதிக்கு சென்று மது அருந்துவதற்கும், பல்வேறு பெண்களுடன் உல்லாசமாக இருப்பதற்கும் தனக்கு பணம் தேவைப்படும் போதெல்லாம், தனியார் திருமண தகவல் வலைதளத்தில் சென்று திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்கள் மற்றும் திருமணம் ஆகி கணவரை விவாகரத்து செய்துவிட்டு மறு திருமணம் செய்வதற்கு விண்ணப்பித்திருக்கும் பெண்களை குறி வைத்து அவர்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி திருமணம் செய்வதாக ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதையடுத்து அவரிடம் இருந்து இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், நீதி மன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இவர் எத்தனை பெண்களிடம் இதுபோல் மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்பது குறித்தும் இது குறித்து புகார்கள் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.